ஐரோப்பா

விவசாயிகள் போராட்டம் : ஐரோப்பிய ஒன்றிய சட்டத்தை மாற்ற பிரான்ஸ் அழைப்பு

பிரான்சில் நாடு தழுவிய ரீதியில் விவசாயிகளின் போராட்டங்கள் தீவிரமடைந்ததால்,இந்த வாரம் தரிசு நிலங்களில் ஐரோப்பிய ஒன்றிய சுற்றுச்சூழல் கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு அழுத்தம் கொடுப்பதாக பிரான்ஸ் கூறியுள்ளது. வெள்ளிக்கிழமை பிரெஞ்சு அரசாங்கம் விவசாய டீசல் மீதான மாநில மானியங்களை படிப்படியாகக் குறைக்கும் திட்டங்களை கைவிட்டது மற்றும் சுற்றுச்சூழல் விதிமுறைகளை தளர்த்துவதாக உறுதியளித்தது, ஆனால் விவசாயிகள் அமைப்புகள் இது போதாது என்று கூறி போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

இலங்கை

யாழில் ஆபத்தான படகு பயணத்தில் ஈடுபட்டிருந்த இரு சிறுவர்கள் உட்பட மூவரை மீட்ட கடற்படையினர்!

  • January 29, 2024
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் ஆபத்தான படகு பயணத்தில் ஈடுபட்டிருந்த இரு சிறுவர்கள் உள்ளிட்ட மூவரை கடற்படையினர் மீட்டு கரை சேர்த்துள்ளனர். மயிலிட்டி கடல் பகுதியில் நேற்று முன்தினம் (27) குடும்பஸ்தர் ஒருவர் தனது இரண்டு வயது பிள்ளையையும், தனது சகோதரியின் 7 வயது மகளையும் படகில் ஏற்றி கடலில் ஆபத்தான முறையில் படகை செலுத்தியுள்ளார்.அதன்போது, படகினுள் கடல் தண்ணீர் உட்புகுந்ததுடன், படகில் இருந்த பிள்ளைகளும் பயத்தில் கத்தியுள்ளனர். அதனை கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் கண்ணுற்று, அவ்விடத்திற்கு விரைந்து […]

உலகம்

இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்குவதை தாமதப்படுத்தும் அமெரிக்கா!

  • January 29, 2024
  • 0 Comments

இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்குவதை தாமதப்படுத்துவதில் அமெரிக்கா கவனம் செலுத்துகிறது. இஸ்ரேலின் வேண்டுகோளின் பேரில் காஸா பகுதியில் தாக்குதல் நடத்துவதற்கு அமெரிக்கா ஆயுதங்களை வழங்கியிருந்தது. எவ்வாறாயினும், இஸ்ரேல் கோரும் உயர் சக்தி வாய்ந்த குண்டுகள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகள் உள்ளிட்ட ஆயுதங்களை வழங்குவதை தாமதப்படுத்துவது அல்லது இடைநிறுத்துவது அமெரிக்க உயர் அதிகாரிகளின் கவனம் என்று தெரிவிக்கப்படுகிறது. பாலஸ்தீனியர்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காக ஒரு நடைபாதையை திறப்பதற்கு இஸ்ரேலிய அதிகாரிகளின் கவனத்தை ஈர்ப்பதே இந்த முடிவின் நோக்கம் என […]

ஆசியா

மொசாட் உளவு அமைப்புடன் தொடர்பு … ஈரானில் நால்வருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

  • January 29, 2024
  • 0 Comments

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே பல ஆண்டுகளாக நிழல் யுத்தம் நடந்து வருகிறது. தங்கள் நாடுகளை உளவு பார்ப்பதாக இரு நாடுகளும் பரஸ்பரம் குற்றம்சாட்டுகின்றன.குறிப்பாக, இஸ்ரேல் தனது மிகப்பெரிய அச்சுறுத்தலாக ஈரானைக் கருதுகிறது. ஈரான் மீது அணு ஆயுத குற்றச்சாட்டை தொடர்ந்து முன்வைக்கிறது. ஈரான் அரசாங்கமோ, அணு ஆயுத குற்றச்சாட்டை தொடர்ந்து முன்வைக்கிறது. ஈரான் அரசாங்கமோ, அணு ஆயுத குற்றச்சாட்டை மறுப்பதுடன், எந்தவொரு ஆக்கிரமிப்புக்கும் கடுமையான பதிலடி கொடுப்போம் என்கிறது. இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்பு மற்றும் பிற […]

இலங்கை

முல்லைத்தீவில் கடலில் இழுத்துச்செல்லப்பட்ட குடும்பஸ்தரின் சடலம் மீட்பு!

முல்லைத்தீவு மாத்தளன் கடலில் குளிக்க சென்ற இளம் குடும்பஸ்தரின் சடலம் இன்றைய தினம் (29.01.2024) சாலை கடற்பகுதியில் மீட்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாத்தளன் பகுதி கடற்கரையில் நேற்றையதினம் மாலை குடும்பத்தினருடன் கடலில் குளித்துக்கொண்டிருந்த வேளை குறித்த குடும்பஸ்தர் அலையால் இழுத்து செல்லப்பட்ட நிலையில் காணாமல் போயிருந்தார். இந்த சம்பத்தினை தொடர்ந்து தேடுதல் நடாத்தியும் அவரை கண்டுபிடிக்கமுடியாத நிலையில் இன்றையதினம் மாலை குறித்த குடும்பஸ்தரின் சடலம் சாலை கடற்கரைப்பகுதியில் கரையொதுங்கியுள்ளது. குறித்த சம்பவத்தில் 33 அகவையுடைய 10 ஆம் வட்டாரம் […]

இலங்கை

முல்லைத்தீவு பட்டத்திருவிழாவில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சிறுவன்!

