இலங்கை

கடும் வெப்பநிலையால் அவதியுறும் சூடான்!

  • March 17, 2024
  • 0 Comments

தெற்கு சூடானில் கடுமையான வெப்பநிலை நிலவி வருவதால் பள்ளிகளை மூட அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸ் (113 ஃபாரன்ஹீட்) ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதால், அனைத்து குழந்தைகளையும் வீட்டுக்குள்ளேயே வைத்திருக்குமாறு சுகாதார மற்றும் கல்வி அமைச்சகங்கள் பெற்றோருக்கு அறிவுறுத்தியுள்ளன. அந்த நேரத்தில் எந்த பள்ளி திறந்திருந்தாலும் அதன் பதிவு திரும்பப் பெறப்படும் என்று அவர்கள் எச்சரித்தனர், ஆனால் பள்ளிகள் எவ்வளவு காலம் மூடப்பட்டிருக்கும் என்று குறிப்பிடவில்லை. நிலைமையை தொடர்ந்து கண்காணித்து அதற்கேற்ப பொதுமக்களுக்கு […]

ஐரோப்பா

ரஷ்யாவில் தேர்தல் நடைபெறும் சமயத்தில் ட்ரோன் தாக்குதல்!

  • March 17, 2024
  • 0 Comments

ரஷ்ய தலைநகருக்கு அருகில் 35 ஆளில்லா ட்ரோன்கள் விழுந்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இருப்பினும் இந்த தாக்குதல் சம்பவத்தினால் பொருட் சேதமோ, உயிர் சேதமோ ஏற்படவில்லை என மாஸ்கோ மேயர் செர்ஜி சோபியானின் தெரிவித்துள்ளார். ரஷ்யாவில் தற்போது தேர்தல் நடைபெற்று வருகின்ற நிலையில், இந்த தாக்குதல்கள் அமைதியை சீர்குலைக்கும் வகையில் அமைந்கதுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேநேரம் இந்த தேர்தலில் புட்டின் பெரும்பான்மையான வாக்குகளை பெற்று ஆறு ஆண்டுகளுக்கு ஆட்சியமைப்பார் என கருத்து கணிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.  

இலங்கை

யாழில் தலைக்கவசம் அணியாமல் பயணித்த இளைஞன் விபத்தில் சிக்கி மரணம்!

  • March 17, 2024
  • 0 Comments

தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் பயணித்து விபத்தில் சிக்கிய இளைஞன் ஒருவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் , பளையை சேர்ந்த சாந்தலிங்கம் நிரோசன் எனும் 21 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த 11 ஆம் திகதி மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கிய , குறித்த இளைஞன் தலையில் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தலைக்கவசம் அணியாத நிலையில் மோட்டார் சைக்கிளை செலுத்தி விபத்துக்குள்ளானதால் தான் […]

பொழுதுபோக்கு

தேர்தல் குறித்து ஜெயம் ரவி விடுத்துள்ள வேண்டுகோள்

  • March 17, 2024
  • 0 Comments

பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இதையொட்டி தேர்தல் நடைமுறைகள் அனைத்தும் உடனடியாக அமலுக்கு வந்தது. இந்நிலையில் நடிகர் ஜெயம் ரவி தேர்தலில் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தனது வலை பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:- வரவிருக்கும் தேர்தலில் வாக்களிக்க நமது நாட்டின் அனைத்து இளம் மற்றும் முதல் முறையாக வாக்களிக்கும் வாக்காளர்களையும கேட்டு கொள்கிறேன். இந்த தேர்தலில் சரியான வேட்பாளருக்கு வாக்களித்து உங்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை பயன்படுத்துங்கள் என்று […]

மத்திய கிழக்கு

காசா மீது வான்வழி தாக்குதல் நடத்திய இஸ்ரேல்; 18 ஹமாஸ் பயங்கரவாதிகள் பலி

  • March 17, 2024
  • 0 Comments

இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் திகதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்தியதில் அந்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்தும், நூற்றுக்கணக்கானோரை பணய கைதிகளாக சிறை பிடித்தும் சென்றது. எனினும், போர்நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில், அவர்களில் சிலரை இஸ்ரேல் மீட்டது. மீதமுள்ளவர்களையும் மீட்போம் என சூளுரைத்து உள்ளது. 240 பணய கைதிகளில் 134 பேர் இன்னும் விடுவிக்கப்படாமல் உள்ளனர். எனினும், அவர்களில் 31 பேர் உயிரிழந்து விட்டனர் என்று தகவல் தெரிவிக்கின்றது. இந்த […]

