ஆசியா செய்தி

இந்தியா மற்றும் UAE இடையே கையெழுத்தான பல்வேறு ஒப்பந்தங்கள்

  • February 13, 2024
  • 0 Comments

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் முகமது பின் சயீத் அல் நஹ்யான் இருதரப்பு சந்திப்பை நடத்தினர், மேலும் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அபுதாபியில் அவர்கள் முன்னிலையில் பரிமாறிக்கொள்ளப்பட்டன. “முதலில், உங்கள் அன்பான வரவேற்புக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த ஏழு மாதங்களில் நாங்கள் ஐந்து முறை சந்தித்தோம், இது மிகவும் அரிதானது. எனக்கும் ஏழு முறை இங்கு வரும் வாய்ப்பு கிடைத்தது,ஒவ்வொரு துறையிலும் நாம் முன்னேறிய விதத்தில், ஒவ்வொரு […]

இலங்கை

அரசியல் தலைவர்கள் முன்னெடுத்த செயற்பாடுகளே நாடு இந்த நிலைமைக்கு செல்வதற்கான காரணம் : வியாழேந்திரன்

காலம்காலமாக இந்த நாட்டினை ஆட்சிசெய்த அரசியல் தலைவர்கள் முன்னெடுத்த செயற்பாடுகளே இன்று இந்த நாடு இந்த நிலைமைக்கு செல்வதற்கான காரணம் என வர்த்தக,கூட்டுறவுத்துறை இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். ஏறாவூர் கூட்டுறவு சங்கத்தின் பணியாளர்களுக்கு ஊக்குவிப்பு வழங்கலும் தேசியத்தில் சாதணை படைத்த மாணவர்கள் கௌரவிப்பு மற்றும் கூட்டுறவாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இதன்போது ஏறாவூர் கூட்டுறவு சங்கத்தின் கீழ் செயற்படும் வைத்தியசாலை மற்றும் பெற்றோல் நிரப்பு நிலையம்,சுப்பர்மார்க்கட் உட்பட பல்வேறு பகுதிகளிலும் கடமையாற்றும் ஊழியர்கள் […]

விளையாட்டு

CSK அணியின் பிராண்டு அம்பாசிடராக பாலிவுட் நடிகை நியமனம்

  • February 13, 2024
  • 0 Comments

17-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் லீக் வருகிற மார்ச் மற்றும் மே மாதங்களில் நடத்தப்படுகிறது. ஐ.பி.எல். போட்டியை மார்ச் 22-ந்தேதி தொடங்கி மே இறுதி வரை நடத்த ஐ.பி.எல். நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் ஐபிஎல் சீசன் தொடங்குவதற்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறித்த முக்கியமான தகவல்கள் அடுத்ததுடத்து வெளிவருகின்றன. சமீபத்தில் சிஎஸ்கே அணி ஐக்கிய அரபு எமிரேட்ஸின் எதிஹாட் ஏர்வேஸ் நிறுவனத்தின் ஸ்பான்சர்ஷிப் உரிமையைப் பெற்றது. தற்போது மற்றொரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. அது […]

உலகம்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இத்தாலியின் பாதுகாப்பு அமைச்சர்

இத்தாலிய பாதுகாப்பு அமைச்சர் கைடோ க்ரோசெட்டோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அவரது அமைச்சகம் தெரிவித்துள்ளது. அவர் கடுமையான மார்பு வலியால் அவதிப்பட்டார் எனவும் இந்நிலையில் பெரிகார்டிடிஸ் என சந்தேகிக்கப்படும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் 60 வயதான க்ரோசெட்டோ, தற்போது மிகவும் நல்ல நிலையில் இருப்பதாகவும் ஆனால் சுகாதார சோதனைகள் இன்னும் நடந்து வருகின்றன” என்று அமைச்சக வட்டாரம் மேலும் கூறியது.  

இந்தியா

வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி இளம்பெண் கூட்டு பலாத்காரம்… பொலிஸாரிடம் சிக்கிய 4 பேர் கும்பல்!

