பிக்பாஸ் வீட்டில் பகிரங்கமாக கிஸ் அடித்துகொண்ட ஜோடி – வைரலாகும் வீடியோ

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் உருவான காதல் ஜோடிகள் ஏராளம். முதல் சீசனில் தொடங்கி தற்போது நடைபெற்று வரும் 7-வது சீசன் வரை காதலுக்கு பஞ்சமில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
அந்த அளவுக்கு ஒவ்வொரு சீசனிலும் ஒரு லவ் டிராக் ஓடுவதை காண முடிகிறது. முதல் சீசனில் ஓவியா – ஆரவ், இரண்டாவது சீசனில் யாஷிகா – மகத், மூன்றாவது சீசனில் கவின் – லாஸ்லியா, நான்காவது சீசனில் ஷிவானி – பாலாஜி, ஐந்தாவது சீசனில் அமீர் – பாவனி, ஆறாவது சீசனில் ஷிவின் – கதிரவன் என லிஸ்ட் நீண்டு கொண்டே செல்கிறது.
தற்போது நடைபெற்று வரும் ஏழாவது சீசன் காதல் ஜோடிகள் நிரம்பி வழிகிறது. இந்த சீசனில் இதுவரை மூன்று காதல் ஜோடிகள் தனித்தனியாக ரொமான்ஸ் செய்து வருகின்றனர்.
முதலில் மணி – ரவீனா, இவர்கள் இருவரும் வெளியில் இருக்கும்போதே நெருங்கி பழகி வந்தனர். தற்போது பிக்பாஸ் வீட்டுக்கு வந்த பின்னர் ஜோடியாகவே சுற்றி வருகின்றனர். இவர்களைப் பார்த்து இன்னும் இரண்டு ஜோடி உருவாகி உள்ளது.
அதில் ஒன்று பூர்ணிமா – சரவண விக்ரம், மற்றொன்று நிக்சன் – ஐஷு. முதல் இருவாரங்கள் மணி – ரவீனா தான் அதிகளவில் ரொமான்ஸ் செய்து சுற்றி வந்தனர். ஆனால் அடுத்த இரண்டு வாரங்களில் அவர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் நிக்சனும் ஐஷுவும் ரொமான்ஸ் செய்து வருகின்றனர்.
இவர்கள் இருவரும் மைக்கை கழட்டி போட்டு பேசுவதை பிக்பாஸ் பலமுறை கண்டித்தாலும், அதனையெல்லாம் அவர்கள் கண்டுகொள்வதில்லை.
இந்த ரொமான்ஸ் அடுத்தகட்டமாக கிஸ் வரை சென்று இருக்கிறது. நிக்சன் சுமால் பாஸ் வீட்டிலும், ஐஷு பிக்பாஸ் வீட்டிலும் இருப்பதால், இருவரும் கண்ணாடி அருகே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது ஐஷு காத்துவாக்குல ஒரு கிஸ் கொடுத்துள்ளார்.
இதைப்பார்த்த ரசிகர்கள் கண்ணாடி மட்டும் இல்லேனா என்ன ஆகிருக்கும் என்று கமெண்ட் செய்து வருகின்றனர். ஒரு சிலரோ இதென்ன புதுவித மருத்துவ முத்தமா இருக்கே என கிண்டலடித்து வருகின்றனர்.
Bigg Boss Tamil Season 7 #Aishu and #Nixen have a conversation after removing their microphones and ensuring that the cameras are no longer present.#BiggBossTamil #biggbosstamil7 #BBTamilSeason7 #VijayTelevision #BBT #KamalHaasan #BBTseason7 pic.twitter.com/PbkTE6AOzb
— Muhammed Faris (@acmfaris) October 28, 2023