ஆசியா

ஜப்பான் நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 48 ஆக அதிகரிப்பு!

  • January 2, 2024
  • 0 Comments

ஜப்பானில் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 48 ஆக அதிகரித்துள்ளதாக  அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒரே இரவில் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்கள் ஆரம்பத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கையை 30 ஆகக் காட்டியது. உள்ளூர் அதிகாரிகளின் கூற்றுப்படி, சுசு நகரில் சுமார் 53 வீடுகள் இடிந்து விழுந்தன. இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்நிலையில் இது குறித்த மேலதிக சேதவிபரங்களை அதிகாரிகள் மதிப்பிட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. முன்னதாக குறித்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தமை […]

இலங்கை

திருகோணமலையில் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின!

  • January 2, 2024
  • 0 Comments

திருகோணமலை மாவட்டத்தில் மாவிலாறு திறந்துவிடப்பட்டமையால் வெருகல் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மாவடிச்சேனை, சேனையூர்,வட்டவன், வாழைத்தோட்டம் கல்லடி, முத்துச்சேனை உள்ளிட்ட கிராமங்களில் வெள்ளம் பரவியுள்ளது. தற்போது கனமழை பெய்து வருவதினால் மகாவலி கங்கையின் நீர்மட்டம் உயர்ந்து காணப்படுவதினாலும், மாவிலாறு திறந்து விடப்பட்டுள்ளதால் வெருகல் கிராம உத்தியோகத்தர் பிரிவில் 168 குடும்பங்களைச் சேர்ந்த 480 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் திருகோணமலை மாவட்ட பிரதிப் பணிப்பாளர் கே.சுகுணதாஸ் தெரிவித்தார். அத்துடன் 120 குடும்பங்களைச் சேர்ந்த 341 பேர் வெருகலம்பதி […]

இலங்கை

நபரொருவருடன் மோதிய CTB பஸ்- பஸ் மீது தாக்குதல் நடத்திய சந்தேக நபர்கள்!

  • January 2, 2024
  • 0 Comments

திருகோணமலை உட்துறைமுக வீதியில் CTB பஸ்ஸுடன் நபரொருவர் மோதி படுகாயம் அடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்திய சாலையில் இன்றிரவு (01) அனுமதிக்கப்பட்டுள்ளார். மூதூர் டிப்போவிற்கு சொந்தமான பஸ் உட்துறைமுக வீதிக்கு அருகில் வீதியை கடக்க முற்பட்டவர் உடன் மோதியதாகவும், இதனை அடுத்து ஆவேசத்தில் சிலர் பஸ்ஸை தாக்கியதாகவும் தெரிய வருகின்றது. குறித்த விபத்தில் திருகோணமலை சீ.வீ.ரோட்- கஸ்தூரி நகரில் வசித்து வரும் கருப்பையா கருணாநிதி (43) என்பவரே காயம் அடைந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது. விபத்துடன் தொடர்புடைய […]

இலங்கை

யாழில் பதிவான நெகிழ்ச்சியான சம்பவம் : 08 முறை கருச்சிதைவு அடைந்த தாய்க்கு பிறந்த குழந்தை!

  • January 2, 2024
  • 0 Comments

யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் எட்டுத்தடவை தொடர்ச்சியாக கருச்சிதைவு ஏற்பட்ட தாய் ஒருவர் ஒன்பதாவது முறை ஆரோக்கியமான குழந்தையை நேற்று (01.01) பிரசவித்துள்ளார். 24 வயதான மேற்படி தாயார் திருமணம் முடித்த காலத்தில் இருந்து தொடர்ச்சியாக எட்டுத்தடவை கருச்சிதைவு ஏற்ப்பட்டதாக வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார். அதன் பின்னர் இந்த தாயார் கரப்பத்திற்க்கு முன்னரும் கர்ப்ப காலத்திலும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் தொடர்ச்சியாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் இன்று புது வருடதினத்தில் ஆரோக்கியமான குழந்தையை பிரசவித்தார். மகப்பேற்று […]

பொழுதுபோக்கு

அம்மாடி… ஒரு வழியா முடிஞ்சிது… இந்தியன் 2 நியூ அப்டேட்

  • January 2, 2024
  • 0 Comments

ஷங்கர் – கமல் ஹாசன் கூட்டணியில் கடந்த 1996ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் இந்தியன். இப்படத்தின் இரண்டாவது பாகம் தற்போது உருவாகி வருகிறது. இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2019ஆம் ஆண்டு துவங்கியது. ஆனால், படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து காரணமாக மூவர் இறந்தனர். கமல் ஹாசன் நூலிழையில் உயிர் தப்பினார். இதனால் படப்பிடிப்பு நின்றது. இதன்பின் சில பண பிரச்சனை காரணமாகவும் இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்காமல் இருந்து வந்தது. இப்படி ஏகப்பட்ட […]

இலங்கை

யாழ் – கோண்டாவில் பகுதியில் வீடொன்றை சுற்றி வளைத்த பொலிஸார்!

