முதலீடுகளை ஈர்க்க நாளை லண்டன் வருகிறார் முதல்வர் விஜய்
முதலமைச்சர் விஜய், தமிழகத்துக்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் முயற்சியின் ஒரு பகுதியாகத் தனது முதலாவது அரசுமுறை வெளிநாட்டுப் பயணமாக நாளை (வியாழக்கிழமை) லண்டன் புறப்படுகிறார்.
தமிழகத்திற்குப் புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பது மற்றும் உலகளாவிய முன்னணி நிறுவனங்களின் தலைவர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதுமே இந்தப் பயணத்தின் முதன்மை நோக்கமாக அமைகிறது.
லண்டனில் நடைபெறும் பல்வேறு முதலீட்டாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் முதலமைச்சர் விஜய், தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்குக் உள்ள சாதகமான சூழல்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து சர்வதேச முதலீட்டாளர்களிடம் விரிவாக எடுத்துரைக்கவுள்ளார்.
முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு விஜய் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவென்பதால், இப் பயணம் அரசியல் மற்றும் தொழில்துறை வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பயணத்தின் ஒரு பகுதியாக, பிரித்தானியா சில்வர்ஸ்டோனில் நடைபெறும், தனது நெருங்கிய நண்பர் நடிகர் அஜித்குமாரின் கார் பந்தயத்தை முதல்வர் பார்க்க இருப்பதாக கூறப்படுகிறது.




