ஜப்பானில் அச்சுறுத்தும் தொண்டை வலி – உயிரை பறிக்கும் அபாயம்
ஜப்பானில் அதிகமானோர் ஒருவகைத் தொண்டை வலியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனை அந்நாட்டின் சுகாதார அமைச்சு உறுதி செய்துள்ளது.
Streptococcal toxic shock syndrome (STSS) என்று அந்தத் தொண்டை வலி அழைக்கப்படுகிறது.
இவ்வாண்டில் ஜப்பான் முழுதும் 600க்கும் அதிகமானோர் அதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு முழுமைக்கும் அந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சுமார் 950ஆக இருந்தது.
அந்தத் தொண்டை வலியால் குறைந்த ரத்த அழுத்தம், உறுப்புச் செயலிழப்பு முதலியவை ஏற்படக்கூடும். மரணத்துக்குக்கூட அது இட்டுச் செல்லக்கூடும் என்றும் கூறப்பட்டது.
மூத்த வயதுடையவர்கள் தொற்றுக்கு ஆளானால் அவர்களுக்குக் பல சிக்கல்களை அது உருவாக்கக்கூடும் என கூறப்படுகின்றது.
இருப்பினும், 50 வயதுக்குக் குறைந்தவர்களே தொற்றால் அதிகம் உயிரிழப்பதாக குறிப்பிடப்பட்டது.
(Visited 14 times, 1 visits today)