கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்வதில் சிக்கல் : குடிவரவு குடியகழ்வு திணைக்களத்திற்கு முன் பதற்றம்!
குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தின் மாத்தறை பிராந்திய அலுவலகத்திற்கு முன்பாக இன்று (13) காலை பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. வெளிநாட்டு கடவுச்சீட்டு வழங்குவதில் ஏற்பட்ட தாமதமே இதற்குக் காரணம். குடிவரவு திணைக்களத்தின் மாத்தறை பிராந்திய காரியாலயத்திற்கு வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை தயாரிப்பதற்காக நாளாந்தம் ஏராளமானோர் வருகின்றனர். இந்த அலுவலகத்தில் இருந்து ஒரு நாள் சேவையின் கீழ் சுமார் 150 பேருக்கு வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் வழங்கப்படுகின்றன. எனினும் வெளிநாட்டு கடவுச்சீட்டு வழங்குவதற்கான முறையான முறைமை இல்லாததால் அங்கு வரும் மக்கள் கடும் […]













