அழகுப்பொருளாக கருதி வீட்டுத்தோட்டத்தில் பிரித்தானிய தம்பதியர் வைத்திருந்த பொருள்: பொலிசார் குவிந்ததால் பரபரப்பு!
அழகுப் பொருளாக கருதி, ஒரு பிரித்தானியத் தம்பதியர் தங்கள் வீட்டுத் தோட்டத்தில் ஒரு பொருளை பத்திரமாக வைத்திருந்தார்கள்.ஆனால், திடீரென பொலிஸாரும், வெடிகுண்டு நிபுணர்களும் வீட்டை சுற்றிவளைக்க, அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார்கள் அவர்கள். வேல்ஸிலுள்ள Pembrokeshire என்னுமிடத்தில் வாழ்ந்துவந்த Sian மற்றும் Jeffrey Edwards (77) என்னும் ஒரு தம்பதி, தங்கள் வீட்டுத் தோட்டத்தில், நீண்ட காலமாக, வெடிக்காத ஒரு வெடிகுண்டை அழகுப்பொருள் போல பத்திரமான வைத்திருந்திருக்கிறார்கள்.ஆனால், கடந்த புதன்கிழமை திடீரென பொலிசார் ஒருவர் வந்து வீட்டின் கதவைத் தட்டியுள்ளார். […]













