பொழுதுபோக்கு

யாழ்ப்பாணத்தின் அழகை ரசிக்கும் தென்னிந்திய பிரபலங்கள்.. எங்கு சென்றார்கள் தெரியுமா?

  • February 13, 2024
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் பெரும் குழப்பங்களுக்கு மத்தியில் நடைபெற்ற ஹரிஹரன் இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வருகைதந்திருந்த தென்னிந்திய பிரபலங்கள் யாழ்ப்பாணத்தின் அழகை ரசித்து வருகின்றனர். இவர்கள் யாழ்ப்பாணத்தில் பிரசித்தி பெற்ற பல இடங்களுக்குச் சென்று வருகின்றனர். அந்த வகையில், வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ். நயினாதீவு நாகபூசணி அம்மன் தேவஸ்தானத்திற்கு ​சென்ற தென்னிந்திய பிரபலங்கள் வழிபாட்டில் ஈடுபட்டுள்ளனர். தென்னிந்திய நடன இயக்குனர் கலா மாஸ்டர், திரையுலக முன்னணி நகைச்சுவை நடிகர் யோகி பாபு ஆகியோர் விஷேட பூசைகளில் கலந்து கொண்டதுடன் ஆலயத்தில் […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் தொழில் இருந்தும் வீதிகளில் உறங்கும் மக்கள்

  • February 13, 2024
  • 0 Comments

வாடகை வீட்டு நெருக்கடியால் தெருக்களில் வாழும் ஆஸ்திரேலியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் வீட்டு வசதிக்கான கோரிக்கைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வேலை இருந்தும் வீடில்லாமல் தவிக்கும் ஆஸ்திரேலியர்களின் எண்ணிக்கை 20 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. சிட்னி பெருநகரப் பகுதி மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கட்டுப்படியாகாத அளவுக்கு வீட்டு விலைகள் உயர்ந்துள்ளதால், சிட்னி குடியிருப்பாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த டிசம்பரில் வீடற்றோர் குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், வீட்டுப் பிரச்னை பொருளாதாரத்தில் மட்டுமின்றி குடும்ப வன்முறைக்கும் பரவியிருப்பது தெரியவந்துள்ளது. […]

வாழ்வியல்

பெண்களின் முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க இலகுவான வழிமுறைகள்

  • February 13, 2024
  • 0 Comments

பெண்களின் பலருக்கும் கண்ணம் மற்றும் தாடை பகுதிகளில் சிறு சிறு முடிகள் காணப்படும் இதை பூனை முடி என்றும் கூறுவார்கள். இந்த முடிகளை இயற்கையான முறையில் நீக்குவது எப்படி என்றும் இது ஏன் வருகிறது என்றும் இப்பதிவில் தெரிந்து கொள்வோம். முகத்தில் முடி வளர காரணங்கள் நீர்கட்டிகள் , ஹார்மோன் பிரச்சனை உள்ள பெண்களுக்கும் பைப்ராய்டு கட்டி போன்று கர்ப்பப்பையில் ஏதேனும் தொந்தரவுகள் இருந்தாலும் ஆண்களுக்கு சுரக்கக்கூடிய ஆண்ட்ரோஜன் அதிகமாக சுரக்கும். இதனால் பெண்களின் கண்ணம் மற்றும் […]

இலங்கை

இலங்கையில் காதலனுக்கு அதிர்ச்சி கொடுத்த காதலி

  • February 13, 2024
  • 0 Comments

கம்பளையில் காதலனை கத்தியால் குத்தி காயப்படுத்திய யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 19 வயதுடைய யுவதியாவார். இவர் 22 வயது இளைஞர் ஒருவருடன் ஒன்றரை வருட காலமாக காதலித்து வந்துள்ளார். இந்த இளைஞர் கடந்த சில நாட்களாக யுவதியுடனான காதலை முறித்துக் கொள்ள முயன்ற நிலையில் இது தொடர்பில் யுவதியிடம் கூறியுள்ளார். இந்நிலையில் இந்த யுவதி, இளைஞருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பில் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் […]

ஐரோப்பா

ஜெர்மனியில் வேலைக்கு செல்வதனை தவிர்க்கும் மக்கள் – பல இடங்களில் கடும் நெருக்கடி

  • February 13, 2024
  • 0 Comments

ஜெர்மனியில் பலர் உடல் நல குறைவால் வேலைக்கு செல்வதை தவிக்கின்றார்கள் என்ற கருத்து கணிப்பு வெளியாகியுள்ளது. அண்மைக்காலங்களாக ஜெர்மனியில் தொழில் புரிபவர்கள் தங்களது உடல் நலத்தை கருத்தில் கொண்டு குறிப்பாக சுகயீனம் காரணமாக பல நாட்களாக வேலைக்கு செல்வது இல்லை என்ற ஒரு அறிக்கை வெளியாகியுள்ளது. அதாவது கொவிட் காலத்துக்கு பின் இவ்வாறு நோய்வாய்படுகின்றவர்களின் எண்ணிக்கையானது கணிசமாக அதிகரிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சாதாரணமாக வேலை நாட்களில் வேலை செய்கின்றவர்களின் எண்ணிக்கையில் குறைவு ஏற்படுவதால் அலுவலகங்கள், உணவகங்கள் தொழிற்சாலைகள்,சுப்பர் […]

