உலகம் செய்தி

அமெரிக்கா, இஸ்ரேல் நடவடிக்கைகளை பிரிக்ஸ் கண்டிக்க வேண்டும் – ஈரான் கோரிக்கை

இந்தியாவிற்கான ஈரானிய தூதுவர் முகமது ஃபத்தாலி (Mohammad Fathali), அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் “சட்டவிரோத மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளை” பிரிக்ஸ் நாடுகள் கண்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்திய செய்தி நிறுவனமொன்றுக்கு அளித்த பேட்டியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

2024 ஆம் ஆண்டு தொடக்கத்தில் பிரிக்ஸ் கூட்டமைப்பில் இணைந்த ஈரான், தற்போது இந்த கூட்டணிக்கு தலைமை வகிக்கும் இந்தியாவிடம்
முக்கிய எதிர்பார்ப்பை வெளிப்படுத்தியுள்ளது.

பிரிக்ஸ் அமைப்பில் பிரேசில், ரஷ்யா, சீனா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் இடம்பெற்றுள்ளன. உலக தென்பகுதி நாடுகளின் நலன்களை
பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவாக இது கருதப்படுகிறது.

இந்நிலையில், ஈரான் தொடர்பான போரில் பிரிக்ஸ் கூட்டணி இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை.
சீனாவும் ரஷ்யாவும் ஈரானுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை விமர்சித்துள்ளன.

மறுபுறம், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட சில நாடுகள் ஈரானின் தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இந்தியா மற்றும் எகிப்து போன்ற நாடுகள், இரு தரப்புகளுடனும் சமநிலையை பேண முயன்று வருகின்றன.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி