இலங்கை

இலங்கையில் குரங்குகளுக்கு கருத்தடை! பணி ஆரம்பம்

  • January 17, 2024
  • 0 Comments

ஆண் குரங்குகளுக்கு கருத்தடை செய்யும் முன்னோடித் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நாலக பண்டார கோட்டேகொட தெரிவித்துள்ளார். மாத்தளை மாவட்டத்தில் பயிர்செய்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஆண் குரங்குகளுக்கே இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. மாத்தளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் இது தொடர்பில் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், விவசாய அமைச்சு இதற்கான நிதி ஒதுக்கீடுகளை செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். “மாத்தளை மாவட்டத்தில் குரங்குகளின் எண்ணிக்கை அதிகரிப்புடன் இப்பிரதேசத்தில் எழுந்துள்ள விவசாயப் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடப்பட்டு, இலங்கையில் முதன் முறையாக […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் விற்பனை செய்யப்பட்ட டெஸ்லா கார்கள் மீளக்கோரல்

  • January 17, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் விற்கப்படும் மிகவும் பிரபலமான இறக்குமதி செய்யப்பட்ட எலக்ட்ரிக் கார் ஒன்று திரும்பப் பெறப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட டெஸ்லா மாடல் 3 எலக்ட்ரிக் கார்  திரும்பப் பெறப்பட்டுள்ளது. ANCAP வழங்கிய ஃபைவ்-ஸ்டார் ரேட்டிங் தரநிலைகளை பூர்த்தி செய்ய இயலாமையால் சம்பந்தப்பட்ட கார்களை திரும்பப்பெற நிறுவன அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். Tesla Model 3 இன் புதிய மாடல் கடந்த டிசம்பர் மாதம் முதல் அவுஸ்திரேலியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதுடன் அது தொடர்பான வாகனங்களின் இறக்குமதியும் தற்காலிகமாக […]

உலகம்

விற்பனையில் முதலிடத்தைப் பிடித்த iPhone!

  • January 17, 2024
  • 0 Comments

முதன்முறையாக உலகில் மிக அதிகமாக விற்பனையாகும் கைத்தொலைபேசியாக Apple நிறுவனத்தின் iPhone உருவெடுத்துள்ளது. கடந்த ஆண்டு 234.6 மில்லியன் iPhone கைத்தொலைபேசிகள் விற்கப்பட்டதாக அனைத்துலகத் தரவு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. 12 ஆண்டுகளாக முதல் இடத்தில் இருந்த Samsung நிறுவனத்தை அது பின்னுக்குத் தள்ளியது. Samsung கடந்த ஆண்டு 226.6 மில்லியன் கைத்தொலைபேசிகளை விற்றது. Samsungஐப் போன்று Huawei, கூகள், Xiaomi போன்ற பல நிறுவனங்கள் Android செயல்முறையைப் பயன்படுத்துகின்றன. சீனாவில் Huawei கைத்தொலைபேசிகள் அதிகம் விற்கப்படுகின்றன. இந்நிலையில் […]

இலங்கை

இலங்கை மக்களின் கையடக்கத் தொலைபேசிகளுக்குள் ஊடுருவி தரவுகள் திருடும் கும்பல்

  • January 17, 2024
  • 0 Comments

இலங்கையில் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களின் கையடக்கத் தொலைபேசிகளை ஊடுருவி தரவுகள் உள்ளிட்ட தகவல்களை சீனாவில் உள்ள தரவுக் கிடங்குகளுக்கு அனுப்பும் கும்பல் தொடர்பில் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. ஹேக்கர்கள் தங்களுடைய கையடக்கத் தொலைபேசிகளை அணுகி தரவுகளை திருடியதாக அரசாங்க அதிகாரிகள் உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த சுமார் நாற்பது பேர் ஏற்கனவே குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஒன்லைன் கடன் வழங்கும் மையத்தில் சுமார் 80 இளம்பெண்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. […]

ஐரோப்பா

ஜெர்மனி மக்களுக்கு வீட்டு உதவி தொகை அதிகரிப்பு

  • January 17, 2024
  • 0 Comments

ஜெர்மனி மக்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படுகின்ற வீட்டு உதவி தொகை மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு தொடக்கம் ஜெர்மனியில் வீடுகளுக்கு அரசாங்கம் வழங்கும் நிதி உதவியானது அதிகரிக்கப்பட்டு இருந்தது. அதாவது இதுவரை காலங்களும் ஜெர்மனியில் வீட்டு உதவி தொகையை பெறுகின்றவர்களுடைய எண்ணிக்கையானது 72 சதவீதமாக அதிகரித்துள்ளதாக புள்ளி விபரம் வெளியாகியுள்ளது. தற்பொழுது ஜெர்மன்யில் மொத்தமாக 2 மில்லியன் பேர் இவ்வாறு மேலதிக பணத்தை அரசாங்கத்திடம் இருந்து பெற்றுக்கொள்வதாக தெரியவந்திருக்கின்றது. இந்நிலையில் வீட்டு உதவி தொகையை பெறுகின்றவர்களின் மொத்த […]

