இந்தியா

கர்நாடகா – 10ம் வகுப்பு மாணவியை கழுத்தை அறுத்துக்கொலை செய்த வாலிபர் ரயிலில் பாய்ந்து தற்கொலை!

  • March 5, 2024
  • 0 Comments

காதலை ஏற்க மறுத்த 10-ம் வகுப்பு மாணவியை கழுத்தை அறுத்துக் கொடூரமாக கொலை செய்த வாலிபர், ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம், ஹாசன் மாவட்டம், அரசிகெரோ தாலுகா பெல்கும்பா கிராமத்தைச் சேர்ந்தவர் சாந்தி(14, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் பெல்கும்பா அரசு உயர் நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இதே ஊரைச் சேர்ந்த சரத்(23) என்ற வாலிபர், சாந்தியை ஒருதலையாக காதலித்து வந்தார். பலமுறை சாந்தியிடம் தனது காதலை சரத் […]

ஆசியா

ராணுவ பட்ஜெட்டை 7.2 சதவீதமாக உயர்த்திய சீனா..

  • March 5, 2024
  • 0 Comments

சீனாவில் தேசிய மக்கள் காங்கிரஸ் ஆண்டு கூட்டம் இன்று தொடங்கியது. துவக்க அமர்வில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில் ராணுவத்திற்கான பட்ஜெட் 7.2 சதவீதம் அதிகரிக்கப்பட்டிருப்பதாக அரசு அறிவித்துள்ளது. அதாவது, 2024-ம் ஆண்டில் பாதுகாப்புக்காக 1.665 டிரில்லியன் யுவான் (231.4 பில்லியன் டொலர்) செலவு செய்யப்படும் என்று பட்ஜெட் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய நெருக்கடி மற்றும் அண்டை நாடுகளுடனான பதற்றங்கள் நீடிக்கும் நிலையில் சீனா தனது ராணுவத்திற்கான செலவினங்களை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. சீன ராணுவமான மக்கள் விடுதலை […]

இலங்கை

இலங்கை சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கையளிப்பு!

  • March 5, 2024
  • 0 Comments

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை பாராளுமன்ற பிரதிப் பொதுச் செயலாளரிடம் இன்று (05.03) கையளிக்கப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், ரோஹினி குமாரி விஜேரத்ன, ஹேஷா விதானகே, மனோ கணேசன், ரிஷாத் பதியுதீன், எம்.ஏ.சுமந்திரன், எஸ்.எம். மரிக்கார், ரஞ்சித் மத்தும பண்டார, தலதா அதுகோரள, விஜித ஹேரத் மற்றும் சந்திம வீரக்கொடி ஆகியோர் இதனை கையளித்துள்ளனர். ஆன்லைன் பாதுகாப்பு மசோதாவின் […]

இலங்கை

வவுனியாவில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

  • March 5, 2024
  • 0 Comments

வவுனியா – நாவற்குளம் பகுதியில் அமைந்துள்ள குளத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று (05.03) மீட்கப்பட்டுள்ளது. சடலம் அழுகிய நிலையில் காணப்படுவதால் உயிரிழந்தவரை அடையாளம் காணமுடியவில்லை எனவும், உடற்கூற்று பரிசோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. குறித்த நபர் சில தினங்களுக்கு முன்னர் இறந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிப்பதுடன், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இலங்கை

புத்தளம் -பலுகஸ்வெவ பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றில் கண்டெடுக்கப்பட்ட சடலம்!

  • March 5, 2024
  • 0 Comments

புத்தளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பலுகஸ்வெவ பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் நேற்று (04) பிற்பகல் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.கொட்டுகச்சிய பிரதேசத்தை சேர்ந்த 34 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் சடலம் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம்!

பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டப் பேரணியின் மீது பொரிஸாரால் கண்ணீர் புகைப்பிரயோகம் மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு முன்பாக உள்ள வீதியை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என முன்னர் தெரிவிக்கப்பட்டது . மாணவர் சங்கங்களின் போராட்டம் காரணமாக வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதை அடுத்து வீதியை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.  