  • January 29, 2024
  • 0 Comments

முல்லைத்தீவு கள்ளப்பாடு பகுதியினை சேர்ந்த பாடசாலை மாணவன் ஒருவர் முல்லைத்தீவு பொலிஸாரினால் இன்றையதினம் (29.01) அவரது வீட்டில் வைத்து தீவிர விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார். வல்வெட்டித்துறையில் வருடாவருடம் பட்டத்திருவிழா மேற்கொள்ளுபவர்களால் ஒழுங்கமைக்கப்பட்டு முல்லைத்தீவு கடற்கரையில் நேற்றையதினம் (28.01) பட்டத்திருவிழா ஆரம்பிக்கும் நிகழ்வாக இடம்பெற்றிருந்தது. அதில் வித்தியாசமான வடிவில் பட்டங்களை உருவாக்கி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டம் ஏற்றி மகிழ்ந்திருந்தனர். குறித்த பட்ட திருவிழாவில் முல்லைத்தீவினை சேர்ந்த பாடசாலை மாணவன் ஒருவர் பட்டத்தில் தமிழீழ வரைபடம் போன்ற அமைப்பில் உருவாக்கப்பட்ட […]

ஆசியா

ஹூதி போராளிகளின் தாக்குதல்: செங்கடலுக்கு போர்க்கப்பலை அனுப்பிய டென்மார்க்

செங்கடலில் யேமனின் ஹூதி போராளிகளின் தாக்குதல்களுக்கு எதிராக வணிக போக்குவரத்தைப் பாதுகாக்க அமெரிக்க தலைமையிலான கூட்டணியில் பங்கேற்கும் முகமாக டென்மார்க் செங்கடலுக்கு ஒரு போர்க்கப்பலை அனுப்பியுள்ளது. காஸா போரில் ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் செங்கடல் வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனா். இஸ்ரேல் தொடா்பான கப்பல்கள் மீதுதான் தாக்குதல்பாவதாக முதலில் அவா்கள் கூறியிருந்தாலும், நாளடைவில் இஸ்ரேலுடன் தொடா்பில்லாத கப்பல்களும் அந்தப் படையினரின் தாக்குதலுக்குள்ளாகி வருகின்றன.

ஐரோப்பா

பிரித்தானியாவில் புகையிலை பாவனையில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க புதிய திட்டம்!

  • January 29, 2024
  • 0 Comments

ஒருமுறைப்ப பயன்படுத்தியப் பின் தூக்கிய எறியப்படும் வேப்களை குழந்தைகள் பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் பல திட்டங்களை இன்று (29.01) அறிவித்துள்ளார். இளைய தலைமுறையினர் புகையிலை வாங்குவதைத் தடுக்கும் சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் நோக்கத்தை அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். புதிய திட்டங்களின் கீழ், vape சுவைகள் மீது கட்டுப்பாடுகள் இருக்கும் என்றும், சாதாரண பேக்கேஜிங்கிற்கான தேவை, மற்றும் குழந்தைகளின் கவர்ச்சியை குறைக்கும் வகையில் vapes அல்லது e-சிகரெட்டுகள் பொதிசெய்யப்படுவதில் மாற்றங்கள் இருக்கும் என்றும் […]

இலங்கை

முல்லைத்தீவில் நீரில் மூழ்கி இளைஞர் ஒருவர் மாயம்!

  • January 29, 2024
  • 0 Comments

முல்லைத்தீவு, வாகத்தளன் பகுதி கடற்கரையில் மக்கள் குழுவுடன் நீராடச் சென்ற நபர் ஒருவர் நீரில் மூழ்கி நேற்று (28.01) காணாமல் போயுள்ளார். உறவினர்கள் குழுவுடன் வாகத்தளன் பிரதேசத்தில் உள்ள கடற்கரையில் நீராடச் சென்ற வேளையில் இவ்விபத்தில் சிக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். புதுக்குடியிருப்பு 10ஆம் கட்டை பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபரே நீரில் மூழ்கி மாயமாகியுள்ளது. கடற்படையினர், பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து காணாமல் போனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பான மேலதிக […]

பொழுதுபோக்கு

வில்லி நடிகையை கரெக்ட் செஞ்ச முரட்டு சிங்கிள்… யாருனு தெரியுமா?

  • January 29, 2024
  • 0 Comments

தன்னுடன் நடிக்கும் நடிகைகளுடன் தொடர்ந்து கிசுகிசுக்கப்பட்ட முரட்டு சிங்கிள், இப்போது ஒரு வழியாக வில்லி நடிகையை கரெக்ட் செய்து விட்டார். 40 வயது ஆகியும் நடிகர் தொடர் காதல் தோல்வியை சந்தித்தும், அதோடு சரியான பட வாய்ப்பு கிடைக்காமல் தவித்தார். அதன் பின் மீண்டும் உடல் எடையை குறைத்து தனது செகண்ட் இன்னிங்ஸில் மாநாடு, வெந்த தணிந்து காடு என அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார். இப்போது சிம்பு தன்னுடைய 48வது படத்தை தேசிங்கு […]