ஐரோப்பா செய்தி

போருக்கான தீர்வு இராஜதந்திரம் மட்டுமே – ஐரோப்பிய கவுன்சில் தலைவர் வலியுறுத்தல்

பொதுமக்கள் மற்றும் முக்கிய உட்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவது சட்டவிரோதமானது என்றும், ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டுவர “இராஜதந்திரத் தீர்வே ஒரே வழி” என்றும் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா (António Costa) தெரிவித்துள்ளார்.

தனது X தளத்தில் வெளியிட்ட பதிவில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக எரிசக்தி வசதிகளை இலக்கு வைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் கூறினார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஹார்முஸ் நீரிணை திறக்கப்படாவிட்டால் ஈரானின் உட்கட்டமைப்புகளை அழிப்போம் என எச்சரித்த பின்னணியில் இந்தக் கருத்து வெளியிடப்பட்டுள்ளது.

இதனிடையே, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன்னாள் சட்டத்தரணி லூயிஸ் மொரேனோ ஒகாம்போ, ஈரான் மீது நடக்கும் போர் சர்வதேச சட்டத்தின் கீழ் “ஆக்கிரமிப்பு குற்றமாக” கருதப்படலாம் என தெரிவித்துள்ளார்.

மேலும், அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் சர்வதேச சட்ட மீறலாக இருக்கலாம் எனக் கவலை தெரிவித்து, 100 க்கும் மேற்பட்ட சட்ட நிபுணர்கள் திறந்த கடிதம் ஒன்றிலும் கையெழுத்திட்டுள்ளனர்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி