இந்தியா

இந்தியாவில் பொதுத் தேர்தலுக்கான திகதி அறிவிப்பு!

  • March 16, 2024
  • 0 Comments

இந்தியாவில் வரும் ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி பொதுத் தேர்தல் ஆரம்பமாகும் என தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். வாக்குப்பதிவு ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளதாகவும், ஜுன் 04 ஆம் திகதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 970 மில்லியனுக்கும் அதிகமான வாக்காளர்கள், அதாவது உலக மக்கள் தொகையில் 10 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் தேர்தலில் வாக்களிக்கவுள்ளனர். இந்திய பாராளுமன்றத்தின் கீழ்சபைக்கு 543 உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.  

பொழுதுபோக்கு

சில்க் ஸ்மிதாவின் அம்மாவை பார்த்து இருக்கீங்களா?

  • March 16, 2024
  • 0 Comments

இந்தியாவின் மர்லின் மன்றோ, தென்னாட்டு பேரழகி, காந்த கண் அழகி என அழகில் இன்னும் எத்தனை சொல் உள்ளதோ அனைத்துக்கும் பொருத்தமானவர் நடிகை சில்க் சுமிதா மட்டுமே, நாடே வியந்து கொண்டாடிய சில்க் ஸ்மிதாவை பெற்ற அம்மாவை பார்த்து இருக்கிறீர்களா? 80களில் திரையுலகத்தையே ஆட்டிப்படைத்த சில்க் ஸ்மிதாவை இன்றைய 2கே கிஸ்ட்கள் தேடும் கிளுகிளுப்பு நாயகியாக உள்ளார். இவர் படத்தில் ஒரு டான்ஸ் ஆடினாலே போதும், அந்த படத்தைப் பார்க்க ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக தியேட்டர் வாசலில் […]

ஆசியா

பாகிஸ்தானில் இராணுவ நிலையின் மீது தற்கொலைக்குண்டு தாக்குதல்!

  • March 16, 2024
  • 0 Comments

வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள பரந்து விரிந்த ராணுவ நிலையின் மீது தற்கொலை குண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. தற்கொலை குண்டுதாரி  வெடிபொருள் நிரப்பிய டிரக்கை மோதியதாக ராணுவம் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது ஏழு வீரர்கள் கொல்லப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆப்கானிஸ்தானின் எல்லையில் உள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள வடக்கு வஜிரிஸ்தானில் நடந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் குறித்த தற்கொலைக் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் […]

இந்தியா

ஆசையாக தோசை ஆடர் செய்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி! – மிரட்டல் விடுத்த உணவகத்தினர்

  • March 16, 2024
  • 0 Comments

டெல்லியின் பிரபல உணவகம் ஒன்றில் பெண் வாடிக்கையாளர் ஒருவர் தனக்கான உணவில் எட்டு கரப்பன் பூச்சிகளை கண்டறிந்தது, இணையத்தில் வீடியோவாக பகிரப்பட்டதில் வைரலாகி உள்ளது. டெல்லியின் கானாட் பிளேஸ் பகுதியில் செயல்படும் மெட்ராஸ் காபி ஹவுஸ் உணவகத்தில் இந்த அதிருப்திக்குரிய அவலம் நடந்திருப்பதாக பாதிக்கப்பட்ட பெண் இன்ஸ்டாகிராம் வீடியோ பதிவு வாயிலாக பகிர்ந்திருக்கிறார். கடந்த வாரம் நேரிட்ட இந்த சம்பவத்தின்போது, தோழியுடன் உணவகம் சென்ற இஷானி என்ற பெண், தலா ஒரு தோசை ஆர்டர் செய்திருக்கிறார். ஆர்டரின் […]

இலங்கை

இலங்கையில் ரயில் பயணிகள் எதிர்நோக்கும் சிக்கல்!

  • March 16, 2024
  • 0 Comments

தொலைதூர ரயில்களில் இருக்கை முன்பதிவு செய்ய புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஆன்லைன் முறை சிக்கலை ஏற்படுத்துவதாக ரயில்வே பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் கோட்டை புகையிரத நிலையத்திற்கு வந்த பயணிகள் பலர் அசௌகரியங்களுக்கு உள்ளாகினர். பொது பயணிகள் மற்றும் அரசாங்க ஊழியர்களுக்கான டிக்கெட் முன்பதிவு செயல்முறையை டிஜிட்டல் மயமாக்கும் நடவடிக்கையாக இலங்கை ரயில்வே சமீபத்தில் முதல் ஆன்லைன் டிக்கெட் மற்றும் ஆன்லைன் ரயில் இருக்கை முன்பதிவு முறையை அறிமுகப்படுத்தியது. அதன்படி, ஆன்-லைனில் இருக்கை முன்பதிவு செய்த பயணிகளுக்கு டிக்கெட் […]

