ஐரோப்பா

லண்டனில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் உள்ள கடையில் ஆபத்தான நிலையில் ஊழியர்கள் – 30,000£ அபராதம்

  • May 3, 2024
  • 0 Comments

லண்டனில் தமிழர்கள் அதிகம் வாழும் சவுத்ஹோல் பகுதியில் உள்ள cash and carry கடையின் ஊழியர்கள் ஆபத்தான நிலையில் வேலை செய்வதை ஈலிங் ஆணையத்தின் அதிகாரிகள் கண்டறிந்ததை அடுத்து 30,000 பவுண்ட் அபராதம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு டிசம்பர் டிசம்பர், போயிங் வேயில் Fair Deal Cash and Carry Ltd இல் நடந்த விதிமீறல்களை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். சேதமடைந்த கண்ணாடி கூரை பேனல்களைக் கண்டறிந்த அதிகாரிகள் முதல் எச்சரிக்கையை வெளியிட்டனர். அவை கடுமையான […]

விளையாட்டு

ஏமாற்றத்தால் மனம் உடைந்த ரிங்கு சிங் குடும்பத்தினர்..!

  • May 3, 2024
  • 0 Comments

நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட ரிங்கு சிங் முதன்மை அணியில் இடம்பெறாமல், ரிசர்வ் வீரராக தேர்வு செய்யப்பட்டதற்காக அவரது தந்தை வருத்தம் தெரிவித்துள்ளார். வருகிற ஜூன்-2 ம் திகதி அன்று 9-வது உலகக்கோப்பை தொடரானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் தொடங்கவுள்ளது. இந்நிலையில், இதில் கலந்து கொள்ளவிருக்கும் நாடுகள் தற்போது விளையாட போகும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டு கொண்டே இருக்கின்றனர். அதிலும் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட மிகப்பெரிய அணிகளான நியூஸிலாந்து, […]

இலங்கை

இலங்கை முழுவதும் வேகமாக பரவி வரும் வைரஸ் : முகக் கவசம் அணியுமாறு எச்சரிக்கை!

  • May 3, 2024
  • 0 Comments

நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் காய்ச்சல் தொடர்பில் மக்களுக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் குழுவாக கூடுவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவின் பிரதம வைத்திய அதிகாரி ஹேமா வீரகோன் இது தொடர்பான அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளார். இந்த வைரஸ் சுவாசக் குழாயால் ஏற்படுவதனால் இருமல், சளி, காய்ச்சல் மற்றும் உடல்வலி ஆகியவை முக்கிய அறிகுறிகள் என அவர் கூறினார். இரண்டு அல்லது மூன்று நாட்களில் வைரஸ் நிலைமை தணிந்தாலும், […]

ஐரோப்பா

அஸ்ட்ராசெனக்கா தடுப்பூசிக்கு எதிராக வழக்கு தொடரும் இந்திய தம்பதியினர்!

  • May 3, 2024
  • 0 Comments

இந்தியாவில் கொவிஷீல்ட் தடுப்பூசியால் உயிரிழந்த பெண்ணின் பெற்றோர் தற்போது அந்த தடுப்பூசியை உருவாக்கிய பிரித்தானிய நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர திட்டமிட்டுள்ளனர். இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்ட அஸ்ட்ராஜெனக்கா தடுப்பூசி இந்தியாவின் சீரம் நிறுவனத்தால் கொவிஷீல்ட் என்ற பெயரில் உற்பத்தி செய்யப்பட்டு விநியோகிக்கப்பட்டது. இந்த தடுப்பூசி கொவிட் பெருந்தொற்று காலப்பகுதியில் பல மக்கள் செலுத்திக் கொண்டனர். இந்நிலையில் அஸ்ட்ராசெனக்கா தடுப்பூசி இரத்த உறைவு மற்றும் குறைந்த பிளேட்லெட் எண்ணிக்கைக்கு வழிவகுக்கும் அரிதான பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை ஒப்புக் கொண்டுள்ளது. […]

செய்தி வட அமெரிக்கா

புலம்பெயர் சமூகத்தால் அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள நன்மை!

  • May 3, 2024
  • 0 Comments

புலம்பெயர் சமூகத்தால் அமெரிக்கப் பொருளாதாரத்துக்கு நல்லது நடப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். சீனா, இந்தியா, ஜப்பான், ரஷ்யா போன்ற நாடுகளின் பொருளியல் தடுமாறுவதற்கு அந்நாடுகள் குடியேறிகளை விரும்பாததே காரணம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட இவ்வாண்டுக்கான வளர்ச்சி மதிப்பீட்டை ஒட்டி ஜனாதிபதி ஜோ பைடன் பேசினார். ஜப்பான், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் வளர்ச்சி இவ்வாண்டு குறையும் என்றும் அமெரிக்கப் பொருளாதார வளர்ச்சி மேம்படும் என்றும் நாணய நிதியம் தெரிவித்துள்ளது. அமெரிக்கப் […]

ஆசியா

சீனாவிற்கு எதிராக மேற்கத்தேய நாடுகளுடன் கூட்டு சேரும் நியூசிலாந்து!

