இலங்கை

கடுவலை பிரதேசத்தில் நீராடச்சென்ற சிறுவனை இழுத்து சென்ற முதலை!

  • January 17, 2024
  • 0 Comments

நீராடச் சென்ற சிறுவன், முதலையால் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போனதாக கடுவலை பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. நேற்று (16) மாலை கடுவலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாந்த அந்தோனி மாவத்தையில் உள்ள ஓடையில் நீராடச் சென்ற சிறுவனே இவ்வாறு காணாமல் போயுள்ளார். இவ்வாறு காணாமல் போயுள்ளவர், கடுவலை – வெலிவிட்ட பிரதேசத்தை சேர்ந்த 11 வயதான சிறுவன் என தெரியவந்துள்ளது. காணாமல் போன சிறுவனை தேடும் பணியில் பொலிஸார், பிரதேசவாசிகள் மற்றும் கடற்படையின் சுழியோடி அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர்.

உலகம்

நைஜீரியாவில் விபத்துக்குள்ளான படகு … 8 பேர் மரணம்; 100 பேர் மாயம்!

  • January 17, 2024
  • 0 Comments

நைஜீரியா நாட்டில் நடந்த படகு விபத்தில் 8 பேர் பலியாகியுள்ளதாகவும், 100க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். படகில் அதிக பாரம் ஏற்றப்பட்டதால் இந்த விபத்து நடந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. நைஜீரியாவின் வட மத்திய பகுதியில் உள்ள போர்கு மாவட்டத்தின் அருகில் உள்ள கெப்பி பகுதிக்குச் சென்ற படகு ஆற்றின் நடுவே மூழ்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த தகவல் அறிந்ததும் தேசிய மீட்பு படைகள் அங்கே முகாமிட்டு மீட்பு பணியின் இறங்கியுள்ளன. இது குறித்துப் […]

ஆசியா

சீனாவில் பனிப்பொழிவால் ஏற்பட்டுள்ள பேராபத்து!

  • January 17, 2024
  • 0 Comments

வடக்கு சீனாவில் அதிகமான பனிப்பொழிவு காரணமாக அப்பகுதியில் இருந்த சுற்றுலாப் பயணிகளை அதிகாரிகள்  வெளியேற்றியுள்ளனர். பனிச்சரிவுகள் சாலைகளை அடைத்ததால், சின்ஜியாங் பிராந்தியத்தில் உள்ள அல்டே மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சுற்றுலாப் பயணிகளும் குடியிருப்பாளர்களும் சிக்கிக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் ஹெலிகாப்படரின் உதவியுடன் வைத்தியசாலைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பனிச்சரிவுகள் 350 கிலோமீட்டர் (220 மைல்) சாலைகளை பாதித்ததாக உள்ளூர் நெடுஞ்சாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. சீனாவில் சமீபகாலமாக பனிப்பொழிவு அதிகமாக காணப்படுகிறது. இதுவரை குறைந்தபட்சமாக […]

ஐரோப்பா

ஐரோப்பாவில் கொவிட் தடுப்பூசியால் ஏற்பட்டுள்ள நன்மை!

  • January 17, 2024
  • 0 Comments

கொவிட் தடுப்பூசிகளால் ஐரோப்பாவில் 1.4 மில்லியன் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. உலக சுகாதார ஸ்தாபனம் 53 நாடுகளை உள்ளடக்கி உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த அமைப்பு சமீபத்தில் வெளியிட்ட தரவுகளின் அடிப்படையில், 277.7 மில்லியனுக்கும் அதிகமான கோவிட் -19 வழக்குகளும், 22 மில்லியன் இறப்புகளும் இதுவரை பதிவாகியுள்ளதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் ஐரோப்பாவில் வாழும் 1.4 மில்லியன் மக்கள் குறிப்பாக வயதானவர்கள் பலர் கொவிட் -19 தடுப்பூசியை பெற்றுக்கொண்டதன் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வதாகவும், தடுப்பூசியை […]

இலங்கை

இலங்கை : வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பில் கடுமையாகும் சட்ட நடவடிக்கை!

