இலங்கை

இலங்கை வந்துள்ள தாய்லாந்து கப்பல்!

  • March 18, 2024
  • 0 Comments

தாய்லாந்தின் ஃபூகெட்டில் இருந்து  எம்பியன்ஸ் என்ற சொகுசு ரக கப்பல் இன்று (18.03) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. 1,131 பயணிகள் மற்றும் 565 பணியாளர்களுடன் குறித்த கப்பல் நாட்டுக்கு வருகைதந்துள்ள குறித்த கப்பலானது இன்று இரவு மாலைத்தீவிற்கு செல்லவுள்ளது. அவுஸ்திரேலியா, கனடா, பிரித்தானியா மற்றும் ஜேர்மன் நாட்டு பயணிகள் அந்த கப்பலில் வருகைதந்துள்ளனர். குறித்த கப்பலில் வருகைத்தந்த பயணிகள் கொழும்பு, கண்டி மற்றும் காலி ஆகிய நகரங்களுக்கு செல்லவுள்ளனர்.

இலங்கை

மொரட்டுவை பிரதேசத்தில் நடுத்தர வயது பெண் ஒருவர் கழுத்தறுத்து படுகொலை!

  • March 18, 2024
  • 0 Comments

மொரட்டுவை, இந்திபெத்த பெக்வத்த பகுதியில் பெண்ணொருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார். 50 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொலையை செய்த நபர் மொரட்டுமுல்ல பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன. சில மாதங்களுக்கு முன்பு, கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் சிறையில் இருந்த போது மர்மமான முறையில் உயிரிழந்திருந்தார். உயிரிழந்த கணவரின் உறவினர் ஒருவரால் இந்தக் கொலை இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

ஆசியா

ஆப்கானில் வான் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்: குழந்தைகள் உள்பட 8 பேர் பலி!

  • March 18, 2024
  • 0 Comments

பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத குழுவினர் அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் முகாமிட்டிருப்பதாகவும், அவர்கள் பாகிஸ்தானுக்கு எதிரான நாச வேலைகளில் ஈடுபடுவதாகவும் பாகிஸ்தான் குற்றம்சாட்டுகிறது. ஆனால் இதனை மறுத்த ஆப்கானிஸ்தான், பிற நாடுகளின் இயக்கத்தினரை உள்ளே விட மாட்டோம் என கூறி உள்ளது. இந்த விவகாரம் இப்போது பெரிய அளவில் வெடிக்கத் தொடங்கி உள்ளது. பாகிஸ்தானில் வடக்கு வஜிரிஸ்தானின் பழங்குடியினர் மாவட்டத்தில் உள்ள பாதுகாப்பு சோதனைச் சாவடியில் நேற்று முன்தினம் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.ஆப்கானிஸ்தான் எல்லையோரம் இந்த பகுதி […]

இலங்கை

பல மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு வெப்ப குறியீட்டு ஆலோசனை

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வடமேல், வடமத்திய, கிழக்கு மற்றும் மேல் மாகாணங்களுக்கும் மொனராகலை, மன்னார், இரத்தினபுரி மற்றும் வவுனியா மாவட்டங்களுக்கும் வெப்ப சுட்டெண் ஆலோசனையை வெளியிட்டுள்ளது. திணைக்களத்தின் படி, மனித உடலில் உணரப்படும் வெப்பநிலையான வெப்ப சுட்டெண் மேலே குறிப்பிடப்பட்ட பகுதிகளில் ‘எச்சரிக்கை நிலை’ வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எச்சரிக்கை நிலைக்கான ஆலோசனையின்படி, நீடித்த வெளிப்பாடு மற்றும் செயல்பாட்டின் மூலம் சோர்வு சாத்தியமாகும், அதே சமயம் தொடர்ச்சியான செயல்பாடு வெப்பப் பிடிப்புகளை ஏற்படுத்தும்

இலங்கை

வவுனியா – பூவரசங்குளம் பகுதியில் பேருந்தில் ஏற முற்பட்டவர் உயிரிழப்பு!

  • March 18, 2024
  • 0 Comments

வவுனியா பூவரசங்குளத்தில் பேரூந்தில் ஏற முற்பட்டவரை பேரூந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார் பூவரசங்குளம் சந்தியிலுள்ள பேரூந்து தரிப்பிடத்தில் இன்று காலை இடம்பெற்ற இவ்விபத்துச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வவுனியாவிலிருந்து தலைமன்னார் நோக்கி பயணித்த தனியார்பேரூந்து பூவரசங்குளம் தரிப்பிடத்தில் தரித்து நின்ற போது அதில் ஏற முற்பட்ட ஒருவர் பேரூந்தில் சிக்குண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் சம்பவ இடத்திற்கு சென்ற பூவரசங்குளம் பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்திருந்தமையுடன் பேரூந்தின் சாரதியினையும் கைது செய்தனர். […]

இலங்கை

இலங்கை கல்வி அமைச்சு பாடசாலை அதிபர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!

