ஐரோப்பா செய்தி

இங்கிலாந்தின் போர்ன்மவுத் கொடூர தாக்குதல் – ஒருவர் உயிரிழப்பு , மூவர் கைது

இங்கிலாந்தின் போர்ன்மவுத்தில் (Bournemouth) உள்ள ஒரு மதுபான விடுதிக்கு வெளியே இடம்பெற்ற தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, கொலைச் சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திங்கட்கிழமை அதிகாலை , சார்மின்ஸ்டர் (Charminster) வீதியில் உள்ள MyBar மதுபான விடுதிக்கு வெளியே இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.

இந்தச் சம்பவத்தில் கிறிஸ்ட்சர்ச்சைச் சேர்ந்த சுமார் 40 வயதுடைய ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த வழக்கில், போர்ன்மவுத்தைச் சேர்ந்த 37 மற்றும் 46 வயதுடைய இரு ஆண்களும், பூலைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக டோர்செட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் விரிவான விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்

அப்பகுதியில் பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் மற்றும் டாஷ்கேம் காட்சிகள்
கொண்டவர்கள் தகவல் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி