தேர்தல் குறித்து ஜெயம் ரவி விடுத்துள்ள வேண்டுகோள்
பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இதையொட்டி தேர்தல் நடைமுறைகள் அனைத்தும் உடனடியாக அமலுக்கு வந்தது.
இந்நிலையில் நடிகர் ஜெயம் ரவி தேர்தலில் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தனது வலை பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் கூறி இருப்பதாவது:-
வரவிருக்கும் தேர்தலில் வாக்களிக்க நமது நாட்டின் அனைத்து இளம் மற்றும் முதல் முறையாக வாக்களிக்கும் வாக்காளர்களையும கேட்டு கொள்கிறேன். இந்த தேர்தலில் சரியான வேட்பாளருக்கு வாக்களித்து உங்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை பயன்படுத்துங்கள் என்று அந்த பதிவின் மூலம் ஜெயம் ரவி கேட்டுக் கொண்டுள்ளார்
(Visited 5 times, 1 visits today)