ஐரோப்பா செய்தி

இங்கிலாந்தின் போர்ன்மவுத் கொடூர தாக்குதல் – ஒருவர் உயிரிழப்பு , மூவர் கைது

  • April 6, 2026
  • 0 Comments

இங்கிலாந்தின் போர்ன்மவுத்தில் (Bournemouth) உள்ள ஒரு மதுபான விடுதிக்கு வெளியே இடம்பெற்ற தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, கொலைச் சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். திங்கட்கிழமை அதிகாலை , சார்மின்ஸ்டர் (Charminster) வீதியில் உள்ள MyBar மதுபான விடுதிக்கு வெளியே இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தில் கிறிஸ்ட்சர்ச்சைச் சேர்ந்த சுமார் 40 வயதுடைய ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த வழக்கில், போர்ன்மவுத்தைச் சேர்ந்த 37 மற்றும் 46 வயதுடைய இரு ஆண்களும், பூலைச் […]

ஐரோப்பா

ஹங்கேரிக்கு செல்லும் எரிவாயுக் குழாயை தகர்க்க சதித்திட்டம் – வெடிபொருட்கள் மீட்பு!

  • April 6, 2026
  • 0 Comments

ஹங்கேரிக்கு ரஷ்ய எரிவாயுவைக் கொண்டு செல்லும் எரிவாயுக் குழாய் அருகே அதிக வெடிபொருட்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில் உக்ரைன் மீது சந்தேகம் எழுந்துள்ளது. இந்த விடயத்தை உக்ரைன் மறுத்தாலும், உக்ரைன் காரணமாக இருக்க அதிக வாய்ப்புள்ளதாக ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது. செர்பியாவில் உள்ள டர்க்ஸ்ட்ரீம் குழாய் அருகே வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, பிரதமர் விக்டர் ஓர்பன் (Viktor Orban) அவசரகாலப் பாதுகாப்புக் குழுவைக் கூட்டி ஆலோசனை நடத்தியுள்ளார். பல ஆண்டுகளாக ஐரோப்பாவை ரஷ்ய எரிசக்தியிலிருந்து துண்டிக்க உக்ரைன் முயன்று வருவதாக […]

இலங்கை செய்தி

யாழில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட நால்வர் கைது!

  • April 6, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணத்தின் பல்வேறு இடங்களில் நகை, பணம் மற்றும் பொருள்களைத் திருடிய சம்பவங்களுடன் தொடர்புடைய 4 சந்தேகநபர்களை யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ். நகரின் நவீன சந்தைக் கட்டடத் தொகுதியில் அமைந்துள்ள கடை ஒன்றில், 3 இலட்சத்து 60 ஆயிரம் ரூபா பெறுமதியான வளையல்கள் திருடப்பட்டமை தொடர்பாக யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலையத்தில் அண்மையில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. அதேபோல், கலட்டி அம்மன் கோயில் பகுதிக்கு அருகிலுள்ள வீடுகளில் புகுந்து 3.5 பவுண் தங்க மோதிரம் மற்றும் […]

உலகம் செய்தி

மீண்டும் பேசுபொருளான அமெரிக்க – ஈரான் போர்நிறுத்தத் திட்டங்கள்

  • April 6, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர்நிறுத்தம் தொடர்பான புதிய கட்டமைப்பு குறித்து தகவல்கள் வெளியாகத் தொடங்கியுள்ளன. எனினும், இதுபோன்ற சமாதான முயற்சிகள் முன்னரும் பலமுறை தோல்வியடைந்துள்ளன. மார்ச் 24 ஆம் திகதி அன்று, பாகிஸ்தான் இடைத்தரகராக செயல்பட்ட நிலையில், அமெரிக்கா ஈரானுக்கு 15 அம்சத் திட்டம் ஒன்றை அனுப்பியதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதில், ஈரான் தனது முக்கிய அணுசக்தி நிலையங்களை அழிக்க வேண்டும், ஹிஸ்புல்லா மற்றும் ஹூதிகள் போன்ற அமைப்புகளுக்கு ஆதரவை நிறுத்த வேண்டும், ஹார்முஸ் நீரிணையை […]

உலகம்

ஈரானின் மிகப்பெரிய பெட்ரோலிய ஆலை மீது தாக்குதல்!

