பொழுதுபோக்கு

அதிரடியாக நிறுத்தப்பட்ட 7G படப்பிடிப்பு… என்ன நடந்தது?

  • December 19, 2023
  • 0 Comments

செல்வராகவன் இயக்கத்தில் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த 7ஜி ரெயின்போ காலனி படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது. முதல் பாகத்தில் நடித்த ஹீரோ ரவி கிருஷ்ணா தான் இரண்டாம் பாகத்திலும் கதாநாயகனாக நடிக்கிறார். அதேபோல் தான் முதல் பாகத்தில் இசையமைத்த யுவன் சங்கர் ராஜா தான் இரண்டாம் பாகத்திலும் இசையமைக்கிறார். மேலும் முதல் பாகத்தில் இருந்த சில கேரக்டர்ஸ் அப்படியே இரண்டாம் பாகத்திலும் தொடர்கிறதாம். இதன் படப்பிடிப்பு சீக்கிரம் நிறைவடைந்து ரிலீஸ் தேதியும் வெளியாகும் என […]

விளையாட்டு

IPL Auction – 4.8 கோடிக்கு இலங்கை வீரரை வாங்கிய மும்பை

  • December 19, 2023
  • 0 Comments

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இலங்கை கிரிக்கெட் வீரர் நுவன் துஷார வாங்கப்பட்டுள்ளார். 2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகளுக்கான ஏலத்தில் இலங்கை வீரர் ஒருவர் விற்கப்பட்ட அதிகபட்ச தொகை இதுவாகும். இலங்கை கிரிக்கெட் வீரர் நுவன் துஷார 4.8 கோடி இந்திய ரூபாய்களுக்கே ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலகம் செய்தி

எலோன் மஸ்க் மீது வழக்கு தொடரவுள்ள பிரேசிலின் முதல் பெண்மணி

  • December 19, 2023
  • 0 Comments

பிரேசிலின் முதல் பெண்மணி ரொசங்கலா லுலா டா சில்வா,எலோன் மஸ்க்கிற்குச் சொந்தமான X சமூக ஊடக தள கணக்கு கடந்த வாரம் ஹேக் செய்யப்பட்ட பின்னர் வழக்குத் தொடரப்போவதாக தெரிவித்தார். ஹேக்கர் டிசம்பர் 11 அன்று ஜான்ஜாவின் கணக்கில் நுழைந்து, முதல் பெண்மணி மற்றும் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவுக்கு எதிரான அவமானங்கள் மற்றும் பெண் விரோத அவதூறுகள் உட்பட பல செய்திகளை வெளியிட்டார். “நான் அவர்கள் மீது அமெரிக்காவில் அல்லது பிரேசிலில் வழக்குத் […]

ஐரோப்பா

காலாவதியாகும் தருவாயில் உக்ரைனுக்கு அமெரிக்கா அளித்த உதவி: வெள்ளை மாளிகை எச்சரிக்கை

அமெரிக்கா இந்த ஆண்டு உக்ரைனுக்கு இன்னும் ஒரு உதவிப் பொதிக்கு மாத்திரமே போதுமான அங்கீகாரம் பெற்ற நிதியை கொண்டுள்ளது என்று வெள்ளை மாளிகை திங்களன்று எச்சரித்துள்ளது. வாஷிங்டன், உக்ரைனுக்கு 43 பில்லியனுக்கும் அதிகமான இராணுவ உதவியை வழங்கியுள்ளது. ஆனால், எல்லைப் பாதுகாப்பு போன்ற உள்நாட்டுப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக, பிடென் நிர்வாகம் கெய்விற்கு பங்களிப்புகளுக்கு முன்னுரிமை அளிப்பதாகக் அமெரிக்க குடியரசுக் கட்சியினர், புதிய நிதியுதவியைத் தடுத்துள்ளனர்.

ஆசியா செய்தி

இஸ்ரேல் – ஹமாஸ் போர் : காசாவில் கிட்டத்தட்ட 20000 பேர் மரணம்

  • December 19, 2023
  • 0 Comments

காசா பகுதி முழுவதும் இஸ்ரேல் மும்முனை தாக்குதலை தீவிரமாக நடத்தி வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. இஸ்ரேல் தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உள்பட அப்பாவி பொது மக்கள் உயிரிழந்தனர். இதற்கிடையே காசாவில் 19,667 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று இரவு காசா முனை பகுதி முழுவதும் தாக்குதல் நடத்தப்பட்ட தாகவும், இதில் ஏராளமானோர் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையே காசாவில் ஹமாஸ் அமைப்பின் மிகப் பெரிய சுரங்கப் பாதையை கண்டு பிடித்து உள்ளதாக இஸ்ரேல் […]

