ஐரோப்பா

ஜேர்மனில் 24 மணிநேர வேலைநிறுத்தத்திற்கு தயாராகும் ரயில் சாரதிகள்!

  • March 11, 2024
  • 0 Comments

ஜேர்மனியின் பல ரயில் சாரதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கம், மற்றுமொரு வேலைநிறுத்தத்திற்கு தயாராகி வருகிறது. வேலைநேரம், ஊதியம் தொடர்பான கடுமையான சவால்களுக்கு மத்தியில் மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. GDL தொழிற்சங்கம் Deutsche Bahn இன் பயணிகள் ரயில்களின் ஓட்டுநர்களை அதிகாலை 2 மணிக்கு (0100 GMT) தொடங்கி 24 மணிநேரம் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுமாறு அழைப்பு விடுத்துள்ளது. இதற்கிடையில், சரக்கு ரயில்களின் ஓட்டுநர்கள் மாலை 6 மணி முதல் வேலையை விட்டு வெளியேறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேலைநிறுத்தம் செய்வதற்கு […]

இலங்கை

இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட அரியவகை சத்திரசிகிச்சை!

  • March 11, 2024
  • 0 Comments

பதுளை போதனா வைத்தியசாலையில் நீண்டகாலமாக முதுகுத்தண்டு வலியால் அவதிப்பட்டு வந்த பெண்ணுக்கு மேற்கொள்ளப்பட்ட மிக அரிய வகை சத்திரசிகிச்சை தொடர்பில் இன்று (11.03) ஊடகங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 72 வயதான முத்துமாணிக்கே பல வருடங்களாக முதுகு வலியால் அவதிப்பட்டு வந்த பெண். எவ்வளவோ சிகிச்சை அளித்தும் அவளின் உடல் நிலை குணமாகவில்லை. இந்த பெண்ணின் நிலையை துல்லியமாக கண்டறிந்த பதுளை போதனா வைத்தியசாலையின் நரம்பியல் சத்திரசிகிச்சை நிபுணர் டொக்டர் லக்மால் ஹேவகே, அவருக்கு சத்திரசிகிச்சையை மேற்கொள்ளுமாறு பரிந்துரைத்துள்ளார். இந்த […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் கீழே விழுந்து விபத்துக்குள்ளான சிறிய ரக விமானம் – குழந்தைகள் உட்பட ஐவர் பலி!

  • March 11, 2024
  • 0 Comments

அமெரிக்காவின் விர்ஜினியா மாநிலம், ஹாட் ஸ்பிரிங்ஸ் நகரின் இங்கல்ஸ் பீல்டு விமான நிலையம் அருகே சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. ஓடுபாதையில் அவசரமாக தரையிறங்க முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்த விமானம் மரங்கள் நிறைந்த பகுதியில் விழுந்து தீப்பிடித்தது. இதில், விமானத்தில் இருந்த குழந்தை உள்ளிட்ட 5 பேரும் உடல் கருகி உயிரிழந்தனர். விர்ஜீனியாவின் மேற்கு எல்லைக்கு அருகில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்து தொடர்பாக தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் மற்றும் மத்திய விமான போக்குவரத்து […]

இந்தியா

இணங்க மறுத்ததால் இளம்பெண் தலையில் கல்லைப் போட்டு கொடூரக் கொலை… வாலிபரின் வெறிச்செயல்!

  • March 11, 2024
  • 0 Comments

பாலியல் உறவுக்கு மறுத்த பெண்ணின் தலையில் கல்லைப் போட்டு வாலிபர் கொலை செய்த சம்பவம் ராய்ச்சூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாவட்டம், ராய்ச்சூர் மாவட்டம், லிங்கஸ்குரு தாலுகாவில் உள்ள யாரடோனா கிராமத்தைச் சேர்ந்தவர் கிரிஜம்மா(35). இவருக்கும், இவரது கணவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் கணவரைப் பிரிந்து கிரிஜம்மா தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், அவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த தேவராஜ்(25) என்ற வாலிபக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்த பழக்கம் அவர்களுக்குள் தகாத உறவாக […]

பொழுதுபோக்கு

இந்த வருடமும் ஆஸ்கர் மேடையில் மீண்டும் கெத்து காட்டிய ‘RRR’!

  • March 11, 2024
  • 0 Comments

இந்திய சினிமாவைப் பெருமைப்படுத்தும் விதமாக கடந்த வருடம் ஆஸ்கர் மேடையில் ‘RRR’ திரைப்படம் விருது பெற்றது. அந்த வகையில், இந்த வருடமும் ‘RRR’ திரைப்படம் ஆஸ்கர் மேடையில் குறிப்பிடப்பட்டுள்ளது படக்குழுவினரையும், இந்திய ரசிகர்களையும் உற்சாகப்படுத்தியுள்ளது. ஆஸ்கர் மேடையில் ஹாலிவுட் படங்களே அதிக ஆதிக்கம் செலுத்துகிறது, இந்திய சினிமாவுக்கு ஆஸ்கர் எட்டாக்கனியாக ஆஸ்கர் இருக்கிறது என்ற ஆதங்கம் இந்திய சினிமா ரசிகர்களுக்கு இல்லாமல் இல்லை. அத்திபூத்தாற்போல, சில படங்கள் ஆஸ்கருக்கு அனுப்பி வைக்கப்பட்டாலும் விருது வெல்வது குறைவுதான். இந்தக் […]

இலங்கை

வெளிநாட்டிற்கு அனுப்பவதாக கூறி பணமோசடியில் ஈடுபட்ட பெண் கைது!

