ஆசியா

பாகிஸ்தான்- குவாடர் துறைமுகத்தில் பயங்கரவாதிகள் துப்பாக்கி பிரயோகம்: 7 தொழிலாளர்கள் பலி

  • May 9, 2024
  • 0 Comments

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள துறைமுக நகரமான குவாடரில் இன்று அடையாளம் தெரியாத ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து குவாடர் பொலிஸ் நிலைய அதிகாரி மொஹ்சின் அலி கூறுகையில், பலுசிஸ்தான் மாகாணத்தின் சுர்பந்தர் பகுதியில் உள்ள குவாடர் துறைமுகத்திற்கு அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் அடையாளம் தெரியாத ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 7 தொழிலாளர்கள் உயிரிழந்தனர் மற்றும் […]

பொழுதுபோக்கு

யாருப்பா இது.. நம்ம காஜலா?? ஐயோ என புலம்பும் ரசிகர்கள்… வைரலாகும் புகைப்படம்

  • May 9, 2024
  • 0 Comments

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் காஜல் அகர்வால். கோலிவுட்டில் விஜய், அஜித், சூர்யா போன்ற டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த இவர், திருமணத்துக்கு பின்னர் மார்க்கெட் இழந்துவிட்டார். இவருக்கு கடந்த 2020-ம் ஆண்டு கவுதம் கிச்சிலு என்பவருடன் திருமணம் ஆனது. இந்த ஜோடிக்கு நீல் கிச்சிலு என்கிற ஆண் குழந்தையும் பிறந்தது. தற்போது நடிகை காஜல் அகர்வால் நடிப்பில் இந்தியன் 2 திரைப்படம் உருவாகி வருகிறது. தமிழில் இந்தியன் 2 படத்தை மலைபோல் நம்பி […]

இலங்கை

இலங்கை – ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் திகதி அறிவிக்கப்பட்டது

  • May 9, 2024
  • 0 Comments

இலங்கையில் 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 17 ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 16ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதன்படி தேர்தல் குறித்த வேட்பு மனுக்கள் உரிய காலப்பகுதியில் அழைக்கப்படும் என அந்த ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.

இலங்கை

இலங்கையில் இன்றிரவு வானிலையில் ஏற்படும் மாற்றம் : மக்களுக்கு எச்சரிக்கை!

  • May 9, 2024
  • 0 Comments

இலங்கையில் பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேல், சப்ரகமுவ, தென், கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மாத்தளை, முல்லைத்தீவு மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவில் இடியுடன் கூடிய பலத்த மின்னல் அபாயம் அதிகளவில் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அத்துடன் குறித்த பிரதேசங்களில் உள்ள மக்கள் அவதானமாக இருக்குமாறும், இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்த பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் எனவும் குறித்த அறிவிப்பில் […]

விளையாட்டு

கால்பந்து விளையாட்டின் தீவிர ரசிகரா நீங்கள்! அப்போ உலக கால்பந்து தினம் எப்போது தெரியுமா?

மே 25ஆம் திகதியை உலக கால்பந்து தினமாக அறிவிக்கும் தீர்மானத்தை ஐநா பொதுச் சபை செவ்வாயன்று ஏற்றுக்கொண்டது. தீர்மானத்தின்படி 1924 ஆம் ஆண்டு பிரெஞ்சு தலைநகர் பாரிஸில் நடைபெற்ற கோடைகால ஒலிம்பிக் போட்டிகளின் ஒரு பகுதியாக அனைத்து பிராந்தியங்களின் பிரதிநிதித்துவத்துடன் வரலாற்றில் முதல் சர்வதேச கால்பந்து போட்டியின் 100 வது ஆண்டு நிறைவை நாள் குறிக்கிறது. ஐ.நா.வில் லிபியாவின் நிரந்தரப் பிரதிநிதி தாஹர் எம். எல்-சோனியால் அறிமுகப்படுத்தப்பட்ட வரைவுத் தீர்மானம், 193 உறுப்பினர்களைக் கொண்ட பொதுச் சபையில் […]