ஐரோப்பா

உக்ரையினில் போர்க்குற்றம் செய்த ரஷ்ய படைகள் :வெளியான அதிர்ச்சி தகவல்

உக்ரையினில் ரஷ்யப் படைகள் அங்கு போர்க்குற்றம் செய்ததற்கான அறிகுறிகள் உள்ளன என ஐ.நா மனித உரிமைகள் தலைவர் வோல்கர் துர்க் தெரிவித்துள்ளார். “பொதுமக்களைப் பாதுகாப்பதற்கும், அவர்களின் தாக்குதல்களின் விளைவுகளுக்கு எதிராக பொதுமக்களின் பொருட்களைப் பாதுகாப்பதற்கும் போதுமான நடவடிக்கைகளை எடுப்பதில் ரஷ்ய படைகள் விரிவான தோல்வியைச் சந்தித்துள்ளது” என்று துர்க் ஜெனிவாவில் மனித உரிமைகள் கவுன்சிலில் கூறியுள்ளார். அவர் தனது அலுவலகத்தின் கண்காணிப்பு “சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தின் மொத்த மீறல்கள், சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கடுமையான மீறல்கள் […]

விளையாட்டு

SAvsIND – தென் ஆப்பிரிக்கா அணிக்கு 212 ஓட்டங்கள் இலக்கு

  • December 19, 2023
  • 0 Comments

தென் ஆப்பிரிக்கா – இந்தியா மோதும் 2-வது ஒருநாள் போட்டி கெபேஹா நகரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியில் தொடக்க வீரர்களாக ருதுராஜ் – சாய் சுதர்சன் களமிறங்கினர். ருதுராஜ் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்ட 2-வது பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்த வந்த திலக் வர்மா தென் ஆப்பிரிக்காவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் […]

உலகம்

பிரதமர் நெதன்யாகுவுடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் மோடி – வெளியான காரணம்

  • December 19, 2023
  • 0 Comments

இஸ்ரேல் -காசா போர், செங்கடலில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் ஆதிக்கம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பிரதமர் மோடி, இஸ்ரேல் பிரதமரை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு விவாதித்தார். கடந்த அக்.7ம் திகதி யாரும் எதிர்பார்க்காத வகையில் ஹமாஸ் படையினர் இஸ்ரேல் மீது ராக்கெட்களை ஏவி 1,400 பேரை கொன்றனர். இதற்கு பதிலடி கொடுக்க இஸ்ரேல் கண்மூடித்தனமான பதில் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இப்படி தொடர்ந்து வரும் தாக்குதல் காரணமாக காசாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 20 ஆயிரத்தை நெருங்கி […]

ஐரோப்பா

மருத்துவ ஆலோசனையின்றி கருத்தடை மாத்திரையை தினமும் எடுத்துக்கொண்ட சிறுமி: பிறகு நடந்த விபரீதம்…!

  • December 19, 2023
  • 0 Comments

இங்கிலாந்தின் கிழக்கு மிட்லேண்ட்ஸ் பிராந்தியத்தில் உள்ளது லின்கன்ஷையர் பகுதி. இங்கு தன் குடும்பத்தினருடன் வசித்து வந்தவர், 16வயதான பள்ளிச்சிறுமி லேலா கான். சுமார் 3 வாரங்களுக்கு முன்பு லேலாவிற்கு மாத விடாய் கால வயிற்று வலி தொடங்கியது. அவரது தோழிகள் வலியை குறைப்பதற்கு கருத்தடை மாத்திரை எடுத்து கொள்ள ஆலோசனை கூறியுள்ளனர். நவம்பர் 25லிருந்து லேலாவும் கருத்தடை மாத்திரைகளை தினமும் எடுத்து கொள்ள துவங்கினார்.டிசம்பர் 5ம் திகதி லேலாவிற்கு வயிற்று வலியுடன் தலைவலியும் சேர்ந்து சேர்ந்து கொண்டது. […]

இலங்கை

வைத்தியசாலை வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த தானியங்கி ஆணுறை இயந்திரம் மாயம்

  • December 19, 2023
  • 0 Comments

எய்ட்ஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் , நாடாளாவிய ரீதியில் தானியங்கி ஆணுறை வழங்கும் இயந்திரங்கள் தெரிவு செய்யப்பட்ட சில பொது இடங்களில் பொருத்தப்பட்டது. அவ்வாறு யாழ்ப்பாணம், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை வளாகத்தில் பொருத்தப்பட்டு இருந்த தானியங்கி ஆணுறை வழங்கும் இயந்திரம் காணாமல் போயுள்ளது. இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.