  • April 6, 2026
  • 0 Comments

ஈரானின் மிகப்பெரிய பெட்ரோலிய வேதிப்பொருள் ஆலையான சவுத் பார்ஸ் (South Pars) மீது இஸ்ரேல் இன்று தாக்குதல் நடத்தியுள்ளது. சமாதான ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், ஈரானின் எரிசக்தி உள்கட்டமைப்புக்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆலை மீதான “சக்திவாய்ந்த தாக்குதலை” இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் உறுதிப்படுத்தியுள்ளார். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து அசலூயே வளாகத்தைச் சுற்றி பல வெடிப்புகள் நிகழ்ந்ததாக ஈரானிய […]

இலங்கை செய்தி

இலங்கை வருகிறார் இந்திய துணை ஜனாதிபதி: பயண ஏற்பாடு குறித்து ஆராய்வு!

  • April 6, 2026
  • 0 Comments

ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி மற்றும் இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்யாஞ்சல் பாண்டே ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (06) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்திய துணை ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணனின் இலங்கைக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் பூர்வாங்கத் திட்டங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது. இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, இந்திய துணை ஜனாதிபதி , ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோருடன் […]

பொழுதுபோக்கு

நடிகையாக அறிமுகமாகும் தேவயானியின் மகள்!

  • April 6, 2026
  • 0 Comments

நடிகை தேவயானியின் இரண்டாவது மகள் பிரியங்கா சினிமாவில் நாயகியாக அறிமுகமாகவுள்ளார். நடிகர் பிரசாந்தின் 53 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு இன்று அவர் நடிக்கும் படத்தின் பெயர் அறிவிப்பு விழா நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் தேவயானி தனது மகளை அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்துள்ளார். தெலுங்கில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற “Court: State vs a Nobody” படம் ‘ரஞ்சன் தி அட்வகேட்’ என்கிற தலைப்பில் தமிழில் ரீமேக் செய்யப்படவுள்ளது. அந்த படத்தில் தான் […]

இலங்கை

இந்த வாரம் முதல் விசேட அரச விடுமுறை இரத்து!

  • April 6, 2026
  • 0 Comments

புதன்கிழமைகளில் வழங்கப்படும் விசேட அரச விடுமுறையானது இரத்து செய்யப்படுவதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி அறிவித்துள்ளார். நாளை மறுதினம், அதாவது ஏப்ரல் 8ஆம் திகதி புதன்கிழமை முதல் இந்த புதிய தீர்மானம் நடைமுறைக்கு வரும் என பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார். இதேவேளை, எரிபொருள் நெருக்கடி மற்றும் போக்குவரத்து சிரமங்களைக் கருத்திற்கொண்டு அரச அலுவலகங்கள், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் நீதிச் சேவை துறைகளுக்காக இந்த விசேட விடுமுறை வழங்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.  

உலகம் செய்தி

அமெரிக்காவின் அச்சுறுத்தல் போர்க்குற்றங்களை இயல்பாக்கும் முயற்சி – ஈரான் விசனம்

  • April 6, 2026
  • 0 Comments

அமெரிக்கா, ஈரானின் உட்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவதாக அச்சுறுத்தினால், அதற்கு “ஒரு தீர்க்கமான மற்றும் விரிவான பதிலடி” கொடுக்கப்படும் என ஈரானின் வெளியுறவு அமைச்சர் எச்சரித்தார். அமெரிக்காவின் அச்சுறுத்தலை “போர்க்குற்றங்களையும் இனப்படுகொலையையும் இயல்பாக்கும் முயற்சி” என்று ஈரான் விமர்சித்துள்ளது. ஈரானின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அச்சுறுத்தல்கள் பிராந்திய பதற்றத்தை அதிகரிக்கின்றன என்றும், இராஜதந்திர தீர்வு தேவைப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

உலகம் முக்கிய செய்திகள்

ட்ரம்பின் 48 மணிநேர கெடு – புதிய உச்சம் தொட்ட எண்ணெய் விலை!

  • April 6, 2026
  • 0 Comments

ஹார்மூஸ் ஜலசந்தி குறித்து ஒரு தீர்மானத்திற்கு வர அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் 48 மணிநேர கெடு விதித்து எச்சரிக்கை விடுத்திருந்தார். அதாவது ஹோர்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்படாவிட்டால், செவ்வாய்க்கிழமைக்குள் ஈரானின் மின் நிலையங்கள் மற்றும் பாலங்கள் மீது குண்டு வீசப்படும் என்று  புதிய இறுதி எச்சரிக்கையை விடுத்துள்ளார். இந்நிலையில் ட்ரம்பின் எச்சரிக்கையை தொடர்ந்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உச்சம் தொட்டுள்ளது. இதன்படி பிரென்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு 109.80 டொலராகவும், அமெரிக்காவில் வர்த்தகம் […]