உலகம்

ஈரானை கற்காலத்திற்கு திருப்பி அனுப்ப ட்ரம்ப் சபதம்!

  • April 3, 2026
  • 0 Comments

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒரு ஒப்பந்தம் செய்யுமாறு ஈரான் மீது அழுத்தம் கொடுக்கும் விதமாக, “ஈரானின் மிகப்பெரிய பாலம்” தகர்க்கப்படும் காட்சிகளை அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது ட்ரூத் சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். “ஈரானின் மிகப்பெரிய பாலம் மீண்டும் ஒருபோதும் பயன்படுத்த முடியாதபடி அழிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த காணொளியை பகிர்ந்துள்ள ட்ரம்ப் “காலம் கடந்து, ஒரு சிறந்த நாடாக உருவெடுக்கக்கூடிய எதுவும் மிஞ்சாத நிலைக்குச் செல்வதற்கு முன், ஈரான் ஒரு ஒப்பந்தம் செய்ய வேண்டிய நேரம் இது!” […]

உலகம் செய்தி

ஈரானில் 18 வயது இளைஞனுக்கு மரண தண்டனை: மனித உரிமை அமைப்புகள் கொதிப்பு!

  • April 3, 2026
  • 0 Comments

ஈரானில் நடந்த போராட்டத்தின்போது இராணுவத் தளத்தைத் தாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்ட 18 வயது இளைஞருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டமை தொடர்பில் மனித உரிமை அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. குறித்த இளைஞன் எந்தவொரு ஆயுதத்தையும் பயன்படுத்தவில்லை எனவும், தவறான உள்நோக்கத்திலேயே தண்டனை வழங்கப்பட்டுள்ளது எனவும் விசனம் வெளியிடப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை மிகவும் விரைவாகவும் வெளிப்படைத்தன்மையின்றியும் நடத்தப்பட்டுள்ளது. அவருக்குச் சுதந்திரமான சட்ட உதவியும் மறுக்கப்பட்டுள்ளது. கைதாகி ஒரு மாத காலத்திற்குள்ளேயே வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்பானது, மனித உரிமைகளையும் சட்ட […]

உலகம் செய்தி

தொடரும் போர்: உயிரிழப்புகள் அதிகரிப்பு!

  • April 3, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் ஏற்பட்ட போர் இன்று 35 ஆவது நாளாக தொடர்கின்றது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி ஈரான்மீது போர் தொடுத்தன. ஈரானும் பதிலடி கொடுத்துவருகின்றது. இப்போரால் எரிபொருள் நெருக்கடி மட்டுமல்ல உலக பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல், அமெரிக்க தாக்குதல்களில் ஈரானில் 600-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் சேதமடைந்துள்ளன. ஈரான் மற்றும் லெபனானிலேயே அதிகளவான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. லேபனானில் மாத்திரம் 1,345 பேர் பலியாகியுள்ளனர். ஈரான் […]

உலகம் செய்தி

ஈரானில் மனித உரிமை வழக்கறிஞர் கைது

  • April 2, 2026
  • 0 Comments

ஈரானிய மனித உரிமை வழக்கறிஞரும், 2012 ஆம் ஆண்டின் சகரோவ் பரிசு பெற்றவருமான Nasrin Sotoudeh தெஹ்ரானில் உள்ள தனது வீட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவரது மகள் Mehraveh Khandan, சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில், Sotoudeh நேற்று இரவு வீட்டில் தனியாக இருந்தபோது கைது செய்யப்பட்டதாகக் கூறினார். கைது செய்யப்பட்டதிலிருந்து அவர் குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ளவில்லை என்றும் தெரிவித்தார். மேலும், அதிகாரிகள் வீட்டில் இருந்து மடிக்கணினிகள் மற்றும் தொலைபேசிகள் உள்ளிட்ட மின்னணு […]

உலகம் செய்தி

ஜெருசலேமில் தாக்குதல் சத்தம் – கட்டார், குவைட் ட்ரோன்கள் இடைமறிப்பு

  • April 2, 2026
  • 0 Comments

இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் தொடர்ந்து ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருவதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் தெரிவித்துள்ளன. இந்த தாக்குதல்களின் சத்தம் ஜெருசலேமில் கேட்கப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றன. இதனிடையே, ஈரான் மேற்கொண்ட தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் வகையில், கட்டார் தனது வான்வெளிக்குள் நுழைந்த அனைத்து ஆளில்லா விமானங்களையும் இடைமறித்ததாக அதன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேபோன்று, கடந்த 24 மணித்தியாலங்களில் இரண்டு ஏவுகணைகளையும் 13 ட்ரோன்களையும் இடைமறித்ததாக குவைட் பாதுகாப்பு அமைச்சகமும் அறிவித்துள்ளது. இந்நிலையில் மத்திய கிழக்கில் நிலவும் […]

ஐரோப்பா

தம்பதிக்கிடையே நடந்த மோதல் – ஐரோப்பிய தலைவரை கேலி செய்த ட்ரம்ப்!

