இலங்கை

கிரிகெட் சபைக்கு நியமிக்கப்பட்ட இடைக்காலக்குழு : ஜனாதிபதி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

  • November 6, 2023
  • 0 Comments

விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் பதிவை இடைநிறுத்தியமை மற்றும் இடைக்கால குழுவொன்றை நியமிப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (06.11) மாலை அமைச்சரவை கூட்டத்தில் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறான குழுவொன்று நியமிக்கப்படும் என ஜனாதிபதி அறிந்திருக்கவில்லை என உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய இடைக்கால குழுவிற்கு நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிவிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவை தொடர்பு கொண்டு விசாரிக்க ஜனாதிபதி ரணில் […]

இலங்கை

இலங்கையில் நுண் கடன் நிறுவனங்களால் அசௌகரியங்களுக்கு உள்ளாகும் கிராம மக்கள்!

  • November 6, 2023
  • 0 Comments

இலங்கையில் சுமார் 11,000 நுண்கடன் நிறுவனங்கள் இயங்கி வருகின்ற போதிலும் 5 நிறுவனங்களே பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். பெரும்பாலும் கிராமப்புற குறைந்த வருமானம் பெறுபவர்களை கையாளும் இந்த நிறுவனங்களின் செல்வாக்கு காரணமாக சுமார் 30 லட்சம் பேர் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, இந்த நிறுவனங்களை பதிவு செய்வது கட்டாயமானது என்றும், நுண்நிதி நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதற்கு புதிய அதிகாரசபை ஸ்தாபிக்கப்படும் என்றும் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கு

காஸா பகுதியில் இராணுவ நகர்வுகளை துரிதப்படுத்திய இஸ்ரேல்!

  • November 6, 2023
  • 0 Comments

காஸா பகுதியில் இஸ்ரேலியப் படைகள் தமது நடவடிக்கைகளை அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தற்போது, ​​இஸ்ரேலிய இராணுவம் காசா நகரின் தெற்கு கடற்கரைக்கு தனது நடவடிக்கைகளை விரிவுபடுத்தியுள்ளது, மேலும் காசா பகுதி வடக்கு மற்றும் தெற்கு என பிரிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அந்தோனி பிளிங்கன் துருக்கிக்கு விஜயம் மேற்கொண்டார். ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் மனிதாபிமான போர் நிறுத்தத்திற்கு சம்மதிக்க வைப்பதே அவரது நோக்கம். ஆனால், […]

இலங்கை

கைது செய்யப்பட்ட 6 பல்கலைக்கழக மாணவர்களும் பிணையில் விடுவிப்பு

  • November 6, 2023
  • 0 Comments

மட்டக்களப்பு சித்தாண்டியில் மேச்சல் தரை பண்ணையாளர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சட்டவிரோத ஆர்ப்பாட்ட பொது போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட 6 மாணவர்களையும் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் அன்னவர் சதாத் ஒரு இலச்சம் ரூபா சரீரப் பிணையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (5) விடுவித்தார். மேச்சல் தரை பண்ணையாளர்களின் 52 வது நாளான இன்று தொடர் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து யாழ் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றினைந்து சித்தாண்டி […]

ஆசியா

பிலிப்பைன்ஸ் – லைவ் நிகழ்ச்சியின்போதே சுட்டுக்கொல்லப்பட்ட தொகுப்பாளர்…!

  • November 6, 2023
  • 0 Comments

பிலிப்பைன்ஸ் நாட்டில் எப்.எம்மில் லைவ் நிகழ்ச்சி நடத்திக்கொண்டிருந்த தொகுப்பாளர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. பிலிப்பைன்ஸ் மிசாமிஸ் ஆக்சிடென்டல் மாகாணத்தில் செயல்பட்டு வரும் கலம்பா கோல்டு எப்.எம்.மில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றியவர் ஜுவான் ஜுமலன் ( 57). கலம்பா நகரில் உள்ள வீட்டில் ஜுவான், லைவ் நிகழ்ச்சி ஒன்றை நடத்திக் கொண்டு இருந்துள்ளார். அப்போது அவரின் வீட்டில் திடீரென மர்ம நபர் ஒருவர் ஆயுதங்களுடன் புகுந்து துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். இந்த சம்பவத்தில் ஜுவான் படுகாயமடைந்து […]

இலங்கை

இலங்கை கிரிகெட்டுக்கு இடைக்கால குழு நியமனம்!