  • January 2, 2024
  • 0 Comments

யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியில் உள்ள வீடொன்று பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டு நடாத்தப்பட்ட தேடுதலில் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. 500 கிராம் கேரள கஞ்சா, 100 கிராம் ஹெரோயின், ஆறு போதை மாத்திரைகள், போதை மருந்தேற்ற பயன்படுத்தப்படும் ஊசிகள் என்பன மீட்கப்பட்டதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.   இது குறித்து தெரியவருவதாவது, நீண்ட காலமாக கோண்டாவில் செபஸ்டியன் வீதியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் 50,000 ரூபாய் பணத்துடன் நேற்று (01.03)  யாழ்ப்பாண பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் […]

பொழுதுபோக்கு

ஜப்பான் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கிய நடிகர்… அதிர்ச்சியில் ரசிகர்கள்

  • January 2, 2024
  • 0 Comments

நேற்று ஜனவரி 1, 2024ம் வருடத்தை உலக மக்கள் அனைவரும் மிகவும் கோலாகலமாக கொண்டாடினார்கள்.  ஆனால் ஜப்பானில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்திலேயே பதுவருடத்தை கொண்டாடி இருந்தார்கள். குறித்த நிலநடுக்கத்தால் 6க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக நேற்று தகவல் வர தற்போது உயிரிழப்பு செய்தி அதிகம் வருகிறது. இந்த தகவல் மக்கள் அனைவருக்குமே கொஞ்சம் அதிர்ச்சியையும், பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் பல பிரபலங்கள் தங்கள் விடுமுறையையும், புது லருடத்தையும் கொண்டாட […]

பொழுதுபோக்கு

பிக் பாஸ் வீட்டுக்குள்ள வந்த பணப்பெட்டி… வெளியேற போகும் நபர் யார்?

  • January 2, 2024
  • 0 Comments

கடந்த எப்படி டிக்கெட் டு பினாலே விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்றதோ, அதே அளவிற்கு விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாதது தான் இந்த வாரமும். ஏனென்றால் யார் அந்த ஒரு நபர் பணப்பெட்டியுடன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போகிறார் என பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் இருப்பார்கள். தற்போது நடைபெற்று வரும் பிக் பாஸ் 7ல் உள்ள சில போட்டியாளர்கள் பணபோட்டியுடன் வீட்டை விட்டு வெளியேற திட்டம் போட்டு வைத்துவிட்டனர். விசித்ரா, மாயா, மணி ஆகிய நபர்களில் ஒருவர் […]

இலங்கை

இலங்கையில் VAT வரியில் மாற்றம் – ஐஸ்கட்டியின் விலையும் அதிகரிப்பு

  • January 2, 2024
  • 0 Comments

VAT வரி அதிகரிப்பு நேற்று முதல் அமுலாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் ஐஸ்கட்டியின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மீன்களை பாதுகாப்பதற்காக பயன்படுத்தப்படும் ஐஸ்கட்டிகளின் விலை 100 ரூபாவால் அதிகரிக்கப்படுமென உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். அந்த வகையில், 600 ரூபாவாக இருந்த ஒரு கிலோகிராம் ஐஸ்கட்டியின் விலை 700 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இலங்கை

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக மரக்கறிகளின் விலையில் உச்சக்கட்ட அதிகரிப்பு

  • January 2, 2024
  • 0 Comments

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். இன்றைய தினத்தின் நிலவரப்படி கரட் ஒரு கிலோவின் மொத்த விலை 750 ரூபாவாகவும், பீட்ரூட் ஒரு கிலோ 380 ரூபாவாகவும், கோவா கிலோ 500 ரூபாவாகவும், பீன்ஸ் கிலோ ஒன்றின் மொத்த விலை 600 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது. அத்துடன், வெண்டைக்காய், தக்காளி மற்றும் ஏனைய மரக்கறிகளின் விலைகள் தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக, நுவரெலியா […]