இலங்கை

இலங்கையில் தங்கம் வாங்க காத்திருப்பவர்களுக்கு அதிர்ச்சி தகவல்!

  • April 16, 2024
  • 0 Comments

தங்கத்தின் விலை உலக சந்தையில் நாளுக்கு நாள் ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதனால் இன்று இலங்கையிலும் தங்கத்தின் விலை சற்று உயர்வடைந்துள்ளது. இன்றைய நிலவரத்தின்படி, 24 கரட் தங்க கிராம் 25,160 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேவேளை 24 கரட் தங்கப் பவுண்  201,300 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல 22 கரட் தங்க கிராம் 23,070 ரூபாவாக பதிவாகியுள்ளது. 22 கரட் தங்கப் பவுண் 184,550 ரூபாவாக பதிவாகியுள்ளது. 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை […]

இலங்கை

புத்தாண்டு காலத்தில் இலங்கையில் அதிகரித்துள்ள வருமானம்!

  • April 16, 2024
  • 0 Comments

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த வருடம் புத்தாண்டு காலத்தில் நெடுஞ்சாலைகளின் வருமானம் 80 மில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன் பணிப்பாளர் நாயகம் பிரியந்த சூரியபண்டார இன்று (16.04) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த வருடம் ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரையான 06 நாட்களில் நெடுஞ்சாலைகளின் வருமானம் 235 மில்லியன் ரூபாவாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

உலகம்

அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்ப் வெற்றிப்பெற வேண்டும் – லிஸ் ட்ரஸ் வலியுறுத்தல்!

  • April 16, 2024
  • 0 Comments

எதிர்வரும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெற்றிபெற வேண்டும் என பிரித்தானிய முன்னாள் பிரதமர் லிஸ் ட்ரஸ் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் டிரம்புடன் “உலகம் பாதுகாப்பானது” என்று அவர் கூறியுள்ளார். பிரித்தானியாவில் மிகக் குறுகிய காலம் பிரதமராக பதவி வகித்த ட்ரஸ், மோதல்களால் உலகம் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், முன்பை விட இப்போது “வலுவான அமெரிக்கா” தேவைப்படுவதாகவும் கூறுகிறார். நவம்பரில் நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளராக […]

ஆஸ்திரேலியா

சிட்னி கத்தி குத்து தாக்குதல் தொடர்பில் அவுஸ்ரேலிய பொலிஸார் வெளியிட்ட தகவல்!

  • April 16, 2024
  • 0 Comments

சிட்னியின் புறநகர் பகுதியில் உள்ள தேவாலயத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதல் பயங்கரவாத செயல் என  ஆஸ்திரேலிய போலீசார் தெரிவித்துள்ளனர். மதவெறியை அடிப்படையாக வைத்து இந்த கத்திக்குத்து சம்பவம் நடந்ததாக போலீசார் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தனர். நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை ஆணையர் கரேன் வெப் கூறுகையில், “எல்லா உண்மைகளையும் ஆய்வு செய்த பிறகே” இந்த முடிவு எட்டப்பட்டது. சந்தேக நபர் பொலிஸாருக்கு தெரிந்த 16 வயதுடையவர் என அவர் தெரிவித்துள்ளார். இந்த கத்திக்குத்து தாக்குதலில் பேராயர் உள்பட  […]

இலங்கை

புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வு ;மகனை ஊக்குவிக்க சென்ற இடத்தில் தந்தைக்கு நேர்ந்த கதி!

  • April 16, 2024
  • 0 Comments

புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வின் போது துரதிஷ்டவசமான மரணம் ஒன்று பெல்மடுல்ல பிரதேசத்தில் இருந்து பதிவாகியுள்ளது. பெல்மடுல்ல படலந்த பிரதேசத்தில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வில் இடம்பெற்ற மரதன் ஓட்டப்போட்டியில் கலந்து கொண்ட தனது மகனை ஊக்குவிக்க வந்த தந்தை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.உயிரிழந்த தந்தை தனது 16 வயது மகனை பாதுகாக்கவும், ஊக்குவிற்பதற்காகவும் அவருடன் இணைந்து ஓடியுள்ளார். இதன்போது, 60 வயதுடைய தந்தை திடீரென மயக்கமடைந்து […]

இந்தியா

இந்தியாவில் படகு விபத்து : குழந்தைகள் உள்ளிட்ட சிறுவர்கள் குழு மாயம்!

