வரும் வாரத்தில் கூடவுள்ள இலங்கை நாடாளுமன்றம் : விவாதத்திற்கு வரும் முக்கிய சட்டமூலங்கள்!
மூன்று தேர்தல் திருத்தச் சட்டமூலங்கள் எதிர்வரும் நாடாளுமன்ற வாரத்தில் விவாதிக்கப்பட உள்ளன. உள்ளூராட்சி சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம், நாடாளுமன்றத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் மற்றும் மாகாண சபைத் தேர்தல்கள் திருத்தச் சட்டமூலம் ஆகியவையே இவ்வாறு விவாதத்திற்கு உட்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நவம்பர் மாதத்தின் முதல் நாடாளுமன்ற வாரம் நவம்பர் 7ஆம் திகதி முதல் 10ஆம் திகதஜ வரை நடைபெற உள்ளது. கடந்த ஒக்டோபர் 19ஆம் திகதி கூடிய நாடாளுமன்ற விவகாரக் குழுவில் அந்த வாரத்திற்கான நிகழ்ச்சி […]