  • November 6, 2023
  • 0 Comments

விளையாட்டுத்துறை அமைச்சர்  ரொஷான் ரணசிங்கவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் இலங்கை கிரிக்கெட்டுக்கு இடைக்கால குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இதன்படி  7 பேர் கொண்ட குழு அமைச்சரால் நியமிக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக முன்னாள் கிரிக்கெட் அணித்தலைவர் அர்ஜுன ரணதுங்க நியமிக்கப்பட்டுள்ளார். அதேவேளை இலங்கை கிரிக்கெட்டின் தற்போதைய நிர்வாகத்தின் செயற்பாடுகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று (06.11) வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய இடைக்காலக் குழு அதன் பின்னர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை

ஜனநாயகத்திற்கு மதிப்பு தெரியாத நாட்டில் தமிழர்களுக்கு நீதி கிட்ட போவதில்லை- அருட்தந்தை மா.சத்திவேல்

  • November 6, 2023
  • 0 Comments

அகிம்சைக்கும், ஜனநாயகத்திற்கும் மதிப்பு தெரியாத நாட்டில் தமிழர்களுக்கு நீதி கிட்ட போவதில்லை என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.அவரால் இன்று (06) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களின் அகிம்சை வழியிலான நீதிக்கான போராட்டத்திற்கு ஜனாதிபதி தலையிட்டு இறுதியாக நடந்த கலந்துரையாடலின் பின்பும் தீர்வு கிட்டாத நிலையில் பண்ணையாளர்கள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இதற்கு […]

பொழுதுபோக்கு

வீடியோவுடன் வெளியாகும் KH 234 படத்தின் பெயர்… வெறித்தனமாக வெயிட் செய்யும் ரசிகர்கள்

  • November 6, 2023
  • 0 Comments

கமல் ஹாசனும், மணிரத்னமும் இணையும் KH 234 படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியிருக்கிறது. விக்ரம் படத்தின் மூலம் கோலிவுட்டில் ரீ என்ட்ரி கொடுத்த கமல் ஹாசன் அந்த வெற்றியின் உற்சாகத்தால் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகிவருகிறார். அதன்படி அடுத்ததாக அவரது நடிப்பில் இந்தியன் 2, ஹெச்.வினோத் இயக்கத்தில் ஒரு படம், மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படம் வெளியாகவிருக்கிறது. கமல் ஹாசனும், மணிரத்னமும் ஏற்கனவே இணைந்து நாயகன் படத்தை கொடுத்தனர். அந்தப் படம் இந்தியாவிலேயே தலைசிறந்த படமாக கொண்டாடப்படுகிறது. இதையடுத்து […]

செய்தி

தென்கொரியாவில் பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ள மூட்டைப் பூச்சிகள்!

  • November 6, 2023
  • 0 Comments

தென்கொரியாவில் மத்திய, உள்ளூர் அரசாங்க நிறுவனங்கள் மூட்டைப் பூச்சிகளை ஒழிக்கும் முயற்சிகளை மேற்கொள்கின்ற நிலையில் நாடு முழுவதும் மூட்டைப் பூச்சிகளின் தொல்லை குறித்து முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதத்தில் Keimyung பல்கலைக்கழகத்தின் தங்கும் விடுதியில் ஒரு மாணவரை மூட்டைப் பூச்சி கடித்ததாகத் தெரிவிக்கப்பட்டது. அக்டோபர் மாதத்தில் மூட்டைப் பூச்சிகளும் அதன் குட்டிகளும் நீராவிக் குளியலில் கண்டுபிடிக்கப்பட்டது. பூசியோன், சோல், பூசான் நகரங்களிலும் மூட்டைப் பூச்சிகளின் தொல்லை குறித்து புகார்கள் கிடைத்துள்ளன. மூட்டைப் பூச்சிகள் பெருகுவதைத் தடுக்கும் வழிமுறைகளை […]

பொழுதுபோக்கு

எடுத்தது 5 படம் தான்.. ஆனா சொத்து மதிப்பு எவ்வளவு தெரிமா?

  • November 6, 2023
  • 0 Comments

மொத்தம் ஐந்து படங்கள் மட்டுமே இயக்கியிருக்கும் லோகேஷ் கனகராஜின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. தமிழ் சினிமாவின் மோஸ்ட் வாண்டட் இயக்குநர் இப்போதைக்கு லோகேஷ் கனகராஜ்தான். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என அவர் இயக்கிய முதல் நான்கு படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டாகின. அவரது இயக்கத்தில் கடைசியாக லியோ திரைப்படம் வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியான லியோ விஜய் ரசிகர்களை திருப்திப்படுத்தினாலும் பொதுவான ரசிகர்களை திருப்திப்படுத்த தவறியது. லியோ திரைப்படத்தை முடித்திருக்கும் லோகேஷ் கனகராஜ் […]