இலங்கை

இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

  • January 17, 2024
  • 0 Comments

இந்தியாவில் இருந்து வீசிய காற்றின் தாக்கம் காரணமாக இலங்கையின் பல மாவட்டங்களில் காற்றின் தரம் மிகவும் குறைவாக இருந்தது. குருநாகல், கண்டி, கொழும்பு, யாழ்ப்பாணம், மொனராகலை, நுவரெலியா போன்ற மாவட்டங்களில் காற்றின் தரம் இவ்வாறு வீழ்ச்சியடைந்திருந்தது. தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் தரவுகளுக்கமைய நேற்று காலை 8.30 மணியளவில், குருநாகல் நகரத்தின் காற்றின் தர சுட்டெண் தரவுகளின்படி, தூசி துகள்களின் அளவு (Pm 2.5) 275 ஆக மிக அளவை காட்டியது. மேலும், அமெரிக்க தூதரகத்தின் காற்றின் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

மனித மூளையை போல் செயல்படும் தொழில்நுட்பம்

  • January 17, 2024
  • 0 Comments

கடந்த சில ஆண்டுகளாகவே சர்வதேச அளவில் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் எதிர்காலத்தை சிறப்பாக்கும் நோக்கத்திற்காகவே கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது என்பதை நாம் காண முடிகிறது. எதிர்காலத்தில் மனிதர்களின் தேவையை கணக்கிட்டு அறிமுகம் செய்யப்படும் கண்டுபிடிப்புகள் நமக்கு வியப்பை ஏற்படுத்துகிறது என்பதுதான் உண்மை. அப்படிதான் அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ மற்றும் கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள், மனித மூளை போலவே செயல்படும் ஒரு அமைப்பை உருவாக்கி இருக்கின்றனர். அதாவது இந்த புதிய கண்டுபிடிப்பால் மனித மூளை போல செயல்பட முடியும். இதை […]

விளையாட்டு

மீண்டும் காயம்.. பாதியிலேயே விட்டு வெளியேறிய கேன் வில்லியம்சன்

  • January 17, 2024
  • 0 Comments

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. நேற்று முன்தினம் இரண்டாவது டி20 போட்டி நடைபெற்றது. போட்டியில் முதலில் களமிறங்கிய நியூஸிலாந்து அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழந்து 194 ரன்கள் எடுத்தனர். 195 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 19.3 ஓவரில் அனைத்து விக்கெட் இழந்து 173 ரன்கள் மட்டுமே எடுத்தன. இதனால் நியூசிலாந்து அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. […]

செய்தி

சிங்கப்பூரில் 2 மில்லியன் மக்களுக்கு வெளியான மகிழ்ச்சியான தகவல்

  • January 17, 2024
  • 0 Comments

சிங்கப்பூர் சுமார் 2 மில்லியன் நாட்டு மக்களுக்கு உதவித் தொகையை வழங்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. உத்தரவாத தொகுப்பு உதவித் திட்டத்தின்கீழ் வழங்கப்பட உள்ள அந்த தொகை எதிர்வரும் பெப்ரவரி மாதம் கொடுக்கப்படும் என சொல்லப்பட்டுள்ளது. 20 வயது அல்லது அதற்கு குறைவு / 55 வயது அல்லது அதற்கு அதிக வயதுடைய அனைவருக்கும் உதவித் தொகை கிடைக்கும். மெடிசேவ் உதவித் தொகையாக S$150 வழங்கப்படும் என நிதியமைச்சகம் கூறியுள்ளது. அதே போல, குறைந்த வருமானம் கொண்ட […]

ஐரோப்பா

பிரான்ஸில் வங்கிக்கு பணம் எடுத்து சென்றவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த கும்பல்

  • January 17, 2024
  • 0 Comments

பிரான்ஸில் பணம் எடுத்துச் செல்லும் கவச வாகனம் ஒன்றை ஆயுதமுனையில் கொள்ளையிடும் முயற்சி ஒன்று இடம்பெற்றுள்ளது. Val-de-Marne மாவட்டத்தில் வங்கியின் முன்பாக நின்றிருந்த கவச வாகனம் ஒன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. BCP வங்கியின் முன்பாக நின்றிருந்த கவச வாகனம் ஒன்றை, ஆயுததாரிகள் சிலர் காலை 6 மணி அளவில் சுற்றிவளைத்தனர். இச்சம்பவத்தை அடுத்து, அவசர கால சமிக்ஞை ஒலி எழுப்பட்டு பொலிஸார் அழைக்கப்பட்டனர். பொலிஸார் வருவதை அறிந்த கொள்ளையர்கள் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளனர். […]