  • April 16, 2024
  • 0 Comments

இந்தியாவில் படகு விபத்தில் குழந்தைகள் உட்பட சிறுவர்கள் குழுவொன்று காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் பகுதியில் உள்ள ஜீலம் ஆற்றில் படகு ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கந்தபாலிலிருந்து பத்வாரா நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற படகு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காணாமல் போனவர்களைக் கண்டறியும் நடவடிக்கை ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் மேலும் செய்தி வெளியிட்டுள்ளன.

பொழுதுபோக்கு

மீண்டும் Thug Life படத்தில் இணைந்த JR & DQ.. அப்போ சிம்பு இல்லையா?

  • April 16, 2024
  • 0 Comments

Thug Life படத்தின் படபிடிப்பு பணிகள் இந்த ஆண்டு துவக்கத்தில் தொடங்கியது. முற்றிலும் மாறுபட்டு ஒரு கதை களத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தில் பிரபல நடிகை திரிஷா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார் என்று அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு இந்த திரைப்படத்தில் பிரபல மலையாள நடிகர் துல்கர் சல்மான் மற்றும் முன்னணி தமிழ் கோலிவுட் ஹீரோ ஜெயம் ரவி ஆகிய இருவரும் இணைந்தனர். ஆனால் படப்பிடிப்புக்கான கால அவகாசம் நீண்டு கொண்டே இருந்த காரணத்தினாலும், துல்கர் சல்மான் […]

விளையாட்டு

உலகக் கிண்ணத்திற்கான 32 பேர் கொண்ட ஆரம்ப அணியில் விஜயகாந்த் வியாஸ்காந்த்

  • April 16, 2024
  • 0 Comments

எதிர்வரும் ஜூலை மாதம் ஆரம்பமாகவுள்ள T20 உலகக் கிண்ணப் போட்டிகளுக்காக 32 வீரர்களைக் கொண்ட ஆரம்ப இலங்கை அணி பெயரிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆண்டு உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியை வழிநடத்தும் பொறுப்பை சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்க பெற்றுள்ளார், மேலும் மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர் சரித் அசலங்க துணை தலைவராக பணியாற்றுவார். 32 பேர் கொண்ட குழாமில் மத்திய வரிசை துடுப்பாட்ட வீரரான பானுக ராஜபக்ச மற்றும் விக்கெட் காப்பாளர் நிரோஷன் திக்வெல்ல ஆகியோரும் […]

பொழுதுபோக்கு

நீண்ட இடைவெளிக்குப்பின் விஜய் இன்றி தனியாக வந்த சங்கீதா – வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்

  • April 16, 2024
  • 0 Comments

நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா நீண்ட நாட்களாக பட விழாக்கள் எதிலும் கலந்துகொள்ளாமல் இருந்த நிலையில், தற்போது ஷங்கர் மகள் திருமணத்தில் கலந்துகொண்டபோது எடுத்த புகைப்படங்கள் வைரலாகிறது. இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் திருமணம் சென்னையில் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. அவர் தருண் கார்த்தைகேயன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஐஸ்வர்யாவின் கணவர் தருண், இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் ஆவார். ஷங்கர் மகள் ஐஸ்வர்யாவுக்கு ஏற்கனவே திருமணமாகி முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்த நிலையில், […]

உலகம் செய்தி

ஈரான் தாக்குதல் எதிரொலி – தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு

  • April 16, 2024
  • 0 Comments

உலகளவில் தங்கத்திற்கான தேவை வாரயிறுதியில் அதிகரித்தது. இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து திங்கட்கிழமை வர்த்தகம் தொடங்கியதும் தங்கம் விலை விண்ணை முட்டியது. காலை 8.51 மணிக்கு ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 0.4 சதவீதம் அதிகரித்து US$2,354.62 ஆனது. மத்திய கிழக்கு வட்டாரப் பூசல் புதிய அபாயகட்டத்திற்குள் நுழைந்ததைத் தொடர்ந்து கடந்த வாரம் தங்கம் விலை 0.6 விழுக்காடு உயர்ந்தது. இஸ்ரேல் மீது ஈரான் 300க்கும் மேற்பட்ட […]