ஐரோப்பா

பட்டர் சிக்கன் உணவை உட்கொண்ட இங்கிலாந்து பிரஜை உயிரிழப்பு!

இங்கிலாந்தை சேர்ந்த 27 வயது இளைஞர் ஒருவர் உணவகம் ஒன்றில் இருந்து கொள்வனவு செய்த பட்டர் சிக்கன் உணவை உட்கொண்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த உணவை உட்கொண்ட பிறகு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள பரியைச் சேர்ந்த ஜோசப் ஹிக்கின்சன், என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபருக்கு அனாபிலாக்ஸிஸ் எனப்படும் கொட்டைகள் மற்றும் பாதாம் பருப்புகளால் ஒவ்வாமை இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பட்டர் சிக்கனில் குறித்த பொருட்கள் பயன்படுத்தப்பட்ட நிலையில், அதனால் ஒவ்வாமை ஏற்பட்டு அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்டர் சிக்கன் கறியில் பாதாம் பருப்புகள் உள்ளதாக தெளிவாக குறிப்பிட்டிருந்தும் அவர் அந்த உணவை எடுத்துக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்