இந்தியா செய்தி

சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க இந்தியா கையில் எடுத்துள்ள புதிய அணுகுமுறை!

  • April 6, 2026
  • 0 Comments

சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுப்பதற்காக, வங்கதேசத்துடனான தனது  ஆற்று எல்லைப் பகுதியில் விஷப் பாம்புகளையும் முதலைகளையும் பயன்படுத்த இந்தியா பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 4,096 கி.மீ நீளமுள்ள எல்லையின் சதுப்பு நில, வேலியிடப்படாத பகுதிகளில் பௌதீகத் தடைகளை அமைப்பதற்கு மாற்றாக இந்த நடவடிக்கையை எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) விவாதித்து வருவதாக கூறப்படுகிறது. மார்ச் 26 என திகதியிடப்பட்ட, எல்லைப் பாதுகாப்புப் படையின் ஒரு உள் குறிப்பாணையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. இந்த […]

ஐரோப்பா செய்தி

ட்ரம்ப் மிரட்டல்: “அந்த மொழி எங்களுடையது அல்ல” – பிரித்தானியா விளக்கம்

  • April 6, 2026
  • 0 Comments

ஈரானை நோக்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சமூக ஊடகங்களில் வெளியிட்ட கடுமையான மிரட்டலுக்கு எதிர்வினைகள் வெளியாகியுள்ளன. ட்ரம்ப் பயன்படுத்திய மொழியிலிருந்து பிரித்தானிய அரசாங்கம் தன்னை விலக்கிக் கொண்டுள்ளதாக பிரித்தானிய கல்வித்துறை செயலாளர் பிரிட்ஜெட் பிலிப்சன் தெரிவித்துள்ளார். அந்த வகை மொழியை பயன்படுத்துவது ட்ரம்பின் தேர்வு. அது எங்களுடைய அணுகுமுறை அல்ல,” என்று அவர் கூறினார். மேலும், ஈரான் தொடர்பான இந்தப் போரில், பிரித்தானிய தற்காப்பு நடவடிக்கைகளில் மட்டுமே ஈடுபடும் என்ற தனது நிலைப்பாட்டை அவர் மீண்டும் […]

உலகம்

பங்களாதேஷில் அதிகரித்துள்ள நோய் தொற்று – அவசர தடுப்பூசி திட்டம் அமுலில்!

  • April 6, 2026
  • 0 Comments

பங்களாதேஷில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிகளவிலான தட்டம்மை நோய் தொடர்பான மரணங்கள் பதிவாகியுள்ளன. இந்நிலையில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளை இலக்காகக் கொண்டு அவசரகால தடுப்பூசித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பொது இயக்குநரகத்தின் (DGHS) தகவல்படி, இந்த ஆண்டு மார்ச் 15 முதல் ஏப்ரல் 4 வரை, தட்டம்மை என சந்தேகிக்கப்படும் நோயால் குறைந்தது 98 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. உறுதிப்படுத்தப்பட்ட தட்டம்மை மரணங்களின் எண்ணிக்கை 17 ஆக உள்ளது என்று அதிகாரிகள் […]

செய்தி தமிழ்நாடு

சாத்தான்குளம் வழக்கில் 9 பேருக்கும் தூக்கு தண்டனை

  • April 6, 2026
  • 0 Comments

இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் குற்றவாளிகள் 09 பேருக்கும் மரண தண்டனை அறிவித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கைது செய்யப்பட்ட காவலாளிகளில் யார் அதிகம் அடித்தார்கள் என்று வேறுபாடு காட்ட இயலாது என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்கள் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா விதிமுறைகளை சரியாக கடைப்பிடிக்கவில்லை எனக் கூறி பொலிஸார் காவல் நிலையத்திற்கு […]

உலகம் செய்தி

ஈரானில் மூன்று விமான நிலையங்கள்மீது தாக்குதல்!

  • April 6, 2026
  • 0 Comments

ஈரான் தலைநகரான தெஹ்ரான் மற்றும் அந்நாட்டின் பிற பகுதிகளிலுள்ள இராணுவ நிலைகளைக் குறிவைத்து இஸ்ரேலிய இராணுவம் பாரிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. குறிப்பாக Bahram, Mehrabad மற்றும் Azmayesh ஆகிய மூன்று விமான நிலையங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. ஏனைய சில இலக்குகள்மீதும் பாரிய தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. ஈரானின் இராணுவ உள்கட்டமைப்புகளை அழிப்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம் என்று இஸ்ரேல் தரப்பில் கூறப்பட்டுள்ளது. அதேவேளை, பொது மக்களின் இருப்பிடம் உட்பட சிவில் இலக்குகளை இஸ்ரேல் குறிவைப்பதாக […]

