இலங்கை

கிரிகெட் சபைக்கு நியமிக்கப்பட்ட இடைக்காலக்குழு : ஜனாதிபதி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் பதிவை இடைநிறுத்தியமை மற்றும் இடைக்கால குழுவொன்றை நியமிப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (06.11) மாலை அமைச்சரவை கூட்டத்தில் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான குழுவொன்று நியமிக்கப்படும் என ஜனாதிபதி அறிந்திருக்கவில்லை என உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய இடைக்கால குழுவிற்கு நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிவிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவை தொடர்பு கொண்டு விசாரிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முயற்சித்ததாகவும், அது இதுவரை வெற்றியளிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்