தெலுங்கானாவில் மின்னல் தாக்கி மூவர் பலி
தெலுங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் மின்னல் தாக்கியதில் 3 பேர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். விகாராபாத் மாவட்டத்தின் யலால் மண்டலத்தில் இரண்டு கிராமங்களில் மழை பெய்து கொண்டிருந்த போது இந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது. விவசாய நிலத்தில் மின்னல் தாக்கி இருவர் உயிரிழந்துள்ளதுடன், மரத்தடியில் நின்றிருந்த ஒருவர் மற்றுமொரு மின்னல் தாக்கத்தில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர்கள் 26 முதல் 40 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர். பத்ராத்ரி கொத்தகுடெம், கம்மம், நல்கொண்டா, சூர்யாபேட்டை, சித்திப்பேட்டை, யாதாத்ரி […]