  • March 18, 2024
  • 0 Comments

வெப்பமான காலநிலை காரணமாக ஏப்ரல் புத்தாண்டு விடுமுறையின் பின்னர் இல்லங்களுக்கிடையிலான விளையாட்டு நிகழ்வுகளை நடத்துமாறு கல்வி அமைச்சு அதிபர்களுக்கு அறிவித்துள்ளது. இதற்கான  சுற்றறிக்கை இன்று (18) வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “முன்பு ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது, ஆனால் இன்று பள்ளிகள் விளையாட்டு நிகழ்வுகளை ஆண்டு இறுதி வரை ஒத்திவைக்குமாறு மாகாண அதிகாரிகள் மூலம் அறிவிப்பு வெளியிடப்படுகிறது, ஏனெனில் நிலைமை அதற்குள் மாறக்கூடும். […]

ஆசியா

ரஃபா மீது தாக்குதளுக்கு தயாராகும் இஸ்ரேல்

இஸ்ரேலின் பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு, தெற்கு நகரமான ரஃபா மீது தாக்குதலை நடத்தப்போவதாக உறுதி செய்துள்ளார் . “எந்தவொரு சர்வதேச அழுத்தமும் போரின் அனைத்து இலக்குகளையும் அடைவதைத் தடுக்காது” என்று நெதன்யாகு கூறியுள்ளார். துருப்புக்கள் ரஃபாவிற்குள் நுழைவதற்கு முன்பு பொதுமக்கள் வெளியேற முடியும் என்றும் ரஃபாவில் எஞ்சியிருக்கும் பயங்கரவாத பட்டாலியன்களை ஒழிப்பதில் எங்கள் இலக்கு பொதுமக்கள் ரஃபாவை விட்டு வெளியேற உதவுவதுடன் கைகோர்த்து செல்கிறது” என்று நெதன்யாகு ஒரு செய்தியாளர் சந்திப்பில் ஜேர்மன் சான்ஸ்லர் ஓலாஃப் […]

இலங்கை

இலங்கை சுகாதார தொழிற்சங்கங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

  • March 18, 2024
  • 0 Comments

சுகாதார தொழிற்சங்கங்கள் நாளை (19.03) ஆரம்பிக்க இருந்த வேலைநிறுத்த நடவடிக்கையை  தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளன. கொழும்பில் இன்று (18.03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அதன் அழைப்பாளர்  ரவி குமுதேஷ் இதனைத் தெரிவித்தார். சுகாதார அமைச்சின் எழுத்துமூல கோரிக்கைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பொழுதுபோக்கு

விஜய்யை தொடர்ந்து சினிமாவுக்கு குட் பை சொல்கின்றாரா அஜித்குமார்?

  • March 18, 2024
  • 0 Comments

தமிழ் திரையுலகில் முன்னணி மாஸ் நடிகராக வலம் வரும் அஜித்குமார், சினிமாவை விட்டு தற்காலிகமாக விலக முடிவெடுத்துள்ளதாக தகவல் பரவி வருகிறது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர்கள் ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகியோர் தான். இதில் சமகால நடிகர்கள் என்றாலே அவர்களுக்கு இடையே போட்டி இருக்க தான் செய்யும். அப்படி விஜய் – அஜித் இருவரது படங்களுக்கும் கோலிவுட்டில் கடந்த சில ஆண்டுகளாக கடும் போட்டி நிலவி வந்தது. அதிலும் கடந்த ஆண்டு இருவரின் […]

இலங்கை

இலங்கையில் குற்றக் கும்பல்களை ஒடுக்க புதிய நடவடிக்கை!

  • March 18, 2024
  • 0 Comments

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களை ஒடுக்குவதற்கு புதிய நடவடிக்கையை ஆரம்பிக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி ஆகியோரின் நேரடி மேற்பார்வையின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. தற்போது அதிக கொலைகள் இடம்பெறும் மேற்கு மற்றும் தெற்கு பிராந்தியங்களில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி இப்பகுதிகளில் 20 ஆயுதம் தாங்கிய தாக்குதல் போலீஸ் பட்டாலியன்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளன. இந்த குழுக்கள் பொலிஸ் மா […]