ஐரோப்பா செய்தி

போருக்கான தீர்வு இராஜதந்திரம் மட்டுமே – ஐரோப்பிய கவுன்சில் தலைவர் வலியுறுத்தல்

  • April 6, 2026
  • 0 Comments

பொதுமக்கள் மற்றும் முக்கிய உட்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவது சட்டவிரோதமானது என்றும், ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டுவர “இராஜதந்திரத் தீர்வே ஒரே வழி” என்றும் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா (António Costa) தெரிவித்துள்ளார். தனது X தளத்தில் வெளியிட்ட பதிவில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக எரிசக்தி வசதிகளை இலக்கு வைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் கூறினார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஹார்முஸ் நீரிணை திறக்கப்படாவிட்டால் ஈரானின் உட்கட்டமைப்புகளை அழிப்போம் என […]

ஐரோப்பா செய்தி

எரிசக்தி நெருக்கடி தீவிரம் – பிரித்தானியா முழுவதும் பெரும் அழுத்தத்தில் வணிகங்கள்

  • April 6, 2026
  • 0 Comments

ஈரான் போரின் தாக்கத்தால் ஐரோப்பாவின் எரிபொருள் சந்தை விலைகள் புதிய உச்சத்தை எட்டியுள்ள நிலையில், வெப்பமூட்டும் எண்ணெய் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. இதன் விளைவாக, பிரித்தானியா முழுவதும் ஆயிரக்கணக்கான சுயாதீன வணிகங்கள் தங்கள் எரிசக்தி கட்டணங்கள் இரண்டு மடங்கிற்கும் அதிகமாக உயரும் என அச்சம் தெரிவிக்கின்றன. தகவல்களின்படி, சுமார் 7% சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் வெப்பமூட்டும் எண்ணெயைப் பயன்படுத்துகின்றன. சில இடங்களில், அதன் பயன்பாடு அண்மைய வாரங்களில் இரட்டிப்பாக உயர்ந்துள்ளது. கிராமப்புறங்களில் உள்ள நிறுவனங்கள் பெரும்பாலும் […]

உலகம் செய்தி

இஸ்ரேலின் தவறான குறிவைப்பு: அரசியல் தலைவர் பலி!

  • April 6, 2026
  • 0 Comments

லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினர் எனக் கருதி இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில், அரசியல் தலைவர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். பெய்ரூட் அருகே உள்ள குடியிருப்பொன்றின் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், ஹிஸ்புல்லாவை கடுமையாக எதிர்க்கும் The Lebanese Forces Party கட்சியைச் சேர்ந்த பியர் முவாத் Pierre Mouawad என்பவரே கொல்லப்பட்டுள்ளார். அவரது மனைவியும் இத்தாக்குதலில் பலியாகியுள்ளார். குறித்த தாக்குதலுக்கு இஸ்ரேல் பாதுகாப்புப் படை தனது வருத்தத்தைத் தெரிவித்துள்ளதுடன், தங்களது இலக்கு தவறிவிட்டதையும் ஒப்புக்கொண்டுள்ளது. இஸ்ரேலின் இந்த தாக்குதலை […]

உலகம் செய்தி

அமெரிக்கா, இஸ்ரேல் நடவடிக்கைகளை பிரிக்ஸ் கண்டிக்க வேண்டும் – ஈரான் கோரிக்கை

  • April 6, 2026
  • 0 Comments

இந்தியாவிற்கான ஈரானிய தூதுவர் முகமது ஃபத்தாலி (Mohammad Fathali), அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் “சட்டவிரோத மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளை” பிரிக்ஸ் நாடுகள் கண்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இந்திய செய்தி நிறுவனமொன்றுக்கு அளித்த பேட்டியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 2024 ஆம் ஆண்டு தொடக்கத்தில் பிரிக்ஸ் கூட்டமைப்பில் இணைந்த ஈரான், தற்போது இந்த கூட்டணிக்கு தலைமை வகிக்கும் இந்தியாவிடம் முக்கிய எதிர்பார்ப்பை வெளிப்படுத்தியுள்ளது. பிரிக்ஸ் அமைப்பில் பிரேசில், ரஷ்யா, சீனா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் […]

இலங்கை செய்தி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து 9 ஆம் திகதி சபையில் விவாதம்!

  • April 6, 2026
  • 0 Comments

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் எதிர்வரும் வியாழக்கிழமை (09) நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. நாடாளுமன்றத் தொடர்பாடல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையின்படி, எதிர்க்கட்சியினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த விவாதம் நடத்தப்படவுள்ளது. நாடாளுமன்றம் நாளை செவ்வாய்க்கிழமை முதல் இந்த வாரம் மூன்று நாள்களுக்குக் கூடவுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விவாதம் எதிர்வரும் வியாழக்கிழமை பிற்பகல் 2:00 மணி முதல் மாலை 5:30 மணி வரை நடைபெறும். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னாலுள்ள சூத்திரதாரிகளைக் கண்டறிவது தொடர்பாக […]