  • March 11, 2024
  • 0 Comments

வெளிநாட்டிற்கு அனுப்புவதாக கூறி பலரிடம் பணமோசடி செய்த பெண் ஒருவர் யாழில் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் முகவர் நிலையம் ஒன்றை நடத்தி அதன் மூலம் 60 இலட்சம் ரூபாய் வரை மோசடி செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குறித்த குற்றச்சாட்டின் அடிப்படையில் ஊரேழு பகுதியைச் சேர்ந்த 27 வயதான யுவதி ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். பணத்தை வழங்கியவர் தனது வெளிநாட்டு, பயண ஏற்பாடுகள் தாமதமாகி வந்தமையால், அப்பெண் மீது சந்தேகம் கொண்டு யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். […]

பொழுதுபோக்கு

முதல்முறையாக அயன்மேன் நடிகர் ‘ராபர்ட் டவுனி” ஜூனியர் ஆஸ்கர் வென்றார்

  • March 11, 2024
  • 0 Comments

96வது ஆஸ்கர் விருது நிகழ்ச்சி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி திரையரங்கில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனின் ஓபன்ஹெய்மர் படத்தில் நடித்த ராபர்ட் டவுனி ஜூனியர் சிறந்த துணை நடிகருக்கான விருதை வென்றார். 96வது ஆஸ்கர் விருது நிகழ்ச்சி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டொல்பி திரையரங்கில் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆஸ்கர் விருது விழாவிற்கு வருகை தந்த பிரபலங்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. இந்த […]

ஐரோப்பா

கேட் மிடில்டனின் புகைப்படத்தை திரும்பப்பெற்ற செய்தி நிறுவனங்கள்!

  • March 11, 2024
  • 0 Comments

கென்சிங்டன் அரண்மனை வெளியிட்ட புகைப்படத்தில் கேட் மிடில்டனின் புகைப்படத்தை பல முக்கிய செய்தி நிறுவனங்கள் திரும்பப் பெற்றுள்ளன. ஜனவரி மாதம் கேட் மிடில்டன்  வயிற்று பகுதியில் அறுவை சிகிச்சை ஒன்றை மேற்கொண்டிருந்தார். இதனையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் புகைப்படத்தை வெளியிட்டு மகளிர் தின வாழ்த்துச் செய்தியையும் பகிர்ந்திருந்தார். இந்நிலையில் கேட் மிடில்டன் மற்றும் அவரது குழந்தைகளைக் காட்டும் கென்சிங்டன் அரண்மனையால் வெளியிடப்பட்ட இந்த புகைப்படத்தை  பல முக்கிய செய்தி நிறுவனங்கள் திரும்பப் பெற்றதால் சமூக ஊடக பயனர்கள் […]

ஆசியா

வங்காள விரிகுடாவை நோக்கி பயணிக்கும் சீன உளவு கப்பல் : இந்தியாவிற்கு எச்சரிக்கை!

  • March 11, 2024
  • 0 Comments

சீன இராணுவ ஆராய்ச்சி-கண்காணிப்பு கப்பலான சியாங் யாங் ஹாங் 3 தற்போது மாலே துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள நிலையில், மற்றொரு சகோதரக் கப்பலான சியாங் யாங் ஹாங் 01 இந்தியாவின் கிழக்குக் கடற்பரப்பில் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. குறித்த கப்பல் தற்போது வங்காள விரிகுடாவை நோக்கி சென்றுக்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 01 கப்பலில் பட்டியலிடப்பட்ட இலக்கு எதுவும் இல்லை என்பதால், உளவுக் கப்பல் இலங்கை துறைமுகத்திற்கு செயல்பாட்டுத் திருப்பத்திற்காக (OTR) இணைக்கப்பட்டுள்ளதாக புலனாய்வு உள்ளீடுகள் குறிப்பிடுகின்றன. கடந்த டிசம்பர் […]

ஆசியா

தென்கொரியாவின் தெற்கு கடலில் படகு கவிழ்ந்து விபத்து: நால்வர்பலி, 5 பேர் மாயம்!

  • March 11, 2024
  • 0 Comments

தென்கொரியாவின் தெற்கு கடற்கரை பகுதியில் 7 இந்தோனேசிய மீனவர்கள் உள்பட பலர் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென அங்கு ராட்சத அலை எழும்பியது.இதனால் அந்த மீன்பிடி படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதுகுறித்து தகவலறிந்த தென்கொரிய கடலோர பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அப்போது கடலில் தத்தளித்து கொண்டிருந்த மீனவர்களை மற்றொரு படகு மூலம் அவர்கள் கரைக்கு கொண்டு வந்தனர். மயங்கிய நிலையில் இருந்த அந்த மீனவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில் 4 பேர் […]