உலகம்

நேபாளத்தில் 09 நாட்களின் பின் இருவரை மீட்கும் காட்சிகள் இணையத்தில் வைரல்

நேபாளத்தில் பேரழிவை ஏற்படுத்திய திடீர் வெள்ளம் ஏற்பட்டு  ஒன்பது நாட்களுக்குப் பிறகு, திரிசூலி 3A நீர்மின் நிலையத்தில் இருந்து இரண்டு பேர் மீட்கப்பட்டனர்.

சேறு படிந்த நிலையில் இரு தொழிலாளர்கள் மீட்கப்பட்டும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த மீட்பு நடவடிக்கை, மேலும் பலர் உயிருடன் மீட்கப்படலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

மீட்கப்பட்ட தொழிலாளர்கள் 45 வயதான கபீர் மஹர்ஜன் மற்றும் 30 வயதான சஞ்சய் சா என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் இருந்து கிடைகப்பெற்ற தகவலின்படி,  சுரங்கப்பாதையில் இன்னும் 40 பேர் சிக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து நேபாள இராணுவம் தலைமையிலான பாதுகாப்புக் குழு, சிறப்பு உபகரணங்களின் உதவியுடன் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்