இலங்கை

களுபோவில ஹத்போதிய பிரதேசத்தில் 1,000 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

  • March 2, 2024
  • 0 Comments

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து மோட்டார் சைக்கிளில் 1000 போதைப்பொருள் கடத்திய நபர் களுபோவில ஹத்போதிய பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை (01) கைது செய்யப்பட்ட சந்தேக நபர் களுபோவில பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடையவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக கொஹுவல பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

ஆசியா

ஜப்பானில் 5.1 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கம்..

  • March 2, 2024
  • 0 Comments

ஜப்பானில் உள்ள ஹாராவில் நேற்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. மாலை 4.49 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவாகியுள்ளது. ஜப்பானின் ஹரா பகுதியில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின. இதனால், மக்கள் அச்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாகஎந்த தகவலும் இல்லை. ஜப்பானில் உள்ள ஷிகோகுவில் கடந்த வாரம் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கமும் ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவாகியிருந்தது. ரிங்க் ஆப் பயர் எனப்படும் […]

இந்தியா

மீண்டும் வாராணசியில் போட்டயிடும் பிரதமர் மோடி

வரும் மக்களவைத் தேர்தலில் வாராணசி தொகுதியில் பிரதமர் மோடி மீண்டும் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் திகதியை தோ்தல் ஆணையம் விரைவில் அறிவிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதனிடையே, தொகுதிப் பங்கீடு மற்றும் வேட்பாளா்களை இறுதி செய்யும் பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளன. ஆளும் பாஜகவும் தோ்தல் முன்னேற்பாடு பணிகளை முடக்கிவிட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா ஆகியோா் பல்வேறு […]

ஐரோப்பா

நோர்வே மன்னர் மருத்துவமனையில் அனுமதி!

  • March 2, 2024
  • 0 Comments

​மலேசியாவின் ரிசார்ட் தீவான லங்காவியில் உள்ள மருத்துவமனையில் நோர்வே மன்னர் ஹரால்டுக்கு  இதயமுடுக்கி பொருத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பாவின் மூத்த மன்னர் இந்த வாரம் விடுமுறையின் போது தொற்றுநோய்க்கு சிகிச்சை பெற்றார் என்று நோர்வே அரச மாளிகை தெரிவித்துள்ளது. குறைந்த இதயத் துடிப்பு காரணமாக இதயமுடுக்கி பொருத்தப்பட்டது’ என நோர்வேயின் ராயல் ஹவுஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.  இதன்காரணமாக அவருக்கு ஓய்வு தேவைப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. லங்காவியில் ஒரு தனியார் விடுமுறையின் போது உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் ஐரோப்பாவின் மிகப் பழமையான […]

ஐரோப்பா

லண்டனில் துப்பாக்கிச்சுட்டில் மூவர் படுகாயம்: துப்பாக்கிதாரிகள் தப்பியோட்டம்

லண்டனில் கிளாப்ஹாம் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டின் போது மூன்று பேர் காயமடைந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது உள்ளூர் நேரப்படி மதியத்திற்கு மேல் 4.59 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளதாக பொலிஸ் தரப்பில் உறுதிப்படுத்தியுள்ளனர். சம்பவயிடத்தில் மூவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக லண்டன் ஆம்புலன்ஸ் சேவையும் உறுதி செய்துள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கியால் பெண் மீது சுட்டுள்ளனர். மட்டுமின்றி அந்த இருவரும் சம்பவயிடத்தில் இருந்தும் தப்பியுள்ளனர்.

இலங்கை

இலங்கையில் மாணவர்களை கொடூரமாக தாக்கிய ஆசிரியர்!

  • March 2, 2024
  • 0 Comments

பாதுக்க பகுதியில் ஆசிரியர் ஒருவரால் தாக்கப்பட்ட மாணவர்கள் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. சிகிச்சைப் பெற்று வருபவர்களில் ஒரு மாணவர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஏனைய இருவரின் நிலை சீராக இருப்பதாகவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். பாதுக்க நகரில் அமைந்துள்ள அரச பாடசாலை ஒன்றில் 10ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் குழுவொன்றே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட ஆசிரியரால் ஏழு மாணவர்கள் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பில்பாதுக்க பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி பாதுக்க பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இலங்கை

திருகோணமலை- டொக்யாட் கடற்கரையில் கரையொதுங்கிய ஆணொருவரின் சடலம்!

