ஐரோப்பா

பிரித்தானிய ஆய்வில் அதிர்ச்சி தகவல் – பொது மக்களுக்கு எச்சரிக்கை

  • November 6, 2023
  • 0 Comments

பிரித்தானியாவில் நடந்த ஆராய்ச்சில் இறைச்சியை அதிகளவில் உண்பதால் சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் உள்ளதென கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய நிபுணர்கள் இது தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இறைச்சி சாப்பிடும் போக்கை 7 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை குறைக்க எச்சரிக்கை படங்கள் உதவக்கூடும் என்று Appetite சஞ்சிகையில் வெளியான ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன. Durham பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் சுமார் 1,000 பேர் பங்கேற்றனர். இந்த ஆய்வில் இறைச்சி, மீன் மற்றும் சைவ உணவு […]

ஐரோப்பா

பிரான்ஸில் யூத மத பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி

  • November 6, 2023
  • 0 Comments

பிரான்ஸில் யூத மதம் மீதான எதிர்ப்புகள் வலுத்துள்ள நிலையில் Lyon (Rhône) நகரில் யூத பெண் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளார். லியோனின் 3 ஆம் வட்டாரத்தில் வசிக்கும் பெண் ஒருவரை நபர் ஒருவர் கத்தியால் தாக்கியுள்ளார். அடி வயிற்றுப்பகுதியில் கத்தியால் குத்தப்பட்டதில் அவர் படுகாயமடைந்து மருருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதல் நடத்திய நபர் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளார். அவரை பொலிஸார் தேடி வருகின்றனர். இந்த செயல் யூத-விரோத நோக்கத்தால் தூண்டப்பட்டிருக்கலாம் என லியோன் அரச வழக்கறிஞர் […]

ஐரோப்பா

ஜெர்மனியில் 21 வயதான பெண்ணுக்கு 20 வயது இளைஞன் செய்த கொடூரம்

  • November 6, 2023
  • 0 Comments

ஜெர்மனியில் இடம்பெற்ற கத்தி குத்து தாக்குதலில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஜெர்மனியில் பீலஃபெலட் நகரத்தில் கோல்ட் ஸ்டக் பேக்கர் என்ற பிரதேசத்தில் கடந்த வாரம் 20 வயதுடைய இளைஞர் ஒருவர் 21 வயது பெண் ஒருவரை கத்தியால் குத்தியுள்ளார். இந்நிலையில் 21 வயதுடைய பெண் உயிரிழந்ந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்இருவரும் உயிர் காப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டு வந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளார். இவர்கள் இரண்டு பேரும் இரவு களியாட்ட நிகழ்வுக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில்இருவருக்குமிடையே வாக்குவாதம் […]

இலங்கை

இலங்கையில் அதிர்ச்சி – பெற்றோர் மீதான கோபத்தில் இளைஞன் செய்த செயல்

  • November 6, 2023
  • 0 Comments

இராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹரஸ்பெத்த பகுதியில் இளைஞர் ஒருவரின் சடலத்தை இராகலை பொலிஸார் மீட்டுள்ளனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் இராகலை ஹரஸ்பெத்த பகுதியில் வசித்த மலிந்த தில்ஷான் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் தெரிவித்தனர். சடலமாக மீட்கப்பட்ட மலிங்க தில்ஷான் தாய், தந்தையரை தாக்கி சண்டையிட்டு, எங்காவது சென்று உயிரை மாய்த்துகொள்ளதாக கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக பெற்றோர் தெரிவித்தனர். இதையடுத்து குறித்த இளைஞனின் பெற்றோர் இராகலை பொலிஸ் […]

உலகம் செய்தி

காசாவில் இருந்து 300க்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் வெளியேற்றம்

  • November 5, 2023
  • 0 Comments

இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்வதால் காசாவில் இருந்து 300க்கும் மேற்பட்ட அமெரிக்க குடிமக்கள் மற்றும் அமெரிக்காவில் வசிப்பவர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. வெள்ளை மாளிகையின் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜொனாதன் ஃபைனர் கூறுகையில், தற்போதைய நெருக்கடியில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தியதன் விளைவாக இந்த வெளியேற்றம் நடந்துள்ளது. வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வரும் போதிலும், காசாவில் அமெரிக்க குடிமக்கள் சிக்கியிருப்பதாக சந்தேகிக்கப்படுவதாகவும் அவர் கூறினார். ஒவ்வொரு அமெரிக்கரையும் பாதுகாப்பாக வைத்திருக்க அரசாங்கம் இந்த […]

உலகம் செய்தி

2024 ஆம் ஆண்டில் நடக்கப் போதுவது என்ன? பாபா வாங்காவின் அதிர்ச்சியூட்டும் கணிப்புகள்