பொழுதுபோக்கு

இந்தியனுக்காக தேசிய விருது வாங்கிய கமல்ஹாசன்.. வீடியோ வெளியிட்ட லைகா

  • May 9, 2024
  • 0 Comments

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 28 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதை முன்னிட்டு லைகா நிறுவனம் தொடர்ந்து பல போஸ்ட்களை வெளியிட்டு இந்தியன் 2 படத்திற்கான புரமோஷன் பணிகளை ஆரம்பித்துள்ளது. ஐந்தாண்டுகளுக்கு முன்னதாக தொடங்கப்பட்ட இந்தியன் 2 திரைப்படம் ஒருவழியாக இந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியாகும் என லைகா அறிவித்துள்ள நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போகும் என்றும் ஜூலை மாதம்தான் இந்தியன் 2 வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. […]

இந்தியா

மகாராஷ்ரா – 2 குழந்தைகளைக் கொன்று விட்டு மாடியில் இருந்து குதித்து விபரீத முடிவெடுத்த தாய்!

  • May 9, 2024
  • 0 Comments

தனது இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த தாய், மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம், மகாராஷ்டிராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்ரா மாநிலம், நாசிக்கில் உள்ள கோனார்க் நகரைச் சேர்ந்தவர் அஷ்வினி நிகும்ப்(30). இவருக்கு ஆராத்யா(8), அகஸ்தியா(2) என்ற இரண்டு குழந்தைகள் இருந்தனர். அஷ்வினிக்கும், அவரது கணவருக்கும் குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், நேற்று அவரது கணவர் வெளியூர் சென்றிருந்தார். இந்த நிலையில், தனது இரண்டு […]

ஆசியா

இஸ்ரேல் ஈரான் இடையே அதிகரிக்கும் பதற்றம்: அச்சத்தில் மேற்குலகம்

ஈரானின் இருப்புக்கு இஸ்ரேலால் அச்சுறுத்தல் ஏற்பட்டால், தனது அணுசக்தி கோட்பாட்டை மாற்ற வேண்டும் என ஈரானின் உச்ச தலைவரின் ஆலோசகர் கமல் கர்ராசி தெரிவித்த்துள்ளார். “அணுகுண்டு தயாரிப்பதில் எங்களிடம் எந்த முடிவும் இல்லை, ஆனால் ஈரானின் இருப்பு அச்சுறுத்தப்பட்டால், எங்கள் இராணுவக் கோட்பாட்டை மாற்றுவதைத் தவிர வேறு வழியில்லை” என்று கர்ராசி கூறியுள்ளார். ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனி 2000 களின் முற்பகுதியில் ஃபத்வாவில் அணு ஆயுதங்களை உருவாக்குவதைத் தடை செய்தார், 2019 இல் தனது […]

இலங்கை

இலங்கை : அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

  • May 9, 2024
  • 0 Comments

2024 ஆம் ஆண்டின் பொருளாதார வளர்ச்சியை கவனத்தில் கொண்டு அரச ஊழியர்களின் சம்பளத் திருத்தம் குறித்து தீர்மானிக்க முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் அமர்வில் இன்று உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், 2024 ஜனவரி முதல் அரச ஊழியர்களுக்கு மாதாந்தம் 5000 ரூபா வாழ்வாதார கொடுப்பனவாக வழங்கப்பட்டது. தற்போது 10,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் முதல் ஓய்வு பெற்ற அரச ஊழியர்களுக்கு 2,500 ரூபாய் கொடுப்பனவும் வழங்கப்பட்டது. வாழ்க்கைச் […]

வட அமெரிக்கா

அமெரிக்கா – மாயமான இந்திய மாணவர் … தீவிர தேடுதல் பணியில் சிகாகோ பொலிஸார்

  • May 9, 2024
  • 0 Comments

அமெரிக்காவில் உயர் கல்வி படிப்பதற்காக செல்லும் இந்திய மாணவர்கள் தாக்கப்படுவது மற்றும் கொலை செய்யப்படும் நிகழ்வு தொடர்கிறது. இந்த ஆண்டு 10-க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், அமெரிக்காவின் சிகாகோ நகரில் படித்து வந்த இந்திய மாணவர் ரூபேஷ் சந்திர சிந்தாகிண்டியை கடந்த 2ம் திகதி முதல் காணவில்லை. என் ஷெரிடன் சாலையின் 4300 பிளாக்கில் இருந்து அவர் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர். ஒரு வாரமாக […]