பொழுதுபோக்கு

சினிமாவையே ஒரு கலக்கு கலக்கிய நித்யா மேனனின் புதிய படம்…

  • March 16, 2024
  • 0 Comments

தென்னிந்திய திரையுலகில் பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை நித்யா மேனன். தமிழில் இவர் நடித்த படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆகியுள்ளன. அந்த வகையில் நித்யா மேனன் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. பாஸ்க் டைம் தியேட்டர்ஸ் மற்றும் பாப்டர் மீடியா நிறுவனங்கள் தயாரிக்கும் புதிய படத்தில் நித்யா மேனன் நடிக்கிறார். இந்த படம் ரொமான்ஸ் காமெடி கலந்த ஃபேண்டசி கதையம்சம் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் வினய் ராய், நவ்தீப், பிரதீக் பாப்பர், […]

இலங்கை

இலங்கையில் 08 சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்களுக்கு இடமாற்றம்!

  • March 16, 2024
  • 0 Comments

08 சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கீழ்நிலை பொலிஸ் அதிகாரிகள் குழுவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 08 சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள், ஒரு பிரதி பொலிஸ் மா அதிபர், 08 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் ஒரு பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. குற்ற மற்றும் போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பாக இருந்த சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த […]

பொழுதுபோக்கு

விஜய் ஆண்டனிக்கு கிறிஸ்தவ சங்கம் கண்டனம் – ஏன் தெரியுமா?

  • March 16, 2024
  • 0 Comments

இசையமைப்பாளர், பின்னணி பாடகர், நடிகர், இயக்குனர், படத்தொகுப்பாளர், , பாடலாசிரியரென பன்முகத்தன்மையுடைவர் விஜய் ஆண்டனி. 2016 ஆம் ஆண்டு சசி இயக்கத்தில் ‘பிச்சைக்காரன்’ படத்தில் நடித்தார். இத்திரைபடம் வசூலில் மிரட்டியது. பட்டித்தொட்டி எங்கும் ‘பிச்சைக்காரன்’ படம் சேர்ந்தது. விஜய் ஆண்டனி திரையுலக பயணத்தில் மிக முக்கியமான திரைப்படம். தற்பொழுது விஜய் ஆண்டனி ரோமியோ படத்தை தயாரித்து இருக்கிறார். பரத் தனசேகர் இப்படத்தின் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இந்நிலையில் நேற்று ரோமியோ படக்குழுவினர் செய்தியார்களை சந்தித்தனர். அதில் செய்தியாளர் ரோமியோ […]

ஆசியா

சிங்கப்பூரில் அதிகரித்து வரும் சிறுநீரக நோயாளிகள்!

  • March 16, 2024
  • 0 Comments

சிங்கப்பூரில் சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சமீப காலத்தில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி கடந்த தசாப்தத்தில் இங்கு சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 40 சதவீதம் அதிகரித்துள்ளது. கணிசமாக அதிகமான ஆண்கள் மற்றும் மலாய்க்காரர்கள் பாதிக்கப்படுகின்றனர். 2022 இல் சிறுநீரக செயலிழப்பால் ஐந்தில் மூன்று பேர் ஆண்கள் பாதிக்கப்படுவதாகவும், குறிப்பாக  சீனர்களை விட மூன்று மடங்கு அதிகமான மலாய்க்காரர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுநீரக செயலிழப்பு, அல்லது ஐந்தாவது-நிலை நாள்பட்ட சிறுநீரக நோய் (CKD5), சிறுநீரகங்கள் செயல்படும் திறனை […]

இலங்கை

மதுரங்குளிய – கிணற்றில் தண்ணீர் எடுக்க சென்ற சிறுமிக்கு நேர்ந்த கதி!

  • March 16, 2024
  • 0 Comments

மதுரங்குளிய விருதொடே பிரதேசத்தில் சிறுமி ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். கிணற்றில் விழுந்து நீரில் மூழ்கிய சிறுமி மீட்கப்பட்டு, புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ள எமது செய்தியாளர் தெரிவித்தார். விருதொடே, மதுரங்குளி பகுதியில் வசித்து வந்த 06 வயதுடைய சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்த சிறுமி நேற்று (15) காலை தனது வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றில் வாளி ஒன்றின் உதவியுடன் தண்ணீர் எடுக்கச் சென்ற வேளையில் கிணற்றில் விழுந்துள்ளதாக பொலிஸார் […]