உக்ரைனுக்கு விரைந்த ஆண்டனி பிளிங்கன் – ஸெலன்ஸ்கியுடன் ஆலோசனை
உக்ரேன் அதிபருடன் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் ஆலோணனை நடத்தவுள்ளார். பொலந்திற்கு பயணம் மேற்கொண்டிருந்த அவர் அங்கு இருந்து ரயிலில் அண்டை நாடான உக்ரைனுக்கு இன்று காலை சென்றடைந்ததாக (14) தகவல் வெளியாகியுள்ளது. எவ்வித முன்னறிவிப்பு இன்றி உக்ரைனுக்க திடீர் பயணம் மேற்கொண்டிருப்பது, உக்ரைன் அரசுக்கு சற்று அதிர்ச்சியளித்துள்ளது. ரஷ்யாவுக்கு எதிராகப் போரிட்டு வரும் உக்ரேனியர்களுக்கு அமெரிக்காவின் வலுவான ஆதரவு இருக்கிறது என்பதை உறுதிபடுத்தும் வகையில் அவரது பயணம் அமைந்திருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர். உக்ரேனுக்கு […]













