உலகம் செய்தி

ஈரான் அதிபரின் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்தின் அதிர்ச்சி வீடியோ வெளியானது

  • May 20, 2024
  • 0 Comments

ஈரான் ஜனாதிபதி ரைசி பயணித்த ஹெலிகாப்டரின் நேற்று விபத்துக்கு உள்ளனாது. விபத்து நடந்ததாக கூறப்படும் இடத்தை டிரோன் ஒன்று உறுதி செய்த நிலையில் அந்த பகுதியில் செய்யப்பட்ட சோதனை நடைபெற்று வருகின்றது. இதில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்துள்ளதாக நம்பப்படுகின்றது. ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி அண்டை நாடான அஜர்பைஜானில் இரண்டு அணைகள் திறப்பு விழாவில் பங்கேற்றுவிட்டு ஹெலிகாப்டர் வாகனத்தில் நேற்று ஈரான் திரும்பியுள்ளார். அங்கு, குறித்த பகுதியில் காலநிலை மிகவும் […]

விளையாட்டு

ஓய்வு பெற்று ஆஸ்திரேலியாவில் குடியேற தயாராகும் இலங்கை கிரிக்கெட் வீரர்

  • May 20, 2024
  • 0 Comments

இலங்கையின் மூத்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவர் அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறவுள்ள 2024 ஆம் ஆண்டு T20 உலகக் கிண்ணத்தின் பின்னர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மூன்று வடிவங்களின் முன்னாள் கேப்டன்களில் ஒருவரான அவர் உலகக் கோப்பையின் முடிவில் ஆஸ்திரேலியாவின் மெல்போர்னுக்கு குடிபெயர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஏற்கனவே மெல்போர்னில் சில வீடுகளை வாங்கியுள்ளார், ஏனெனில் அவர் தனது குடும்பத்துடன் குடியேற விரும்புகிறார் என தெரியவந்துள்ளது.

செய்தி மத்திய கிழக்கு

ஈரான் ஜனாதிபதி ஹெலிகாப்டர் விபத்து – யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை?

  • May 20, 2024
  • 0 Comments

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்தை உயிர்காப்பாளர்கள் கண்டுபிடித்துள்ளதாக ஈரான் அரசு தொலைக்காட்சி அறிவித்துள்ளது. இதற்கிடையில், ஈரானிய செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர், நிலைமை சரியான இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். ஈரான் ஜனாதிபதி உயிருடன் இருக்கிறாரா? இல்லை? இதுவரையில் உறுதியான அறிக்கையை வெளியிட முடியாது எனவும் வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்தில் யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என ஈரானிய அரசு […]

ஆஸ்திரேலியா செய்தி

ஆஸ்திரேலியாவில் சுற்றிவளைப்பு – 16 வயது சிறுமி உட்பட 554 பேர் கைது

  • May 20, 2024
  • 0 Comments

நியூ சவுத் வேல்ஸில் குடும்ப வன்முறையை இலக்காகக் கொண்ட நான்கு நாள் நடவடிக்கையின் போது 550 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த புதன்கிழமை தொடக்கம் சனிக்கிழமை வரை அமரோக் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும், இதன் போது 554 குற்றவாளிகளை பொலிஸார் கைது செய்து 1070 குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட 226 சந்தேகநபர்கள் கடுமையான குடும்ப வன்முறைக்காக பொலிஸாரால் தேடப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. கெம்சியில் போலி துப்பாக்கியைக் காட்டி பெண்ணை மிரட்டியதாகக் கூறப்படும் 53 […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் பட்டம் பெற்ற மாணவர்களை நெகிழ வைத்த செல்வந்தர் – ஒவ்வொருவருக்கும் 1,000 டொலர்

  • May 20, 2024
  • 0 Comments

அமெரிக்காவின் டார்ட்மவுத் வட்டாரத்தில் உள்ள Massachusetts பல்கலைக்கழகத்தில் அண்மையில் பட்டம் பெற்ற ஒவ்வொருவருக்கும் அன்பளிப்பாக 1,000 டொலர் கிடைத்தது. நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினராக வந்திருந்த செல்வந்தர் ராப்ர்ட் ஹேல் ஜூனியர் இந்த பணத்தை கொடுத்தார். தொலைத்தொடர்பு நிறுவனம் Granite Telecommunicationsஇன் தலைமை நிர்வாக அதிகாரியான அவர் கொடை வள்ளல் என கூறப்படுகின்றது. வாழ்க்கையில் எனக்குக் கிடைத்த பெரும் இன்பம் மற்றவர்களுக்குக் கொடுப்பதில் உள்ளது என ஹேல் கூற மேடைக்கு 2 பெரிய பைகள் கொண்டு வரப்பட்டன. அவற்றில் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ புதிய வசதியை அறிமுகம் செய்த கூகுள்

