வாழ்வியல்

மாதவிடாய் நிற்கும் போது உடலில் ஏற்படும் மாற்றம் – நிபுணர் விளக்கம்

Hot flashes என்பது திடீர் வெப்பம், வியர்த்தல் மற்றும் அசெளகரியம் போன்றவற்றை உண்டு செய்யும், மெனோபாஸ் காலத்தில் வரக்கூடிய வாசோமோட்டர் அறிகுறிகளில் இதுவும் ஒன்று. இந்த அறிகுறிகள் ஒவ்வொருவருக்கும் வித்தியாசமானது. சிலர் இதை கவனிக்க மாட்டார்கள்.

சிலர் தினசரி வாழ்க்கையில் சூடான ஹாட் ஃப்ளாஷ்களை தீவிரமாக உணர்வார்கள்.

எனினும் இவை உருவாகும் நேரம் என்பது ஒவ்வொரு நபருக்கும் வித்தியாசமாக இருக்கும். இவற்றை எப்படி கட்டுப்படுத்துவது என்பதை விளக்குகிறார் சென்னையை சேர்ந்த​ Dr Akila Ravikumar.

பெண்கள் மாதவிடாய் நிற்கும் காலத்தில் மெனோபாஸ்க்கு முந்தைய பெரிமெனோபாஸ் நிலையில் சில அறிகுறிகளை எதிர்கொள்வார்கள். பெரிமெனோபாஸ் இருக்கும் போது உடலில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் ஏற்றமாக அல்லது இறக்கமாக இருக்கும். அவற்றிலிருந்து மெனோபாஸ் காலம் வரும் போது தான் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் படிப்படியாக இறங்க தொடங்கும். அப்போது உடல் உணர்த்தும் அறிகுறிகளில் இந்த ஹாட் ஃப்ளஷ் அறிகுறிகளும் ஒன்று.

ஹாட் ஃப்ளஷ் என்பது திடீரென்று முகம் மற்றும் நெஞ்சு பகுதியில் சூடாகி திடீரென்று வியர்த்து கொட்டும். இது உடல் வெப்பநிலையில் உடல் வெப்பத்தை குறைக்க செய்யும் வழக்கமான செயல்பாடு என்றாலும் இதன் அறிகுறி தாங்கமுடியாமல் இருக்கும்.

பொதுவாக எல்லா பெண்களுக்கும் மாதவிடாய் நிற்றல் காலம் வரும் என்றாலும் எல்லோருக்கும் எல்லா அறிகுறிகளும் இருக்கும். அதுவும் தீவிரமாக இருக்கும் என்று சொல்ல முடியாது. நமது உடல் வெப்பநிலையை கட்டுப்படுத்துவது மூளையில் உள்ள ஹைபோதலாமஸ். உடலில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் குறையும் போது அதாவது ஈஸ்ட்ரோஜன் குறைவதை உணரும் போது மற்ற ஹார்மோன்களும் தூண்டும் போது தான் இந்த ஹாட் ஃப்ளஷஷ் வருகிறது.

எல்லோருக்கும் இந்த கேள்வி வரும். மெனோபாஸ் கால அறிகுறிகளை உண்டு செய்யும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் இழப்பு உண்டு செய்யாமல் தடுக்க ஹார்மோன் மாற்று சிகிச்சை செய்யலாமா என்னும் கேள்வி வரும். ஆனால் இந்த சிகிச்சை எல்லோருக்கும் செய்ய முடியாது,. வெளிநாடுகளில் ஹார்மோன் தெரபி சிகிச்சை பலவும் உண்டு. பெரும்பாலும் இளவயது பெண் இது கருப்பையில் ஓவரியன் நீக்கும் அறுவை சிகிச்சை செய்திருந்தால் அவர்களுக்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் தெரபி செய்யப்படும். அதனால் மெனோபாஸ் காலங்களில் ஈஸ்ட்ரோஜன் மாற்று அறுவை சிகிச்சை தேவையில்லை.

தாவர அடிப்படையில் சோயா என்பது phytoestrogens பைட்டோ ஈஸ்ட்ரோஜன் உணவுகளில் ஒன்று. இதை டயட்டில் சேர்த்துகொள்ளலாம். தினமும் எடுக்க கூடாது வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் எடுத்துகொள்ளலாம். சோயா பீன்ஸ், சோயா டோஃபு, சோயா நக்கட்ஸ் போன்று எடுத்துகொள்ளலாம். ஆனால் இதை பெண்கள் எடுத்துகொள்ளலாம் . ஆண்கள் அதிகம் எடுத்துகொள்வதை தவிர்க்க வேண்டும். மெனோபாஸ் காலத்தில் உள்ள பெண்கள் பைட்டோஈஸ்ட்ரோஜன் சேர்க்க இந்த சோயாவை சேர்த்துகொள்ளலாம்.

வைட்டமின் இ என்பது இயற்கையாக ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பை தூண்டும். இது சப்ளிமெண்ட்டாக கிடைக்கும்.
ப்ரிம்ரோஸ் ஆயில் ஈஸ்ட்ரோஜனுக்கு உதவும்
வைட்டமின் பி1 மற்றும் வைட்டமின் பி6 போன்றவை உதவும்.
மெனோபாஸ் அறிகுறிகளை கட்டுப்படுத்த சிறந்த தடுப்பு முறை யோகா தான். குறிப்பாக சூரிய நமஸ்காரம் செய்யும் போது சூரிய ஒளி நேரடியாக நமது கபால மண்டலத்தில் படும் போது ஹைபொதலாமஸ் செயல்பாடு சீராக இருக்கும். தினமும் காலை 7 மணி முதல் 9 மணிக்குள் 10 நிமிடங்கள் செய்தாலே இந்த அறிகுறிகள் கட்டுப்படும்.
இவையெல்லாம் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அறிகுறிகளை கட்டுப்படுத்துவதோடு மெனோபாஸ் அறிகுறிகளையும் கட்டுப்படுத்தும்.

(Visited 5 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

woman exercising
வாழ்வியல்

ஸ்கிப்பிங் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

ஸ்கிப்பிங் செய்வதால் பாரிய அளவு நன்மைகள் உடலுக்கு கிடைக்கின்றது. ஸ்கிப்பிங் என்பது ஆரோக்கியமான உடற்பயிற்சி போன்றது. இது நீங்கள் தொடர்ந்து சுவாசிக்க உதவுகிறது மற்றும் இதயத்தை பலப்படுத்துகிறது.
vegetable and meat
வாழ்வியல்

ஹீமோகுளோபின் குறைவாக இருக்கிறதா : இந்த உணவுகளை எடுத்துகொள்ளுங்கள்!

ஒருவருக்கு ஹீமோகுளோபின் தேவையான அளவிற்கு இருப்பதை விட குறைவாக இருந்தால் அவர் எப்போதும் சோர்வாக காணப்படுவார். இதைத் தவிர உடல் வலிமையின்மைஇ சருமம் மஞ்சள் நிறமாதல்,  அசாதாரமான

You cannot copy content of this page

Skip to content