தோல்விக்கான முழு பொறுப்பையும் ஏற்கிறேன்; திமுக தலைவர்!
“ தேர்தல் தோல்விக்கு கட்சி தலைவர் என்ற முறையில நானே பொறுப்பேற்றுக் கொள்கிறேன்” என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “நடந்து முடிந்த தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. இப்போது அமைந்திருக்கும் அரசும், கூட்டணிக் கட்சிகளின் தயவால்தான் ஆட்சியை அமைத்திருக்கிறது. பொது வாழ்க்கைக்கு வந்தால் வெற்றி தோல்வி சகஜம். ஏற்ற இறக்கங்கள் இருக்கும். […]













