“சாப்பாட்டிற்குக் கூட சிரமப்பட்டோம்”: விஜய் எதையும் மறக்கவில்லை
தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் பதவியேற்றுள்ள நிலையில், அவரது தந்தையும் திரைப்பட இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் உருக்கமான நினைவுகளைப் பகிர்ந்துள்ளார்.
ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த அவர்,
“விஜய் பிறந்தபோது நான் உதவி இயக்குநராக இருந்தேன். அந்த காலத்தில் குடும்ப சூழ்நிலை மிகவும் கஷ்டமாக இருந்தது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “விஜய்யின் சிறுவயதில் சாப்பாட்டிற்குக் கூட மிகவும் சிரமப்பட்டோம். அந்த நாட்கள் அனைத்தும் விஜய்க்கு இன்னும் ஞாபகம் உள்ளது” என நெகிழ்ச்சியுடன் கூறினார்.
விஜய் இன்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றிருப்பது ஒரு தந்தையாக பெருமையும் மகிழ்ச்சியும் அளிப்பதாகவும் எஸ்.ஏ. சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
அவரது இந்த உணர்ச்சிபூர்வமான கருத்துக்கள், ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளன.




