ஐரோப்பா

கிரேக்க அரசாங்கத்திற்கு எதிராக மத்திய ஏதென்ஸில் அணித்திரண்ட 15 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள்!

  • February 9, 2024
  • 0 Comments

கிரேக்கத்தின் பழமைவாத அரசாங்கத்தின் திட்டங்களுக்கு எதிராக பாரி போராட்டம் ஒன்று மத்திய ஏதென்ஸில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஏதென்ஸ் பல்கலைக்கழகத்தின் பிரதான கட்டிடத்திற்கு வெளியே கூடியிருந்த  ஒன்றுக்கூடிய 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட எதிர்ப்பாளர்கள் மேற்படி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர். பெரும்பாலான இளம் ஆர்ப்பாட்டக்காரர்கள் “கல்வியை கைவிடுங்கள்” என்று கோஷமிட்டனர். நுழைவாயிலுக்கு மேலே ஒரு மாபெரும் எதிர்ப்புப் பதாகையும் காட்சிப்படுத்தப்பட்டது. மாணவர் விண்ணப்பதாரர்களுக்கான தேசிய தேர்வு முறையின் கீழ் செயல்படும் கிளைகளை கிரீஸில் அமைக்க வெளிநாட்டு பல்கலைக்கழகங்களை அனுமதிக்க அரசாங்கம் விரும்புகிறது. கிளைகள் […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் போர் விமானத்தைச் செலுத்தி அசத்தும் 102 வயதுடைய நபர்

  • February 9, 2024
  • 0 Comments

பிரித்தானியாவில் 102 வயது Jack Hemmings என்ற நபர் போர் விமானத்தைச் செலுத்தி நிதி திரட்டுவதாக செய்தி வெளியாகியுள்ளது. முன்னாள் அரச விமான படையைச் சேர்ந்த விமானியான Jack இப்போது போர் விமானத்தைச் செலுத்தும் மிக வயதானவர் என்ற பெருமைக்குரியவராகியுள்ளார். 100 வயதுக்கு மேற்பட்ட, துடிப்பான சாகசப் பிரியரான அவர் இதைச் சுமையாகப் பார்க்காமல் சுகமாக விரும்பிச் செய்தார். Jack போர் விமானத்தைச் செலுத்துவது இது முதல் முறையல்ல. 19 வயதில் அவர் அரச விமான படையில் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

Google Map இல் காட்டுத் தீ பரவும் இடங்களையும் பார்க்கலாம்

  • February 9, 2024
  • 0 Comments

கூகுள் மேப் செயலியில் நாம் இருக்கும் இருப்பிடத்தின் வானிலை நிலவரம் மற்றும் காற்றின் தர விவரங்களை சரி பார்ப்பதற்கு புதிய அம்சத்தை கூகுள் அறிமுகம் செய்துள்ளது. உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு கூகுள் மேப்ஸ் பல வழிகளில் உதவுகிறது. நீங்கள் தெரியாத இடத்திற்கு சென்றால் கூட, அங்கு எதுபோன்ற விஷயங்கள் சிறப்பாக இருக்கும், எங்கெங்கு சுற்றிப் பார்க்கலாம் போன்ற விவரங்கள் அனைத்தையும் கூகுள் மேப் நமக்கு காட்டிக் கொடுத்துவிடும். இப்படி கூகுள் மேப்பின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், […]

ஆசியா

தெற்கு பிலிப்பைன்ஸில் பாரிய நிலச்சரிவு : நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மாயம்!

  • February 9, 2024
  • 0 Comments

தெற்கு பிலிப்பைன்ஸ் கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 11 பேரி உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.  அத்துடன் மேலும் 110 பேர் காணாமல்போயுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை இரவு, டாவோ டி ஓரோ மாகாணத்தில் உள்ள மசாரா என்ற தங்கச் சுரங்க மலை கிராமத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பல குடியிறுப்புகள் மண்ணுக்குள் புதையுண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  நேற்று (08.02) பிற்பகலில் இருந்து மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் […]

ஆசியா

ஜப்பானுக்கு சொந்தமான தீவை குறிவைக்கிறதா சீனா : போர்கப்பல்களை அனுப்பியதால் பரபரப்பு!

  • February 9, 2024
  • 0 Comments

ஜப்பானிற்கு சொந்தமான கடல் வழியாக சீன கப்பல்கள் பயணிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறித்த நடவடிக்கை பல வாரங்களாக நீடிப்பதாக தெரிவிக்கப்படுகிறது. சீனாவின் போர்க்கப்பல்கள் ஜப்பானின் தென்மேற்குத் தீவுகளுக்கு அருகில் சமீப நாட்களில் வந்து செல்வதாகவும் ஜப்பானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வியாழனன்று நான்கு சீனக் கடலோரக் காவல்படைக் கப்பல்கள் ஜப்பானின் கட்டுப்பாட்டில் உள்ள தீவுகளின் எல்லைக்கு வெளியே கடந்து சென்றதாக பெய்ஜிங் கூறியுள்ளது. ஜப்பானிய மொழியில் சென்காகு என்று அழைக்கப்படும் தீவுகளை மேலும் நெருங்குவதற்கு எதிராக சீனாவின் கப்பல்களை […]

