இந்தியா ஐரோப்பா

ஸ்காட்லாந்து முதல் மந்திரி பதவியில் இருந்து அதிகாரபூர்வமாக பதவி விலகினார் ஹம்சா யூசப்!

  • May 7, 2024
  • 0 Comments

ஸ்காட்லாந்து முதல் மந்திரி பதவியில் இருந்து ஹம்சா யூசப் இன்று (07.05) அதிகாரப்பூர்வமாக ராஜினாமா செய்துள்ளார்.  யூசப் தனது ராஜினாமா கடிதத்தில் கையொப்பம் இட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து புதிய முதல் மந்திரியை தெரிவு செய்ய வேட்பு மனுத்தாக்கல் நடைபெற்றது. இதில் ஸ்வின்னி மட்டுமே வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். SNP க்கு பெரும்பான்மை இல்லாத போதிலும் எதிர்க்கட்சிகள் அவரைத் தடுக்க முற்படாத நிலையில், இன்று ஹோலிரூட்டில் அவர் முதல்-மந்திரி ஆவதற்கு MSPகள் வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை

யாழ்ப்பாணம் – “நானே அம்மாவை கொலை செய்தேன் ”; 16 வயது சிறுவனின் அதிர்ச்சியளிக்கும் வாக்குமூலம்

  • May 7, 2024
  • 0 Comments

யாழ்ப்பாணம், தெல்லிப்பழை பகுதியில் வீடொன்றில் இருந்து சந்தேகத்திற்கிடமான முறையில் பெண் ஒருவரின் சடலம் வெள்ளிக்கிழமை (03) மீட்கப்பட்டுள்ளது. தெல்லிப்பழை பகுதியை சேர்ந்த ஹெனடிக் ஜஸ்மின் (வயது 37) எனும் பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன் அவர் தனது இரு பிள்ளைகளுடன் வசித்து வந்த நிலையில் அவரது கணவர் வெளிநாட்டில் வசித்து வருகின்றார் என தெரியவந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (03) அன்று வீட்டில் தாயும் 16 வயதுடைய மகனும் மட்டுமே இருந்துள்ள நிலையில் மறுநாள் பெண் உயிரிழந்து சடலமாக […]

ஐரோப்பா

பிரித்தானியா – வேல்ஸில் சிவப்பு அறிவித்தலை வெளியிட்ட 03 முக்கிய மருத்துவமனைகள்!

  • May 7, 2024
  • 0 Comments

வேல்ஸில் மூன்று மருத்துவமனைகள் சிவப்பு அறித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளன. இதன்படி Llantrisant இல் உள்ள Royal Glamorgan மருத்துவமனை, Merthyr Tydfil இல் உள்ள பிரின்ஸ் சார்லஸ் மருத்துவமனை மற்றும் Princess of Wales Hospital in Bridgend ஆகிய மருத்துவமனைகள் இந்த சிவப்பு அறித்தலை வெளியிட்டுள்ளன. குறித்த மருத்துவமனைகளில் அவசர சேவை பிரிவு, விபத்து பிரிவு ஆகியன துரிதமாக செயற்படுவதில் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதாவது நோயாளர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலைமை உருவாகியுள்ளதாக […]

ஐரோப்பா

டேவிட் கேமரூன் வெளியிட்ட கருத்து ; பிரித்தானியாவுக்கு வெளிப்படையாக மிரட்டல் விடுத்த ரஷ்யா

  • May 7, 2024
  • 0 Comments

பிரித்தானிய ஆயுதங்களை பயன்படுத்தி உக்ரைன் ரஷ்யா மீது தாக்குதல் முன்னெடுத்தால், பிரித்தானியா மீது தாக்குதல் உறுதி என ரஷ்யா மிரட்டல் விடுத்துள்ளது. ரஷ்யாவை தாக்குவதற்கு பிரித்தானிய ஆயுதங்களைப் பயன்படுத்த உக்ரைனுக்கு உரிமை உண்டு என்று கடந்த வாரம் வெளிவிவகார அமைச்சர் டேவிட் கேமரூன் கூறிய நிலையிலேயே ரஷ்யா பதிலடி உறுதி என்று மிரட்டல் விடுத்துள்ளது.அத்துடன் இந்த விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவிக்கும் பொருட்டு பிரித்தானிய தூதர் நைஜல் கேசியை ரஷ்ய வெளிவிவகார அமைச்சகத்திற்கு அழைக்கப்பட்டதாகவும் ரஷ்யா கூறியுள்ளது. ஆனால் […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ரயில் ஊழியர்கள்!

