இலங்கை

யாழில் பதிவான நெகிழ்ச்சியான சம்பவம் : 08 முறை கருச்சிதைவு அடைந்த தாய்க்கு பிறந்த குழந்தை!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் எட்டுத்தடவை தொடர்ச்சியாக கருச்சிதைவு ஏற்பட்ட தாய் ஒருவர் ஒன்பதாவது முறை ஆரோக்கியமான குழந்தையை நேற்று (01.01) பிரசவித்துள்ளார்.

24 வயதான மேற்படி தாயார் திருமணம் முடித்த காலத்தில் இருந்து தொடர்ச்சியாக எட்டுத்தடவை கருச்சிதைவு ஏற்ப்பட்டதாக வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.

அதன் பின்னர் இந்த தாயார் கரப்பத்திற்க்கு முன்னரும் கர்ப்ப காலத்திலும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் தொடர்ச்சியாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் இன்று புது வருடதினத்தில் ஆரோக்கியமான குழந்தையை பிரசவித்தார்.

மகப்பேற்று வைத்திய நிபுணர் சிவராஜா சிஜெதரா அவர்களின் மருத்துவக்குழுவனரே மேற்படி தாய்க்கு சிகிச்சை வழங்கினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்