  • February 13, 2024
  • 0 Comments

ஹரியாணா மாநிலம், குருகிராமில் வேலை வாங்கித் தருவதாக கூறி 35 வயது பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த 4 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 35 வயது பெண், ஹரியாணா மாநிலம் குருகிராமில் உள்ள சக்கர்பூர் கிராமத்தில் வாடகை வீட்டில் தங்கி வேலை தேடி வந்தார். இவர் அப்பகுதியில் தனியார் வேலை வாய்ப்பு நிறுவனம் ஒன்றை அணுகி வேலை தொடர்பாக விசாரித்துள்ளார். அந்த நிறுவனத்தை சேர்ந்த ஜெஃப்ரின் கல்கோ (எ) அருண்குமார் என்ற […]

ஆசியா

ரஃபா மீதான இஸ்ரேலின் தாக்குதலை உடன் நிறுத்துமாறு அமெரிக்கா கோரிக்கை

ரஃபா நகர் மீது இஸ்ரேலின் தாக்குதலை உடன் நிறுத்த வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். 1 மில்லியனுக்கும் அதிகமான மக்களின் பாதுகாப்பையும் ஆதரவையும் உறுதி செய்வதற்கான நம்பகமான திட்டம் இல்லாமல் தொடரக்கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுளளார். ரஃபா நகர் மீது இஸ்ரேல் மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் 67 கொல்லப்பட்டுள்ளதாக பலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை

சுகாதார சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக்கும் வர்த்தமானி வெளியீடு!

  • February 13, 2024
  • 0 Comments

சுகாதார சேவைகள் அத்தியாவசிய சேவைகள் தொடர்பான பல சேவைகளை உள்ளடக்கிய விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் இது வெளியிடப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள், மருந்தகங்கள் மற்றும் பிற ஒத்த நிறுவனங்களில் நோயாளிகளின் பராமரிப்பு மற்றும் வரவேற்பு, பராமரிப்பு, உணவு மற்றும் சிகிச்சை தொடர்பாக தேவைப்படும் அல்லது செய்ய வேண்டிய அனைத்து சேவைப் பணிகள் அல்லது உழைப்பு அத்தியாவசிய சேவைகளாக ஆக்கப்படுகின்றன.

இலங்கை

அஸ்வெசும – இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்ப திகதி அறிவிப்பு!

அஸ்வெசும நலன்புரி வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பம் கோரல் நாளை மறுதினம் முதல் ஆரம்பிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அஸ்வெசும நலன்புரி வேலைத்திட்டம் தொடர்பில், மாகாண ஆளுநர் மற்றும் பிரதம செயலாளர்களுக்கு தெளிவூட்டுவதற்கான கலந்துரையாடல் ஒன்று, இன்றைய தினம் நிதியமைச்சில் இடம்பெற்ற போது, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். முதலாம் கட்டத்தில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்திப்பதன் ஊடாக, இரண்டாம் கட்டத்தை நிறைவுறுத்தும் போது, 24 பேருக்கு அஸ்வெசும நலன்புரி திட்டத்தை வழங்க […]

இலங்கை

அட்டுலுகம சிறுமி கொலை – குற்றவாளிக்கு 27 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்த மேல் நீதிமன்றம்

  • February 13, 2024
  • 0 Comments

9 வயது சிறுமியை கடத்திச் சென்று சேற்றில் மூழ்கடித்து கொலை செய்த குற்றச்சாட்டில் குற்றத்தை ஒப்புக்கொண்ட பிரதிவாதிக்கு இன்று (13) 27 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.பாணந்துறை மேல் நீதிமன்ற நீதிபதி சமன் குமாரவினால் இந்த தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. சுமார் இரண்டரை வருடங்களுக்கு முன்னர், பாணந்துறை – அட்டுலுகம பிரதேசத்தில் இந்தக் குற்றம் இடம்பெற்றுள்ளது.திட்டமிடப்படாத கொலை மற்றும் சிறுமியை அவரது தாயின் வசம் இருந்து கடத்திச் சென்றதற்காக அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட பரூக் முகமட் […]

வட அமெரிக்கா

அமெரிக்கா-ரயில் நிலையத்தில் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்திய மர்மநபர்… ஒருவர் பலி; ஐவர் படுகாயம்!

  • February 13, 2024
  • 0 Comments

அமெரிக்காவின் நியூயார்க் நகரம், பிராங்க்ஸில் ரயில் நிலையத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர். அமெரிக்காவின் நியூயார்க் நகரம் பிராங்க்ஸில் மவுன்ட் ஈடன் ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையத்தில் நேற்று மாலை மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில் 4 ஆண்கள், 2 பெண்கள் படுகாயமடைந்தனர். பாதிக்கப்பட்டவர்கள் 14 முதல் 71 வயதுக்கு உட்பட்டவர்களாவர். இவர்கள் அனைவரும் அருகில் உள்ள செயின்ட் பர்னபாஸ் மருத்துவமனையில் […]