உலகம் செய்தி

உக்கிர தாக்குதல்: ஈரானில் பலர் பலி!

  • April 7, 2026
  • 0 Comments

ஈரானின் பர்திஸ் மற்றும் ஷாரியார் ஆகிய நகரங்களில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 15 பேர் பலியாகியுள்ளனர். அத்துடன், தெஹ்ரான் மாகாணத்தில் உள்ள குடியிருப்புப் பகுதிகள் கடுமையாகப் சேதமடைந்துள்ளன. இடிபாடுகளுக்கு அடியிலிருந்து இதுவரை ஆறு உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மேற்குப் பகுதியில் ஒன்பது பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஈரான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஈரான்மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் மிகவும் உக்கிரமான முறையில் வான்வழித் தாக்குதல்களை நடத்திவருகின்றன. ராணுவ இலக்குகளுக்கு அப்பால் பொது கட்டமைப்பு உள்ளிட்டவைமீதும் […]

ஐரோப்பா

உக்ரைனின் பொதுபோக்குவரத்தை குறிவைத்து தாக்குதல் நடத்திய ரஷ்யா – மூவர் பலி!

  • April 7, 2026
  • 0 Comments

கிழக்கு டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் (Dnipropetrovsk) பிராந்தியத்தின் நிகோபோல் நகரில் (Nikopol), பேருந்தொன்றின்மீது இன்று ஆளில்லா விமானம் மூலம் ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன், 12 பேர் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுப் போக்குவரத்தைப் பாதித்த இந்தத் தாக்குதலை உக்ரேனிய அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். மக்கள் வேலைக்குச் சென்று கொண்டிருந்த பரபரப்பான நேரத்தில் இந்தத் தாக்குதல் நடந்ததாகவும், இது ஒரு “பேரழிவுத் தாக்குதல்” என்றும் உள்துறை அமைச்சர் இஹோர் கிளிமென்கோ (Ihor Klymenko) விவரித்துள்ளார். இதற்கிடையில், உக்ரேனின் தெற்குத் […]

உலகம்

சவூதி அரேபியாவையும் பஹ்ரைனையும் இணைக்கும் கிங் ஃபஹத் பாலம் மூடப்பட்டது!

  • April 7, 2026
  • 0 Comments

சவூதி அரேபியாவையும் பஹ்ரைனையும் இணைக்கும் கிங் ஃபஹத் (King Fahd Causeway) தரைப்பாலம் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது. சவூதி அரேபியாவின் கிழக்கு மாகாணத்தை குறிவைத்து ஈரான் நடத்தும் தாக்குதல்களை முன்னிட்டு, ஒரு பாதுகாப்பு நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பாலத்தின் நிர்வாகி தெரிவித்துள்ளார். 25 கிலோமீட்டர் நீளமுள்ள இந்தப் பாலம், சவூதி அரேபியாவையும் பஹ்ரைனையும் இணைக்கும் ஒரே தரைவழிப் பாதை என்று கூறப்படுகிறது. இதற்கிடையில், இன்று இரவுக்குள் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்காவிட்டால், ஈரான் அங்குள்ள பாலங்கள் மற்றும் […]

இலங்கை செய்தி

அஸ்வெசும கொடுப்பனவு அதிகரிப்பு!

  • April 7, 2026
  • 0 Comments

“அஸ்வெசும” கொடுப்பனவு பெறுபவர்களுக்கு ஏப்ரல் மாதத்தில் மாத்திரம் கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றத்தில் இன்று (07) உரையாற்றினார். இதன்போதே அவர் மேற்படி தகவலை வெளியிட்டார். இதற்கமைய மாதாந்தம் 17,500 ரூபாவை பெறும் அஸ்வெசும பயனாளிகளுக்கு இம்மாதம் 25,000 ரூபா கிடைக்கப்பெறும். மாதாந்தம் 10,000 ரூபா பெறும் பயனானிகளுக்கு 15,000 ரூபா வழங்கப்படும். மாதாந்தம் 5,000 ரூபாவை அஸ்வெசும கொடுப்பனவாக பெறுபவர்களுக்கு 7,500 ரூபா வழங்கப்படும். இம்மாதம் மாத்திரமே இந்த கொடுப்பனவு அதிகரிப்பு வழங்கப்படும். இதற்காக […]

ஐரோப்பா

இங்கிலாந்தில் இ-பைக் மற்றும் இ-ஸ்கூட்டர் வாகனம் வைத்திருப்போருக்கு எச்சரிக்கை!

  • April 7, 2026
  • 0 Comments

இங்கிலாந்து முழுவதும் இ-பைக் மற்றும் இ-ஸ்கூட்டர் தீ விபத்துகள் கடந்த ஆண்டில் வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளன. சுமார் 432 இ-பைக் தீ விபத்துகளும், 147 இ-ஸ்கூட்டர் தீ விபத்துகளும் பதிவாகியுள்ளன. இது முந்தைய ஆண்டுகளை விட குறிப்பிடத்தக்க அதிகரிப்பாகும். இந்த அபாயகரமான தீ விபத்துகள், பெரும்பாலும் பழுதடையும் பேட்டரிகள், மாற்று கருவிகள் அல்லது சார்ஜர்களால் ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, குறைந்த கடுமையான விதிமுறைகளைக் கொண்ட ஆன்லைன் சந்தைகள் மூலம் வாங்கப்படும் “குறைந்த விலைப் பொருட்களால்” இவை […]

உலகம் கல்வி

ஹார்முஸ் நீரிணை விவகாரம்: ஐ.நா. பாதுகாப்பு சபையில் விவாதம்!