  • January 17, 2024
  • 0 Comments

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்று தருவதாக கோரி மோசடி செய்பவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். சமீப காலமாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்று தருவதாக கூறி பல மோசடி சம்பவங்கள் பதிவாகி வருகின்றன. அவ்வாறு போலி முகவர்களிடம் பணத்தை கொடுத்துவிட்டு மீள பெற முடியாதவர்கள் போதியளவு ஆதரமின்மையால் பொலிஸாரை நாட முடியாத நிலையும் உள்ளது. இதனால் அவர்கள் செலுத்திய பெருந்தொகை பணத்தை இழக்க நேரிடுகின்றனர். குறிப்பாக வெளிநாட்டு […]

பொழுதுபோக்கு

கடுமையான போட்டிகளுக்கு மத்தியிலும் கெத்து காட்டும் “மிஷன்”

  • January 17, 2024
  • 0 Comments

அருண் விஜய் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர். ஆக்ஷன் ஹீரோ என ரசிகர்கள் மனதில் இடம்பிடித்திருக்கும் அருண் விஜய் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் தான் மிஷன் சாப்டர் 1 அச்சம் என்பது இல்லையே. இப்படத்தை இயக்குனர் விஜய் இயக்க லைக்கா நிறுவனம் தயாரித்து இருந்தது. இப்படத்தில் அருண் விஜய்யுடன் இணைந்து எமி ஜாக்சன், நிமிஷா சஜயன் மற்றும் இயல் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அயலான் மற்றும் கேப்டன் மில்லர் என இரு படங்களுக்கு […]

இலங்கை

இலங்கை பாடசாலை மாணவர்களுக்கு முக்கிய தகவல்

  • January 17, 2024
  • 0 Comments

இலங்கை அரச பாடசாலைகள் மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளில் அடுத்த பாடசாலை தவணை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 5 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டின் மூன்றாம் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டத்தை பெப்ரவரி மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்க கல்வி அமைச்சு தீர்மானித்திருந்தது. எனினும் 2023 ஆம் ஆண்டின் மூன்றாம் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் 5 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. […]

வாழ்வியல்

என்ன செய்தாலும் உடல் எடை குறையவில்லையா? இது தான் காரணம்

  • January 17, 2024
  • 0 Comments

பலர் தங்களின் உடல் எடையை குறைக்க முயற்சிக்கிறார்கள், ஆனால் எடை குறைவதாக தெரியவில்லை. தொடர் முயற்சிகள், உணவைத் தவிர்ப்பது மற்றும் உடற்பயிற்சி செய்த பிறகும் கொழுப்பு எரிக்கப்படாவிட்டால், நீங்களும் எடை இழப்பு தொடர்பான தவறுகளைச் செய்ய வாய்ப்புள்ளது. உண்மையில், ஒரு வழக்கத்தை முயற்சிப்பது அல்லது அதே வகையான உடற்பயிற்சி செய்வது அல்லது அதே வகையான உணவை சாப்பிடுவது ஆகியவை எடை குறையாததற்கு காரணமாகிறது. அதே நேரத்தில், உடல் எடையை குறைப்பதில் சிரமத்தை ஏற்படுத்தும் பல பணிகள் உள்ளன, […]

அறிந்திருக்க வேண்டியவை முக்கிய செய்திகள்

உலகை அச்சுறுத்த காத்திருக்கும் Disease X

  • January 17, 2024
  • 0 Comments

அறியப்படாத தொற்று அச்சுறுத்தல்களுக்கான மருத்துவ பாதுகாப்பு நடவடிக்கைகளில் விஞ்ஞானிகளைப் பணிபுரியச் செய்வதற்கான ஒரு வழியாக Disease X என்ற வார்த்தை பல ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டது. அதாவது, எபோலா வைரஸ் போன்ற அறியப்பட்ட வைரஸ்களுக்குப் பதிலாக கோவிட் -19 வைரஸ் போன்ற எதிர்பாராத வைரஸ்கள் தொடர்பாக முன்கூட்டியே தெரிந்துக் கொள்ள உதவுவதர்காக உருவாக்கப்பட்ட முன்முயற்சிகளில் டிசீஸ் எக்ஸ் ஒன்று. திடீரென மக்களை தாக்கும் வைரஸ்களுக்கான தடுப்பூசிகள், மருந்து சிகிச்சைகள் மற்றும் நோயறிதல் சோதனைகள் உள்ளிட்ட தொழில்நுட்பங்களின் வளர்ச்சியை […]

பொழுதுபோக்கு

கமல் ஹாசன் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

  • January 17, 2024
  • 0 Comments

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மிகமுக்கியமான நபர் கமல் ஹாசன். இந்த நிகழ்ச்சியை மக்கள் ஆர்வமாக பார்க்க துவங்கியதே கமல் ஹாசனால் தான். இவருடைய முகம் தான் இந்த நிகழ்ச்சியின் செல்லிங் பாயிண்ட் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் சீசனில் துவங்கி சமீபத்தில் முடிவடைந்த 7வது சீசன் வரை வெற்றிகரமாக தொகுத்து வழங்கியுள்ளார். நடந்து முடிந்த கடைசி சீசனில் இவர் மீது சில சர்ச்சைகள் எழுந்தது. ஆனால் அதையெல்லாம் கமல் ஹாசன் கையின் ஓரத்தில் ஓடிக்கொண்டிருக்கும் தூசியை தட்டிவிடுவது போல் […]