  • April 2, 2026
  • 0 Comments

அமெரிக்காவுக்கும் நேட்டோவுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோனை கேலி செய்துள்ள விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்ரோன்  அவரது துனைவியாருடன் வியட்நாம் பயணம் செய்தபோது தம்பதிக்குள் எழுந்த மோதல் போக்கையே ட்ரம்ப் விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளார். இந்த விடயத்திற்கு பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் இன்று எதிர்வினையாற்றியுள்ளார். இழிவான கருத்துக்கள் “நாகரிகமானவையாகவோ அல்லது தரமானவையாகவோ இல்லை” என மக்ரோன் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை ட்ரம்பின் இந்த செயலுக்கு தீவிர இடதுசாரியான ‘பிரான்ஸ் […]

செய்தி தமிழ்நாடு

50,000 ரூபா, குறைந்த வருவாய் – உதயநிதியின் சொத்து மதிப்பு தெரியுமா?

  • April 2, 2026
  • 0 Comments

துணை முதல்வர் உதயநிதிக்கு 20.64 கோடி ரூபாவுக்கு அசையும், அசையா சொத்துகள் இருப்பதாக வேட்புமனுவுடன் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளார். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனுவுடன் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் இடம் பெற்றுள்ள விவரம் – உதயநிதி தனது கையிருப்பில் ரூ.50,000, அவரது மனைவி கிருத்திகா கையிருப்பில் ரூ.75,000 இருப்பதாக தெரிவித்துள்ளார். மகள் தன்மயா வங்கிக் கணக்கில் நிரந்தர வைப்பு நிதியாக […]

#SummerWellness #Hydration2.0 #Neeragaram #Kammangool #HeatStrokeTips #TamilHealthNews வாழ்வியல்

கோடை காலத்தை வெல்ல ‘நீரேற்றம்’: பாரம்பர்ய உணவுகளுக்கு திரும்பும் மக்கள்!

  • April 2, 2026
  • 0 Comments

முன்னெப்போதும் இல்லாத வகையில் உலகம் முழுவதும் கோடை வெப்பம் அதிகரித்து வருகிறது. ஆசிய நாடுகள் மட்டுமன்றி ஐரோப்பா போன்ற நாடுகளிலும் ‘வெப்ப அலை’ (Heat Wave) பெரும் சவாலாக மாறியுள்ளது. இந்நிலையில், செயற்கை பானங்களைத் தவிர்த்து, தமிழர்களின் பாரம்பர்ய ‘நீரேற்ற’ முறைகளை உலகத் தமிழர்கள் மீண்டும் கையில் எடுத்துள்ளனர். 1. உலகளாவிய ரீதியில் வைரலாகும் ‘நீராகாரம்’ (Fermented Rice Water): நமது முன்னோர்களின் ஆரோக்கியத்தின் இரகசியம் ‘பழைய சாதம்’ இன்று லண்டன் முதல் கனடா வரை “Probiotic […]

உலகம் செய்தி

ஹார்முஸ் நீரிணை: பிரிட்டனில் விசேட பாதுகாப்பு கூட்டம்!

  • April 2, 2026
  • 0 Comments

பிரிட்டனில் அடுத்த வாரம் விசேட உயர்மட்ட பாதுகாப்பு கூட்டமொன்று நடைபெறவுள்ளது. ஹார்முஸ் நீரிணையில் Strait of Hormuz கப்பல் போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்து ஆலோசனை நடத்தும் நோக்கிலேயே இக்கூட்டம் இடம்பெறவுள்ளது என தெரியவருகின்றது. பாதுகாப்பு தரப்பில் உள்ள பிரதானிகள், பாதுகாப்பு கொள்கை வகுப்பாளர்கள் உள்ளிட்டவர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர். வேளிவிவகார அமைச்சர்கள் மாநாடு இன்று நடைபெற்ற நிலையிலேயே அடுத்து பாதுகாப்பு கூட்டம் நடத்தப்படும் என பிரிட்டன் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. மேற்படி பாதுகாப்பு கூட்டம் பிராந்தியத்தில் […]

இலங்கை செய்தி

பிள்ளையானுக்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

  • April 2, 2026
  • 0 Comments

தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின்  பொறுப்பில் இருந்த சிவநேசத்துரை சந்திரகாந்தன் அல்லது பிள்ளையானை விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிசை நீதவான் நீதிமன்றம் இன்று (02) உத்தரவிட்டுள்ளது. கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் (2004 – 2006) பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான விசாரணைகளுக்காக, முன்னாள் இராஜாங்க அமைச்சரான சிவநேசத்துரை சந்திரகாந்தன்   கடந்த ஏப்ரல் 8ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டார். காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் குற்றப் புலனாய்வுத் […]