  • April 7, 2026
  • 0 Comments

ஹார்முஸ் நீரிணை விவகாரம் தொடர்பில் ஐ.நா. பாதுகாப்புச் சபையில் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணைமீது இன்று (07) விவாதம் நடைபெறவுள்ளது. ஹார்முஸ் நீரிணை வழியான எரிபொருள் விநியோகத்தை ஈரான் தடுத்து நிறுத்தியுள்ளது. நட்பு நாடுகளுக்கு மட்டுமே அதில் பயணிப்பதற்கு ஈரான் அனுமதி வழங்கிவருகின்றது. இதனால் உலகளவில் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலையேற்றம் என்பன இடம்பெற்றுவருகின்றன. இந்நிலையில் பஹ்ரைன் நாட்டின் கோரிக்கைக்கமையவே மேற்படி பிரேரணை தொடர்பில் விவாதம் நடைபெறவுள்ளது. கடந்த சனிக்கிழமையே விவாதம் மற்றும் வாக்கெடுப்பு என்பன நடைபெற இருந்தது. எனினும், […]

இலங்கை

சிங்கமலை வனப்பகுதியில் சிக்கி தவித்த வெளிநாட்டுப் பெண் மீட்பு

  • April 7, 2026
  • 0 Comments

ஹட்டன் சிங்கமலை வனப்பகுதியில் உள்ள ஒரு மலை உச்சியில் கீழே இறங்க முடியாமல் தவித்துக்கொண்டிருந்த வெளிநாட்டு பெண் ஒருவரை ஹட்டன் பொலிஸாரின் குற்றப்பிரிவு அதிகாரிகள் குழு வெற்றிகரமாக மீட்டுள்ளது. நெதர்லாந்து நாட்டின் ஆம்ஸ்டர்டாமைச் (Amsterdam) சேர்ந்த 20 வயதான மாணவி ஒருவர் அதே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பிற மாணவர்களுடன் இலங்கைக்கு வருகைந்தந்து ருஹுனு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வந்துள்ளார். இந்தநிலையில் குறித்த பெண் கடந்த 05 ஆம் திகதி தனது சில நண்பர்களுடன் சிங்கமலை வனப்பகுதியில் ஒரு […]

உலகம் செய்தி

இன்று ரயில் பயணம் வேண்டாம்: ஈரான் மக்களுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை!

  • April 7, 2026
  • 0 Comments

ஈரான் மக்கள், இன்று இரவு 9 மணி வரை ரயில் பயணங்களைத் தவிர்க்குமாறு இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. ஹார்முஸ் நீரிணை வழியாகக் கப்பல்கள் சுதந்திரமாகச் செல்ல ஈரான் அனுமதிக்கத் தவறினால், அந்நாட்டின் உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரான் சாதகமான பிரதிபளிப்பை வெளியிடாவிட்டால் இதற்கான காலக்கெடு இன்று முடிந்த பின்னர், அமெரிக்கா உக்கிர தாக்குதலை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கிடையில் ஈரான், தெஹ்ரானில் உள்ள முக்கிய இலக்குகள் […]

இந்தியா

மகளின் விவாகரத்தை கொண்டாடிய தந்தை!

  • April 7, 2026
  • 0 Comments

தனது மகளின் விவாகரத்தை மேளதாளங்கள் முழங்க இனிப்பு வழங்கி ஓய்வுபெற்ற நீதிபதியொருவர் கொண்டாடிய சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது. இந்தியக் குடும்பங்களில் விவாகரத்து என்பது இன்றும் ஒரு சமூகக் களங்கமாக பார்க்கப்படும் நிலையில் இச்சம்பவம் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதியான ஞானேந்திர சர்மா , உத்தர பிரதேச மாநிலம் மீரட்டைச் சேர்ந்தவர். அவரின் மகளின் பெயர் பிரணிதா. இவருக்கும் இந்திய ராணுவத்தில் மேஜராகப் பணியாற்றும் கவுரவ் அக்னிஹோத்ரி என்பவருக்கும் கடந்த 2018ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு […]

ஆஸ்திரேலியா செய்தி

எரிசக்தி பாதுகாப்பு ஏற்பாடு: சிங்கப்பூர் பறக்கிறார் ஆஸ்திரேலிய பிரதமர்!

  • April 7, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியப் பிரதமர் Anthony Albanese இரு நாள் பயணமாக நாளை மறுதினம் (9) சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொள்கின்றார். சிங்கப்பூர் பிரதமர் உட்பட அந்நாட்டின் உயர்மட்ட பிரமுகர்களுடன் அவர் பேச்சு நடத்துவார். இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் ஆழமான மூலோபாய உறவை மேம்படுத்துவது குறித்தும் தடையற்ற எரிபொருள் வர்த்தகத்தை உறுதி செய்வது தொடர்பிலும் இதன்போது ஆராயப்படவுள்ளது. ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதால் எரிபொருள் விநியோகம் தடைபட்டுள்ளது. இதனால் ஆஸ்திரேலியாவிலும் எரிபொருள் விலை அதிகரித்துள்ளது. இந்நிலையில் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக அந்நாட்டு […]