  • March 2, 2024
  • 0 Comments

திருகோணமலை- டொக்யாட் கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆணொருவரின் சடலமொன்று இன்று (01) மாலை கரையொதுங்கியுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். திருகோணமலை கடலில் மிதந்துகொண்டிருந்த நிலையில் குறித்த சடலத்தினை அவதானித்த காவல்துறையின் உயிர் காக்கும் படையினர் கடலுக்குச் சென்று குறித்த சடலத்தினை கரைக்கு எடுத்து வந்துள்ளனர். இதுவரை இனங்காணப்படாத நிலையில் இடது கால் இழக்கப்பட்ட அங்கவீனமான ஒருவரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுவரும் நிலையில் இதுவரை மரணத்திற்கான காரணம் தெரியவில்லை எனவும் குறிப்பிடப்படுகின்றது. சுடலத்தை இனம் காண்பதறகான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் […]

ஐரோப்பா

ரஷ்யாவின் பார்வை பால்கன் மீது திரும்புகிறது: கொசோவோவின் ஜனாதிபதி எச்சரிக்கை

ரஷ்யா பால்கன் மீது தனது பார்வையை வைத்துள்ளது” மற்றும் மேற்கு நாடுகளுக்கு எதிராக ஒரு புதிய முன்னணியைத் திறக்க விரும்புகிறது” என்று கொசோவோவின் ஜனாதிபதி Vjosa Osmani கூறியுள்ளார். ரஷ்யா-உக்ரைன் போரின் விளைவு உலகிற்கு முன்னுதாரணமாக இருக்கும் என்று குறிப்பிட்ட அவர், “உக்ரைன் விரும்பும் அமைதியை” கொசோவோ ஆதரிப்பதாகவும், சட்டத்தின் அடிப்படையில் உலக ஒழுங்கை உருவாக்குவதாகவும் கூறியுள்ளார். மேலும் உக்ரைனுக்கு எதிரான மாஸ்கோவின் ஆக்கிரமிப்பில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தன்னைப் பற்றி மட்டுமே கவலைப்படுகிறார். அவரது […]

இலங்கை

பொரளை துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கைது

  • March 2, 2024
  • 0 Comments

பொரளையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 19 ஆம் திகதி பொரளை ஆனந்த ராஜகருணா மாவத்தையைச் சேர்ந்த ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ய முயற்சித்த சந்தேகநபரே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கொழும்பு தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் கிராண்ட்பாஸ் சேதவத்த பிரதேசத்தில் வைத்து குறித்த சந்தேகநபர் இன்று (02) கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் குற்றச் செயலுக்கு சந்தேகநபர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் பறிமுதல் […]

ஐரோப்பா

ஜேர்மன்- குழந்தை உட்பட நால்வரை சுட்டு கொலை செய்த ராணுவ வீரர் !

  • March 2, 2024
  • 0 Comments

ஜேர்மனியில் குழந்தை உட்பட நான்குபேரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற ராணுவ வீரர் ஒருவர் பொலிஸில் சரணடைந்துள்ளார். ஜேர்மனியின் Lower Saxony மாகாணத்திலுள்ள Westervesede மற்றும் Bothel என்னும் இடங்களில் அமைந்துள்ள இரண்டு வீடுகளுக்கு பொலிஸார் அழைக்கப்பட்டார்கள். அந்த இரண்டு வீடுகளிலுமாக, ஒரு குழந்தை உட்பட நான்குபேரின் உயிரற்ற உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள். முந்தைய இரவு அவர்கள் கொல்லப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில், அந்த சம்பவங்கள் தொடர்பாக, ராணுவ வீரர் ஒருவர் பொலிஸில் சரணடைந்துள்ளார். அவரைக் கைது செய்துள்ள பொலிஸார் […]