  • May 20, 2024
  • 0 Comments

குளோபல் Accessibility தினத்தை முன்னிட்டு, கூகுள் தனது தயாரிப்புகளில் லுக் அவுட், மேப்ஸ் வசதிகளில் புதிய accessibility வசதிகளை அறிமுகம் செய்துள்ளது. கூகுள் லுக்அவுட் ஆப்ஸில் பார்வை குறைவாக உள்ளவர்களுக்கு உதவ தங்கள் சுற்றுப்புறத்தைப் பற்றிய கூடுதல் தகவல்களைப் பெற உதவுகிறது. லுக்அவுட் ஆப்ஸில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய வசதியில் அருகில் உள்ள பொருட்கள் பாத்ரூம், இருக்கைகள் மற்றும் பிற பொருட்களை தேட அனுமதிக்கும். அதோடு, லுக்அவுட் அந்த பொருட்கள் உள்ள இடம், அதற்கான தூரத்தையும் இந்த வசதியில் […]

மத்திய கிழக்கு

ஈரான் ஜனாதிபதி பயணித்த ஹெலிகாப்டரின் சிதைவுகள் என சந்தேகிக்கப்படும் பகுதி கண்டுபிடிப்பு?

  • May 20, 2024
  • 0 Comments

ஈரான் ஜனாதிபதி ரைசி பயணித்த ஹெலிகாப்டரின் சிதைவுகள் என சந்தேகிக்கப்படும் வெப்ப மூலமொன்று துருக்கிய ட்ரோன் நடவடிக்கை மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும், இந்த விடயத்தை உறுதிப்படுத்தும் வகையில் மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஈரான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி அண்டை நாடான அஜர்பைஜானில் இரண்டு அணைகள் திறப்பு விழாவில் பங்கேற்றுவிட்டு ஹெலிகாப்டர் வாகனத்தில் நேற்று ஈரான் திரும்பியுள்ளார். அங்கு, குறித்த பகுதியில் காலநிலை மிகவும் மோசமாக காணப்பட்டதுடன், […]

ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் உதவி பணம் பெறுவதற்காக தொழில் செய்வதை தவிர்க்கும் மக்கள்

  • May 20, 2024
  • 0 Comments

ஜெர்மனியில் புதிய சமூக உதவி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பின் வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கையானது அதிகரிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விபரம் ஒன்று வெளியாகியுள்ளது. ஜெர்மனியில் சமூக உதவி பணம் வழங்கப்படுவது அதிகரித்து இருப்பதன் காரணமாக வேலை செய்கின்றவர்களின் எண்ணிக்கையானது குறைவடைந்து வருவதாக புள்ளி விபரம் ஒன்று வெளியாகியள்ளது. அதாவது சமூக உதவி பணத்தை பெற்றுக்கொள்கின்றவர்கள் தாம் சாதாரண ஒரு வேலைக்கு செல்லும் பொழுது குறித்த வேலையில் இருந்து கிடைக்கும் வருமானத்தை விட சமூக உதவி பணத்தொகையானது அதிகமாக கிடைப்பதாக தெரியவந்துள்ளது.. […]

ஐரோப்பா செய்தி

புகலிடக் கோரிக்கையாளர்களுடன் ஐரோப்பா நோக்கிச் சென்ற கப்பல் மாயம்

  • May 20, 2024
  • 0 Comments

  23 புகலிட கோரிக்கையாளரஏற்றிக்கொண்டு ஐரோப்பா நோக்கிச் சென்ற கப்பல் துனிசிய கடற்பரப்பில் மாயமாகியுள்ளது. காணாமல் போனவர்களை தேடும் பணியை கடற்படையினர் ஆரம்பித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. துனிசியா ஐரோப்பாவிற்கு செல்லும் சட்டவிரோத குடியேறிகளின் முக்கிய புறப்பாடு புள்ளியாக அறியப்படுகிறது. மேலும், கடந்த பெப்ரவரி மாதம், துனிசியாவின் கடற்பகுதியில் இது போன்ற ஒரு கப்பல் கடலில் மூழ்கியதில் 13 சூடான் பிரஜைகள் உயிரிழந்ததுடன் 27 பேரைக் காணாமல் போயுவில்லை.

இலங்கை செய்தி

இலங்கையில் வாக்குமூலம் பதிவு செய்ய சென்ற பொலிஸ் அதிகாரிக்கு நேர்ந்த கதி

  • May 20, 2024
  • 0 Comments

வாக்குமூலமொன்றை பதிவு செய்யச் செல்லும் போது அங்கிருந்த கான்ஸ்டபிள் ஒருவரின் கழுத்தை சந்தேக நபர் கடித்ததால் பொலிஸ் அறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் அதிலிருந்து வெளியில் எடுக்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக மொனராகலை பிரதேசத்தில் இருந்து செய்தியொன்று பதிவாகியுள்ளது. மொனராகலை பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இசை நிகழ்ச்சியின் போது குடிபோதையில் கலவரமாக நடந்து கொண்ட நபரை மொனராகலை பொலிஸார் அண்மையில் கைது செய்துள்ளனர். அவரை அறையில் வைத்து சந்தேக நபரிடம் வாக்குமூலம் பதிவு […]