வட அமெரிக்கா

ட்ரம்ப்பின் கருத்தால் அமெரிக்க, ஐரோப்பிய வீரர்களுக்கு ஆபத்து – எச்சரிக்கும் நேட்டோ

  • February 13, 2024
  • 0 Comments

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் கருத்து அமெரிக்க, ஐரோப்பிய வீரர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என நேட்டோ கூட்டணியின் தலைவர் Jens Stoltenberg தெரிவித்துள்ளார். கூட்டணி நாடுகள் ஒன்றையொன்று தற்காத்துக் கொள்ளமாட்டாது என்று சொல்வது அதன் பாதுகாப்பைக் கீழறுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நேட்டோ கூட்டணி ஒற்றுமையாய் வலுவாக எந்தத் தாக்குதலையும் எதிர்கொள்ளும் என Stoltenberg உறுதியளித்தார். தற்காப்புக்காகக் குறைவாகச் செலவிடும் நேட்டோ கூட்டணியைப் பாதுகாக்கத் தேவையில்லை என டிரம்ப் கூறியிருந்தார். சவுத் கரோலைனாவில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

Chatbot-ஐ Gemini என பெயர் மாற்றம் செய்தது கூகுள் நிறுவனம்!

  • February 13, 2024
  • 0 Comments

இந்த நவீன உலகத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி என்பது வேகமாக அதிகரித்து வருகிறது என்ற கூறலாம். இதில் குறிப்பாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (AI) தற்போது வளம் வந்துகொண்டிருக்கிறது. நாம் பயன்படுத்தும் ஸ்மார்போன்கள் முதல் அனைத்திலும் இந்த தொழில்நுட்பம் காணப்படுகிறது. சாட்ஜிபிடியை தொடர்ந்து பல்வேறு ஏஐ தொழில்நுட்பம் அறிமுகமாகும் நிலையில், அதை பயன்படுத்துவோரின் எண்ணிகை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கூகுள் நிறுவனம், தங்களது Bard என்ற செயற்கை நுண்ணறிவு Chatbot-ஐ, Gemini என பெயர் மாற்றம் செய்வதாக […]

இந்தியா இலங்கை

பிரான்ஸிற்கு பிறகு, இலங்கை, மொரிஷியஸில் UPI சேவைகள் ஆரம்பம்

  • February 13, 2024
  • 0 Comments

பிரான்ஸில் UPI சேவைகள் தொடங்கப்பட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு, இலங்கை மற்றும் மொரீஷியஸ் ஆகியவை இந்திய டிஜிட்டல் கட்டண முறையைச் செயல்படுத்தும் சமீபத்திய நாடுகளாகியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, மொரிஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் மற்றும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் வெளியீட்டு நிகழ்வைக் காணச் சென்றார். மொரிஷியஸிலும் நேற்று ரூபே அட்டைகள் அறிமுகம் செய்யப்பட்டன. இலங்கைக்கு வரும் இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு டிஜிட்டல் முறையில் UPI மூலம் QR குறியீட்டைப் பயன்படுத்தி பணம் செலுத்தும் […]

ஐரோப்பா செய்தி

​பிரித்தானியரின் சர்ச்சைக்குரிய பயணம் – லண்டன் விமான நிலையத்தில் பாதுகாப்பு பிரச்சினை

  • February 13, 2024
  • 0 Comments

பிரித்தானிய நாட்டை சேர்ந்த ஒருவர் கடவுச்சீட்டு உள்ளிட்ட எந்த ஆவணங்களும் இன்றி, அமெரிக்காவின் நியூயார்க் நகரத்திற்கு பயணித்துள்ள சம்பவம் பாரிய பாதுகாப்பு பிரச்சினைக்கு காரணமாகியுள்ளது. லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து குறித்த பயணி தனது பயணத்தை மேற்கொண்டுள்ளார். குறித்த விவகாரத்தில் விமான நிலையம் பதிலளிக்க வேண்டும் என்று உள்விவகார செயலாளர் James Cleverly கோரியுள்ளார். அதிர்ச்சியடையவைக்கும் இந்த சம்பவமானது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23ம் திகதி நடந்துள்ளது. 46 வயதான Craig Sturt என்ற […]

இலங்கை செய்தி

இலங்கை கையடக்கத் தொலைபேசி பயனாளர்களுக்கு விசேட அறிவிப்பு

  • February 13, 2024
  • 0 Comments

இலங்கை கையடக்கத் தொலைபேசி பயனாளர்களுக்கு விசேட அறிவிப்ப இலங்கையில் கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் தமது சிம் அட்டையை முறையாகப் பதிவு செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு இதனை அறிவித்துள்ளது. ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் மேனகா பதிரண இதனை தெரிவித்துள்ளார். நீங்கள் தற்போது பயன்படுத்தாத தொலைபேசி நிறுவனங்களில், உங்கள் பெயரில் உள்ள சிம் அட்டை பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்க தொலைபேசி நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளலாம் என்று அவர் […]