இலங்கை

இலங்கை: கோப் குழுவிலிருந்து தயாசிறி ஜயசேகர இராஜினாமா

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, பொது நிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்றக் குழுவில் (COPE) இருந்து இராஜினாமா செய்துள்ளதாக அறிவித்துள்ளார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள தலைவருடன் இணைந்து பணியாற்ற முடியாது என்று அவர் தனது ‘எக்ஸ்’ தளத்தில் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) அரகலயவிடம் இருந்து பாடம் கற்றுக் கொள்ளவும், மக்களை மதிக்கவும் தவறியிருப்பது துரதிஷ்டவசமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஊழலை […]

இலங்கை

இலங்கையின் இன்றைய நாணய மாற்று வீதம்!

  • March 19, 2024
  • 0 Comments

இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின்படி இன்று (19.03) அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை ரூபா 299.29 ஆகவும் விற்பனை விலை 308.90 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. இதன்படி, 2023ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் திகதிக்கு பின்னர் டொலரின் கொள்வனவு விலை முதன்முறையாக 300 ரூபாவிற்கு கீழ் குறைந்துள்ளது.

பொழுதுபோக்கு

“இனிமேல்…” அப்படித்தான்… லோகேஷ் கனகராஜை ஹீரோவாக்கிய கமல்ஹாசன்

  • March 19, 2024
  • 0 Comments

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ஹீரோவாக அறிமுகமாகி இருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் ஜொலித்து வருகிறார். அவரது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் தற்போது சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம் உருவாகி வருகிறது. இதற்கு அடுத்தபடியாக மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் தக் லைஃப் படத்தையும் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமும் தயாரிக்கிறது. இதுதவிர தேசிங்கு […]

இலங்கை

இலங்கை விவசாயிகளுக்கு உர மானியம் வழங்க அமைச்சரவை அனுமதி!

  • March 19, 2024
  • 0 Comments

2024 ஆம் ஆண்டுக்கான நெல் விவசாயிகளுக்கு உர மானியம் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதன்படி, ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 2 ஹெக்டேர் பயிரிடுவதற்கு வேளாண் வளர்ச்சித் துறை ஹெக்டேருக்கு  15,000 நிதி மானியமாக வழங்கும். நிர்ணயிக்கப்பட்ட மானியத் தொகையை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைப்பதற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதேவேளை, 2024 ஆம் ஆண்டுக்கான இலங்கை உர நிறுவனம் மற்றும் கொழும்பு கொமர்ஷல் உர கம்பனி லிமிடெட் ஆகியன தனியார் துறைக்கு போட்டியாக […]

உலகம்

மீண்டும் பொதுமக்கள் 100 பேர் கடத்தல் ; நைஜீரியாவில் அதிகரிக்கும் ஆயுதக்குழுவினர் அட்டூழியம்

  • March 19, 2024
  • 0 Comments

நைஜீரியாவின் வடக்கு பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஆயுதக் குழுக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை கடத்தும் நிகழ்வுகள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன், கதுனா மாநிலத்தில் கிட்டத்தட்ட 300 மாணவர்களை ஆயுதக்குழுவினர் கடத்திச் சென்ற நிலையில், கடந்த இரு தினங்களில் பொதுமக்கள் 100பேரை கடத்தி சென்றுள்ளனர். நேற்று முன்தினம் ஜுரு கவுன்சில் பகுதியில் துப்பாக்கிகளுடன் நுழைந்த ஆயுதக்குழுவினர், டோகன் நோமா சமுதாய மக்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன், 14 பேரை கடத்திச் […]

பொழுதுபோக்கு

சரியான கம்பேக் கொடுக்கும் சமந்தா… இனி கோடியில் தான் சம்பளம்

  • March 19, 2024
  • 0 Comments

தெலுங்கில், இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ திரைப்படத்தின் தெலுங்கு வர்ஷனாக எடுக்கப்பட்ட ‘Ye Maaya Chesave’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை சமந்தா. இதைத்தொடர்ந்து தமிழில் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் இவருக்கு கிடைக்க துவங்கியது. ஒரு கட்டத்தில் விஜய், தனுஷ், சூர்யா, போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கும் அளவுக்கு வளர்ந்த நடிகை சமந்தா, பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மூத்த மகனான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு, […]

இலங்கை

சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்!

  • March 19, 2024
  • 0 Comments

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்திற்கு மற்றுமொரு தினத்தை வழங்குவதற்கு பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானித்துள்ளது. இதன்படி, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ளது. விவசாயிகளின் நெல் கொள்வனவு தொடர்பான பிரச்சினைகள் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு விவாதத்தை எதிர்வரும் 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 12.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சபாநாயகருக்கு எதிரான […]

ஆசியா

ஆப்கானிஸ்தானில் இன்று 5.3 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்திவாய்த நிலநடுக்கம்

  • March 19, 2024
  • 0 Comments

ஆப்கானிஸ்தானில் இன்று காலை 5.3 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், சேத விவரங்கள் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை. ஆப்கானிஸ்தானில் கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாக அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் உணரப்பட்டு வருகிறது. கடந்த மார்ச் 11ம் திகதி 5.3 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் கந்தஹார் பகுதியில் ஏற்பட்டது. இதில் கந்தஹார் தேசிய நெடுஞ்சாலை சேதமடைந்த நிலையில், 21 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இந்நிலையில் […]

இலங்கை

இலங்கை சந்தையில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என எச்சரிக்கை!

  • March 19, 2024
  • 0 Comments

சுங்க அதிகாரிகள் இன்று (19.03) காலை முதல்  தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று காலை 9 மணி தொடக்கம் மாலை 4.45 மணி வரை இந்த கடிதத்திற்கு தொழிற்படும் தொழில்சார் நடவடிக்கை பேணப்படும் என சுங்க அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் அமில சஞ்சீவ ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய போது தெரிவித்தார். அதன் பிறகு, ஓவர் டைம் வேலை செய்வதை விட்டுவிடுவதாகக் கூறிய அவர், நாளொன்றுக்கு கிட்டத்தட்ட 2,000 கன்டெய்னர்களை விடுவிக்கப் பாடுபடுவேன் என்றார். மேலும் கருத்துத் […]

இலங்கை

நாடளாவிய ரீதியில் உள்ள பாதாள உலக செயற்பாடுகளை ஒடுக்க 20 குழுக்கள்!

  • March 19, 2024
  • 0 Comments

நாடளாவிய ரீதியில் நடைபெற்று வரும் யுக்திய நடவடிக்கைகளுக்கு சமாந்தரமாக இன்று (19) முதல் பாதாள உலக செயற்பாடுகளை ஒடுக்குவதற்காக 20 விசேட பொலிஸ் குழுக்களை நிறுவுவதற்கு பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் நடவடிக்கை எடுத்துள்ளார். புதிதாக நிறுவப்பட்ட இந்த 20 குழுக்கள் தற்போது செயற்படும் ஒவ்வொரு பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படவுள்ளதுடன், ஒவ்வொரு குழுவிலும் குற்றப்பிரிவு நிலைய பொறுப்பதிகாரி ஒருவரும், 04 புலனாய்வு அதிகாரிகள், 02 விசேட அதிரடிப்படை அதிகாரிகள் உட்பட 09 […]