  • May 7, 2024
  • 0 Comments

பிரித்தானியாவில் ரயில் சாரதிகள் இன்று (07.05) புதிய வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். ஊதியம் தொடர்பான நீண்டகால சர்ச்சையின் ஒரு பகுதியாக இந்த வேலை நிறுத்த போராட்டத்தை ஊழியர்கள் முன்னெடுத்துள்ளனர். 16 ரயில் நிறுவனங்களில் உள்ள Aslef தொழிற்சங்க உறுப்பினர்கள் இன்று முதல் வியாழன் வரை வெவ்வேறு நாட்களில் வெளிநடப்பு செய்வார்கள். கூடுதலாக, அனைத்து உறுப்பினர்களும் சனிக்கிழமை வரை கூடுதல் நேரம் வேலை செய்ய மறுப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம்

இணையத்தில் வைரலாகும் டெஸ்லா நிறுவனத்தின் மின்னஞ்சல் செய்தி!

  • May 7, 2024
  • 0 Comments

உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலோன் மஸ்க்கின் நிறுவனமான டெஸ்லாவில் பணியாளர்களை வேலையில் இருந்து நீக்குவது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பல ஊழியர்கள் தங்களுடைய அனுபவங்களை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்தவகையில் தற்போது ஊழியர் ஒருவர் வெளியிட்டுள்ள வேலைநிறுத்த கடிதம் வைரலாகி வருகின்றது. பணிநீக்கம் செய்யப்பட்ட பல ஊழியர்களின் உள்நுழைவுகள் முடக்கப்பட்டுள்ளன.  நிறுவன அலுவலகங்களுக்கான அணுகல் நிறுத்தப்பட்டுள்ளது. எனவே மின்னஞ்சல்கள் பணி மின்னஞ்சல்களுக்குப் பதிலாக தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.  

பொழுதுபோக்கு

ஜோதிகா மகளைத் தொடர்ந்து தனுஷ் மகன் யாத்ரா குறித்து வெளியான செய்தி

  • May 7, 2024
  • 0 Comments

நடிகர் தனுஷின் மகன் யாத்ரா 12ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதி இருந்தார். இந்த முடிவுகள் திங்கட் கிழமையான நேற்று வெளியானது. இதில் யாத்ரா நல்ல மதிப்பெண்கள் எடுத்துள்ளதாக இணையத்தில் தகவல் ஒன்று வைரலாகி வருகிறது. எனினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. ரஜினியின் மகளான ஐஸ்வர்யா தன்னைவிட இரண்டு வயது குறைந்தவரான தனுஷை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்த நிலையில், திடீரென இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். மகன்களுக்காக இருவரும் […]

ஆசியா

சீனாவில் வைத்தியசாலையில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதல் : 10 பேர் பலி!

  • May 7, 2024
  • 0 Comments

தென்மேற்கு சீனாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் இடம்பெற்ற கத்தி குத்து தாக்குதலில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் தென்மேற்கு யுனான் மாகாணத்தில் உள்ள Zhenxiong கவுண்டியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. தாக்குதலின் தன்மை குறித்து சீனாவின் அரச ஊடகம் விவரிக்கவில்லை. ஆனாலும் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகள் மருத்துவமனை வளாகத்திற்குள் நபர் ஒருவர் கத்தியுடன் இருப்பதைக் காட்டுகின்றன. தாக்குதலின் தன்மை மற்றும் அதன் பின்னணியில் உள்ள நோக்கம் குறித்து அதிகாரிகள் இன்னும் […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் வார இறுதியில் மூடபடவுள்ள நெடுஞ்சாலை : வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை!

  • May 7, 2024
  • 0 Comments

பிரித்தானியாவில் இந்த வார இறுதியில் M25 பாதை மூடப்படவுள்ளதால் வாகன ஓட்டிகள் மாற்று வழிகளை பின்பற்ற பரிந்துறைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு மாற்று வழிகளை பின்பற்றும்போது கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். M25 பாதையானது வரும் வெள்ளிக்கிழமை (10.05)   இரவு 9 மணி முதல் திங்கள் காலை 6 மணி வரை (Surrey) சர்ரே  சந்தியின் இரு திசைகளிலும் மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறுகிய மாற்று வழிகளைக் கண்டறியும் முயற்சியில் திசைதிருப்பல் அறிகுறிகளைப் புறக்கணிக்கும் […]

இலங்கை

இலங்கை- வீட்டில் தனியாக இருந்த பெண் கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் படுகொலை!

  • May 7, 2024
  • 0 Comments

வெலிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட , ராஜகல, வெலிகம பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் பெண் ஒருவர் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (06) இரவு 11.30 மணியளவில் உயிரிழந்த பெண் தங்கியிருந்த வீட்டுக்குள் இனந்தெரியாத நபர்கள் சிலர் புகுந்துள்ள நிலையில், வீட்டில் இருந்த பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. பின்னர், வீட்டில் வைத்து பெண்ணின் கைகால்கள் கட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.உயிரிழந்தவர் 78 வயதுடைய பெண் என பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த பெண் தனது சகோதரி […]