வட அமெரிக்கா

அமெரிக்காவில் நெடுஞ்சாலை அருகே விழுந்து விபத்துக்குள்ளான சிறிய விமானம்: ஐவர் பலி!

  • March 5, 2024
  • 0 Comments

அமெரிக்காவின் டென்னசி மாநிலம், நாஷ்வில்லியில் நெடுஞ்சாலை அருகே இன்று சிறிய விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. தரையில் விழுந்த வேகத்தில் விமானம் தீப்பற்றி எரிந்தது. விமானத்தில் இருந்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். நாஷ்வில்லி பெருநகர காவல்துறை தனது எக்ஸ் பக்கத்தில், விமான விபத்து குறித்த செய்தியை புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளது. விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது என்ஜினில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஜான் சி டியூன் விமான நிலையத்தில் விமானத்தை அவசரமாக தரையிறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், […]

ஆசியா

ஐந்தாண்டு திட்டத்தை இவ்வருடம் அமுல்படுத்த திட்டமிடும் சீனா!

  • March 5, 2024
  • 0 Comments

14வது சீன தேசிய மக்கள் காங்கிரஸின் இரண்டாவது அமர்வு இன்று (05.03) காலை பெய்ஜிங்கில் ஆரம்பமானது. சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அரசாங்கத்தின் தலைவர்கள் மற்றும் தேசிய மக்கள் காங்கிரஸின் சுமார் 2900 பிரதிநிதிகள் தொடக்க விழாவில் கலந்து கொண்டனர். இந்த இரண்டாவது அமர்வில், சீனப் பிரதமர் 2024 மாநில வேலை அறிக்கையை வழங்கினார். கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தி தீர்க்கமான வெற்றியைப் பெற்றுள்ள சீனா, பிரதான பொருளாதார மற்றும் சமூக […]

பொழுதுபோக்கு

இயக்குநர்கள் சங்கத் தலைவரானார் ஆர்.வி.உதயகுமார்

  • March 5, 2024
  • 0 Comments

பழைய நிர்வாகிகளை எதிர்த்து யாரும் போட்டியிட முன்வராததால், செயலாளராக இருந்த ஆர்.வி.உதயகுமாரை தலைவராகவும், பொருளாளராக இருந்த பேரரசுவை செயலாளராகவும், பொருளாளர் பதவிக்கு இயக்குநர் சரணை புதிதாகவும் போட்டியின்றி தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய, வரும் 16 ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், தலைவர், செயலாளர், பொருளாளர் பதவிகளுக்கான நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. கடந்த தேர்தலில் கே.பாக்யராஜ் தலைமையில் ஒரு அணியும், ஆர்.கே.செல்வமணி […]

உலகம்

நடுநிலையான நிலைப்பாடு : ஆயுத ஏற்றுமதியில் சரிவை சந்திக்கும் சுவிஸ்

சுவிட்சர்லாந்தின் ஆயுத ஏற்றுமதி கடந்த ஆண்டு காலாண்டிற்கு மேல் குறைந்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. சுவிட்சர்லாந்தில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளை உக்ரைனுக்கு மறு ஏற்றுமதி செய்வதைத் தடுத்துள்ள நாட்டின் நடுநிலை நிலைப்பாட்டை விமர்சகர்கள் குற்றம் சாட்டுகின்றனர். போர் பொருட்கள் ஏற்றுமதி 27% சரிந்து 696.8 மில்லியன் சுவிஸ் பிராங்குகளாக குறைந்துள்ளதாக பொருளாதார விவகாரங்களுக்கான மாநில செயலகம் தெரிவித்துள்ளது. 2022 இல் 955 மில்லியன் பிராங்குகளாக இருந்தது. ஸ்டாக்ஹோம் இன்டர்நேஷனல் பீஸ் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட்டின் தரவுகளின்படி, நீண்டகாலமாக நடுநிலை […]