  • May 3, 2024
  • 0 Comments

நியூசிலாந்து வெளியுறவு அமைச்சர் வின்ஸ்டன் பீட்டர்ஸ் பசிபிக் பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தில் அதிகளவு அக்கறைக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பில் வெலிங்கடனில் கருத்து வெளியிட்ட அவர்,  எங்கள் பிராந்தியத்தின் பாதுகாப்பிற்கு நீண்டகாலமாக அடித்தளமாக இருக்கும் நிறுவனங்கள் மற்றும் ஏற்பாடுகளை சீர்குலைக்கும் முன்னேற்றங்களைக் காண நாங்கள் விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார். நியூசிலாந்து பசிபிக் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், ஒத்த எண்ணங்களைக் கொண்ட மேற்கத்தேய நாடுகளுடன் உறவுகளை ஆழப்படுத்த விரும்புகிறது. நியூசிலாந்து இவ்வாறு செய்வதன் மூலம் […]

ஆசியா

மலேசியாவில் உடல்பருமன் பிரச்சினையால் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

  • May 3, 2024
  • 0 Comments

மலேசியாவில் உடல்பருமன் பிரச்சினையைச் சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, 24 மணி நேரமும் திறந்திருக்கும் கடைகள் மீது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. திறக்கும் நேரத்தைக் குறைக்கும்படி பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள் விடுத்திருக்கிறது. நள்ளிரவு 12 மணியோடு கடையை மூடும்படி பினாங்குப் பயனீட்டாளர் சங்கம் குறிப்பிட்டுள்ளது. இரவில் சாப்பிடுவதால் உடல்பருமன், தூக்கமின்மை, செரிமானச் சிக்கல் போன்ற பல தொல்லைகள் ஏற்படுவதாக பயனீட்டாளர் சங்கத்தின் தலைவர் மெய்தீன் அப்துல் காதர் கூறினார். 24 மணி நேரமும் கடைதிறக்கும் உரிமத்தை அதிகாரிகள் […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் உள்ளாட்சி தேர்தல் : வாக்குகளை எண்ணும் நடவடிக்கை ஆரம்பம்!

  • May 3, 2024
  • 0 Comments

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் இடம்பெற்ற உள்ளுராட்சி தேர்திலில் செலுத்தப்பட்ட வாக்குகளை எண்ணும் நடவடிக்கை நடைபெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் 107 கவுன்சில்களில் 2,600 க்கும் மேற்பட்ட கவுன்சில் இடங்கள், 11 மேயர்களை தேர்தெடுக்கும் மாபெரும் தேர்தலாக இது கருதப்படுகிறது. இந்த தேர்தல் முடிவுகள் இங்கிலாந்து பொதுத் தேர்தலை நோக்கிச் செல்லும் போது அரசியல் கட்சிகள் மீதான பொதுக் கருத்தைக் காட்டும் எனவும் நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஆஸ்திரேலியா செய்தி

ஆஸ்திரேலியாவில் வேகமாக பரவும் நோய் தொற்று – பெற்றோர்களுக்கு எச்சரிக்கை

  • May 3, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலியா – நியூ சவுத் வேல்ஸில் சிறுவர்களிடையே நிமோனியா பாதிப்புகள் அதிகரித்து வருவதாக சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த வாரம் நிமோனியா நோயுடன் அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்த நான்கு வயது மற்றும் அதற்கும் குறைவான சிறுவர்களின் எண்ணிக்கை 124 என சுகாதாரத் துறை சுட்டிக்காட்டியுள்ளது. அதன்படி, ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில், நிமோனியா அறிகுறியுடன் மருத்துவமனைக்கு வரும் பாடசாலை வயது குழந்தைகளின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. ஐந்து முதல் 16 வயதுக்குட்பட்ட 317 குழந்தைகள் […]

அறிவியல் & தொழில்நுட்பம் செய்தி

WhatsAppஇன் புதிய அம்சம் – அதிர்ச்சியில் பயனர்கள்

  • May 3, 2024
  • 0 Comments

வாட்ஸ் அப்பில் புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள Account Restriction அம்சத்தால் பயனர்கள் கதி கலங்கிப்போய் உள்ளனர். மிகவும் கண்டிப்பான இந்த அம்சம் பற்றிய முழு விவரங்களை இந்தப் பதிவில் காணலாம். உலகிலேயே அதிகமான நபர்களால் பயன்படுத்தப்படும் மெசேஜிங் செய்யலியான WhatsApp, அவ்வப்போது பல புதிய அம்சங்களை வெளியிட்ட வண்ணம் உள்ளது. குறிப்பாக தன் பயனர்களின் பாதுகாப்பிற்கு ஏற்ற பல புதிய அம்சங்கள் கொண்டுவரப்படுகின்றன. அப்படி தற்போது புதிதாக வந்துள்ள ஒரு அம்சம் தான் Account Restriction. அதாவது வாட்ஸ் […]