புத்தளம்- கற்பிட்டி பகுதியில் புதையல் தோண்டிய 9 பேர் கைது
புத்தளம் – கற்பிட்டி தேதாவாடிய பிரதான வீதியிலுள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் புதையல் தோண்டுவதற்கு முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் 9 பேர் இன்று (04) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சுற்றுலா விடுதியின் உரிமையாளர் உட்பட அங்கு பணிபுரியும் ஊழியர்கள் உள்ளிட்ட 9 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும், புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மண்வெட்டி, கோடரி உள்ளிட்ட பொருட்களும், பூஜைக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்களும் இதன்போது பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன. தும்மலசூரிய மற்றும் கற்பிட்டி ஆகிய […]













