ஐரோப்பா

நோர்வே மன்னர் மருத்துவமனையில் அனுமதி!

​மலேசியாவின் ரிசார்ட் தீவான லங்காவியில் உள்ள மருத்துவமனையில் நோர்வே மன்னர் ஹரால்டுக்கு  இதயமுடுக்கி பொருத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பாவின் மூத்த மன்னர் இந்த வாரம் விடுமுறையின் போது தொற்றுநோய்க்கு சிகிச்சை பெற்றார் என்று நோர்வே அரச மாளிகை தெரிவித்துள்ளது.

குறைந்த இதயத் துடிப்பு காரணமாக இதயமுடுக்கி பொருத்தப்பட்டது’ என நோர்வேயின் ராயல் ஹவுஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.  இதன்காரணமாக அவருக்கு ஓய்வு தேவைப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லங்காவியில் ஒரு தனியார் விடுமுறையின் போது உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் ஐரோப்பாவின் மிகப் பழமையான மன்னரான ஹரால்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அரச மாளிகை செவ்வாயன்று கூறியமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்