செய்தி

ஜெர்மனியில் தந்தை – மாமாவுக்கு இளைஞன் செய்த அதிர்ச்சி செயல்

  • February 9, 2024
  • 0 Comments

ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் சந்தேகத்திற்கிடமான கத்திக்குத்து தாக்குதலில் இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். ஹாம்பர்க் மாவட்டத்தில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸாருக்கு தகவல் கிடைத்த நிலையில் சம்பவ இடத்திற்கு பொலிஸார் வருகைதந்துள்ளனர். சனிக்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். தாக்குதலாளி 32 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டார். வடக்கு ஜேர்மன் நகரின் பில்ஸ்டெட் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நண்பகல் வேளையில், சந்தேக நபருக்கும் பாதிக்கப்பட்ட இருவருக்குமான வாக்குவாதத்தைத் தொடர்ந்து, 58 […]

ஆசியா

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கான இழப்பீட்டு தொகை அதிகரிப்பு!

  • February 9, 2024
  • 0 Comments

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கான இழப்பீடு தொகையை மனிதவள அமைச்சகம் உயரத்தவுள்ளது. வேலையிடங்களில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கான இழப்பீடு தொகையே இவ்வாறு அதிகரிக்கப்படவுள்ளது. ஊழியர்களின் சம்பள உயர்வு மற்றும் மருத்துவ செலவினங்களின் அதிகரிப்புக்கு ஏற்ப அவர்களுக்கான இழப்பீடு தொகை உயரும் என கூறப்படுகிறது. இந்த புதிய மாற்றங்கள் அடுத்த ஆண்டு 2025 நவம்பர் முதல் நடப்புக்கு வரும் என சொல்லப்பட்டுள்ளது. வேலையிடத்தில் ஏற்படும் விபத்தின் தன்மையை பொறுத்து இழப்பீட்டு தொகை வரம்பு மாறுபடும் என்பது குறிப்பிடத்தகக்கத்து. அதாவது, […]

ஐரோப்பா

துனிசிய கடற்பகுதியில் படகு கவிழ்ந்து விபத்து : 13 பேர் உயிரிழப்பு!

  • February 9, 2024
  • 0 Comments

துனிசிய கடற்பகுதியில் சிறிய ரக படகொன்று மூழ்கியதில் 13 சூடான் குடியேறிகள் உயிரிழந்துள்ளதுடன், 27 பேர் காணாமல்போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. துனிசிய கடலோரக் காவல்படையினர் செப்பா துறைமுகத்தின் கடற்கரையிலிருந்து 14 கிலோமீட்டர் (ஒன்பது மைல்) தொலைவில் கவிழ்ந்த படகில் இருந்து இரண்டு பேரை மட்டுமே காப்பாற்ற முடிந்தது, மேலும் காணாமல் போனவர்களைத் தேடி வருவதாக பிராந்திய நீதிமன்ற செய்தித் தொடர்பாளர் ஃபரித் பென் ஜா கூறினார். சூடானில் இருந்து மொத்தம் 42 பேர் கப்பலில் இருந்ததாக உயிர் பிழைத்தவர்கள் […]

செய்தி

பிரிந்த காதலர்களின் பெயரை கரப்பான் பூச்சிக்கு வைக்க வாய்ப்பு வழங்கும் அமெரிக்கா

  • February 9, 2024
  • 0 Comments

அமெரிக்க மிருகக்காட்சிசாலை ஒன்றில் பெப்ரவரி 14ம் திகதி கொண்டாடப்படும் காதலர் தினத்தை யொட்டி வித்தியாசமான வாய்ப்பு ஒன்றை வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் காதலன்/காதலியின் பெயரில் கரப்பான் பூச்சி ஒன்றிற்கு பெயரிடும் வாய்ப்பை இவ்வாறு டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள மிருகக்காட்சிசாலை வழங்குகிறது. அதற்காக 10 அமெரிக்க டொலர்கள் அரவிடப்படுவதாகவும் , அதன் பின் அவர்களுக்கு டிஜிட்டல் அட்டை ஒன்று வழங்கப்படும் . அதனை முன்னாள் காதலர்களுக்கு அனுப்பி , இவ்வாறு இந்த கரப்பான் பூச்சி அவர்களின் பெயரில் பெயரிடப்பட்டுள்ளதாக அறிவிக்க […]

இலங்கை

இலங்கை – ஆனமடுவ பகுதியில் துப்பாக்கிச்சூடு!

  • February 9, 2024
  • 0 Comments

இலங்கை – ஆனமடுவ தட்டேவ பிரதேசத்தில் நேற்று (08.02) பிற்பகல் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் ஒருவர் காயமடைந்து ஆனமடுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். பின்னர், காயமடைந்தவர் மேலதிக சிகிச்சைக்காக புத்தளம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். ஆனமடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார். துப்பாக்கிச் சூடு நடத்தியவர் தப்பிச் சென்றுள்ளதுடன், தனிப்பட்ட தகராறு காரணமாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.