தமிழ்நாடு

மக்களவைத் தேர்தல்; கோவை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் கிராந்தி குமார் பாடி பேட்டி…

  • March 17, 2024
  • 0 Comments

மக்களவைத் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கோவை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரமான கிராந்தி குமார் பாடி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். கோவை மற்றும் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதிகளில் நவீன தொழில்நுட்ப உதவியுடன் தேர்தல் கண்காணிப்பு பணி நடத்தப்படும் என்றார்.இதில் சுழலும் கண்காணிப்பு கேமராக்கள் GPS உடன் இணைக்கப்பட்டு கோவை மாவட்ட தேர்தல் கண்காணிப்பறையிலும், தமிழக தலைமை தேர்தல் ஆணையர் அலுவலகம், டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்திலும் பார்க்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார். […]

வட அமெரிக்கா

வைத்தியசாலை கதவு மூடப்பட்டதால் வாசலில் குழந்தை பிரசவித்த கனடிய பெண்!!

  • March 17, 2024
  • 0 Comments

கனடாவில் வைத்தியசாலையின் பிரதான நுழைவாயிற் கதவு மூடப்பட்டிருந்த காரணத்தினால் பெண் ஒருவர் வாசலிலேயே குழந்தை பிரசவித்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. கனடாவின் கியூபெக் மாகாணத்தின் டிரம்மோன்ட்வில் பகுதியில் அமைந்துள்ள வைத்தியசாலையொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வைத்தியசாலையின் வெளியே சத்தம் கேட்டதாக பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். வெளியே சென்று பார்த்த போது தாயும் சேயும் இருப்பதனைக் கண்டதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.வைத்தியசாலையின் பிரதான நுழைவாயல் கதவு இரவு நேரத்தில் மூடப்பட்டிருக்கும் எனவும் அவசர சிகிச்சைப் பிரிவிற்கு வேறும் நுழைவாயில் கதவு உண்டு எனவும் […]

இந்தியா

உதயநிதியை ”Drug உதயநிதி” என்றுதான் அழைக்க வேண்டும் – வானதி சீனிவாசன்!

  • March 17, 2024
  • 0 Comments

உதயநிதி ஸ்டாலின் ஜாபர் சாதிக்குடன் உறவு வைத்து இருப்பதால் “Drug உதயநிதி” என்று தான் அழைக்க வேண்டும் என பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி நாளை கோவையில் ரோடு ஷோ நிகழ்ச்சியில் கலந்து கொள்வது குறித்து கோவை மாவட்டம் பாஜக அலுவலகத்தில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் செய்தியாளர் சந்தித்து பேசினார். அப்போது பேசியவர், பிரதமர் மோடி கோவை வருகையொட்டி பொதுமக்கள் மிகுந்த வரவேற்பாக உள்ளனர். நாளை 5.30 […]

உலகம்

இந்திய தேர்தல் : 60 சதவீதமான வாக்குகள் கிடைக்கும் – வெங்கடேசன் உறுதி!

  • March 17, 2024
  • 0 Comments

மக்களவைத் தேர்தல் குறித்து அறிவிப்பு நேற்று வெளியான நிலையில் நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை துவங்கியுள்ளன. மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் திகதி தமிழகத்தில் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ம் திகதி நடைபெறுகிறது. இந்நிலையில், கடந்த தேர்தலில் வெற்றி பெற்று எம்பியாக உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சியின் வேட்பாளர் சு.வெங்கடேசனுக்கு இந்த முறையும் மதுரை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. INDIA கூட்டணி சார்பில் திமுக மதுரை தொகுதியை […]

உலகம்

தெற்கு ஆப்கானிஸ்தானில் கோர விபத்து : 21 பேர் பலி!

  • March 17, 2024
  • 0 Comments

தெற்கு ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற வாகன விபத்தில் குறைந்தது 21 பேர் உயிரிழந்துள்ளதுடன், 38 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தெற்கு காந்தஹார் மற்றும் மேற்கு ஹெராத் மாகாணங்களுக்கு இடையிலான பிரதான நெடுஞ்சாலையில் ஹெல்மண்ட் மாகாணத்தின் கெராஷ்க் மாவட்டத்தில் இன்று (17.03) காலை குறித்த விபத்து நேர்ந்துள்ளது. விபத்தில் காயமடைந்த  38 பேரில் 11 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.