  • November 5, 2023
  • 0 Comments

பால்கனின் நாஸ்ட்ராடாமஸ் என்று அழைக்கப்படும் பாபா வெங்கா, 9/11 தாக்குதல்கள் மற்றும் பிரெக்சிட் தொடர்பான கணிப்புகளைச் செய்ததாகக் கூறப்படுகிறது. இதனுடன் 2024-ம் ஆண்டுக்கான சில கணிப்புகளையும் அவர் கூறியுள்ளார். இதில் மிகப்பெரிய விஷயம் ரஷ்யாவைப் பற்றி சொல்லப்பட்டது தான். பாபா வெங்கா ஒரு தீர்க்கதரிசி. இவரின் உண்மையான பெயர் வாங்கெலியா பாண்டவ குஷரோவா. அவர் பல்கேரியாவைச் சேர்ந்த ஒருவர் ஆவார். அவர் 1911 ஆம் ஆண்டு பிறந்தார். மேலும் 12 வயதில் அவர் கண்பார்வையை இழந்தார். 5079 […]

இந்தியா செய்தி

காற்று மாசுபாட்டால் அலுவலக ஊழியர்களுக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்

  • November 5, 2023
  • 0 Comments

இந்தியா – டெல்லியில் காற்றின் தரக்குறியீடு (AQI) தொடர்ந்து நான்காவது நாளாக ‘கடுமையான’ நிலையில் உள்ளதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) தெரிவித்துள்ளது. டெல்லி மற்றும் அதனை அண்மித்த மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக நச்சுக்காற்றை சுவாசிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. டெல்லியில் வளிமாசடைவு முதன் முறையாக இந்த பருவத்தில் கடுமையான நிலையை அடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, வளிமாசடைவு காரணமாக டெல்லியில் உள்ள அனைத்து ஆரம்ப பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விடுமுறை […]

ஆசியா செய்தி

காஸாவில் தற்கொலை ட்ரோன்கள் மற்றும் ஆயுதங்களை கைப்பற்றிய இஸ்ரேலியப் படை

  • November 5, 2023
  • 0 Comments

காசாவில் சண்டைகள் தொடரும் நிலையில், இஸ்ரேல் பாதுகாப்புப் படை(IDF) வீரர்கள் தற்கொலை ட்ரோன்கள், ஆயுதங்கள், வெடிமருந்து ஆய்வகம் மற்றும் உளவுத்துறைப் பொருட்களை பீட் ஹனூனில் கைப்பற்றியதாக அறிவித்தனர். கைப்பற்றப்பட்ட ஆயுதங்களில் ஏகே-47 துப்பாக்கிகள், சப்மஷைன் துப்பாக்கிகள், தோட்டாக்கள், கையெறி குண்டுகள், வெடிக்கும் சாதனங்கள், தற்கொலை ட்ரோன்கள் மற்றும் ஆர்பிஜி ஏவுகணைகள் ஆகியவை அடங்கும். சில ஆயுதங்கள் அழிக்கப்பட்டதாகவும், சில ஆயுதங்கள் மேலதிக பரிசோதனைக்காக இஸ்ரேலுக்கு கொண்டு வரப்பட்டதாகவும் IDF கூறியது. இஸ்ரேலின் வடக்கு எல்லையில், லெபனானில் இருந்து […]

இலங்கை செய்தி

இஸ்ரேலில் உயிரிழந்த சுஜித் பண்டார!!! இழப்பீடுகள் வழங்க நடவடிக்கை

  • November 5, 2023
  • 0 Comments

இஸ்ரேலில் உயிரிழந்த சுஜித் பண்டாரவிற்கு வழங்கப்பட வேண்டிய அனைத்து நட்டஈடுகளையும் வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. மேலும், அவரது உடலை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு அவசரமாக நடவடிக்கை எடுப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்தார். அக்டோபர் 7 ஆம் திகதி ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு அவர் காணாமல் போயிருந்தார். இஸ்ரேலில் செவிலியராகப் பணிபுரிந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. அவர் ஹமாஸ் தீவிரவாதிகளின் பணயக்கைதியாக இருக்கலாம் என […]

இலங்கை செய்தி

ஓடையில் விழுந்து ஒரு வயது சிறுமி பலி

  • November 5, 2023
  • 0 Comments

மதுரங்குளிய பிரதேசத்தில் ஓடையில் தவறி விழுந்த சிறுமி உயிரிழந்துள்ளார். உயிரிழந்த சிறுமிக்கு ஒரு வயது இரண்டு மாத பெண் என தெரிவிக்கப்படுகிறது. சிறுமி வசித்த வீட்டிலிருந்து சுமார் 20 அடி தூரத்தில் இந்த வாய்க்கால் அமைந்துள்ளதாகவும் மழை காரணமாக அதில் நீர் நிரம்பியுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சிறுமி வீட்டில் இல்லாததை அறிந்த பெற்றோர் கால்வாயில் கிடப்பதைக் கண்டதாகவும், புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி உயிரிழந்துள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.