வட அமெரிக்கா

கனடா- தந்தையை கொடூரமாக கொலை செய்த இந்திய வம்சாவளி இளைஞர் : பொலிஸார் வலைவீச்சு!

கனடாவில் இந்திய வம்சாவளி இளைஞர் ஒருவர் தனது தந்தையை கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்ட நிலையில், பொலிஸார் அவர் தொடர்பில் எச்சரிக்கை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்கள்.

சனிக்கிழமை மாலை 7.40 மணியளவில், கனடாவின் ஒன்ராறியோவில் அமைந்துள்ள வீடு ஒன்றில் ஏதோ பிரச்சினை என தகவல் கிடைத்ததையடுத்து பொலிஸார் அங்கு விரைந்துள்ளனர்.

அந்த வீட்டுக்குள் குல்தீப் சிங் (56) என்னும் நபர் இரத்தவெள்ளத்தில் கிடப்பதைக் கண்ட பொலிஸார், உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். ஆனாலும், சிகிச்சை பலனின்றி சிங் உயிரிழந்துவிட்டார்.

8 held for killing Indian-origin teen in Israel : The Tribune India

தந்தையுடன் ஏற்பட்ட தகராறின்போது சிங்குடைய மகனான சுகஜ் சிங் சீமா (22) என்னும் இளைஞர் அவரை கடுமையாக தாக்கியதாக கருதப்படுகிறது.தந்தையைத் தாக்கிவிட்டு சீமா வாகனம் ஒன்றில் தப்பியோடிவிட்டார்.

பொலிஸார் கொலை வழக்குப் பதிவு செய்து சீமாவை தீவிரமாகத் தேடி வரும் நிலையில், அவர் ஆபத்தானவர் என்றும், அவர் ஆயுதம் வைத்திருப்பதால் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்றும் மக்களை எச்சரித்துள்ளனர்.அத்துடன், அவரைக் குறித்து ஏதாவது தகவல் கிடைத்தால் உடனடியாக தங்களைத் தொடர்புகொள்ளுமாறும் பொலிஸார் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.

(Visited 2 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்

You cannot copy content of this page

Skip to content