இலங்கை செய்தி

10 மாவட்டங்களில் சீரற்ற காலநிலை: 112 வீடுகள் சேதம்!

  • May 15, 2026
  • 0 Comments

இலங்கையில் யாழ்ப்பாணம், புத்தளம் உட்பட 7 மாவட்டங்களில் நிலவும் கடும் மழையுடன்கூடிய சீரற்ற காலநிலையால் 3 ஆயிரத்து 600 இற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரத்து 151 குடும்பங்களை சேர்ந்த 3 ஆயிரத்து 623 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். 112 வீடுகள் பகுதியளவும், ஒரு வீடு முழுமையாகவும் சேதமடைந்துள்ளன. புத்தளம் மாவட்டத்தில் மாத்திரம் வெள்ளத்தால் ஆயிரத்து 264 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பில் […]

இலங்கை செய்தி

கிழக்கிலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி! வரலாற்று நினைவுகளை மீட்டெடுத்த மக்கள்!!

  • May 15, 2026
  • 0 Comments

மட்டக்களப்பு மாவட்டம், பட்டிருப்பு பாலத்தருகில் இறுதிப் போரில் உயிரிழந்த மக்களை நினைவு கூரும் வகையில் இன்று வெள்ளிக்கிழமை முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி மக்களுக்கு வழங்கப்பட்டது. இறுதிப் போரின் போது முள்ளிவாய்க்காலில் முற்றுகைக்குள் சிக்கி, உயிருக்குப் போராடிய மக்கள், உணவுத் தட்டுப்பாடு காரணமாகத் தங்களிடமிருந்த அரிசியை வைத்துக் கொண்டு, உப்புக்கூட இல்லாமல் கஞ்சி காய்ச்சிப் பசியாறினர். அந்தத் துயரார்ந்த நாள்களையும், மக்களின் தியாகத்தையும் நினைவு கூரும் வகையில் ஆண்டுதோறும் மே மாதத்தின் இக்காலப்பகுதியில் வடக்கு, கிழக்கு எங்கும் கஞ்சி […]

இலங்கை

பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து மீண்டும் உச்சம் தொட்ட டொலரின் பெறுமதி!

  • May 15, 2026
  • 0 Comments

இலங்கை ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டொலரின் பெறுமதி 331 ரூபாயை தாண்டியுள்ளது மத்திய வங்கி இன்று (15) வெளியிட்ட தினசரி மாற்று விகித அறிவிப்பின்படி, ஒரு அமெரிக்க டொலரின் வாங்கும் விலை   323.53 ரூபாவாகவும், விற்பனை விலை   331.15 ரூபாவாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், டிசம்பர் 5, 2023இற்கு  பிறகு, டொலரின் பெறுமதி உச்சம் தொட்டது இதுவே முதல் முறையாகும்.  

உலகம்

அமெரிக்காவிடம் இருந்து 200 போயிங் ஜெட் விமானங்களை  கொள்வனவு செய்யும் சீனா!

  • May 15, 2026
  • 0 Comments

200 போயிங் ஜெட் விமானங்களை  கொள்வனவு செய்ய சீனா ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர், “அது ஒரு அறிக்கை போல இருந்தாலும், அது ஒரு உறுதிமொழி என்றே நான் கருதுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். இதேவேளை 787 டிரீம்லைனர் மற்றும் 777 போன்ற 100 பெரிய ரக விமானங்களுக்கு கூடுதலாக, சுமார் 500 ஒற்றை வழித்தட போயிங் 737 மேக்ஸ் விமானங்களையும் சீனா ஆர்டர் செய்யக்கூடும் என […]

இந்தியா

04 நாடுகளில் முதல் முறையாக எரிபொருள் விலையை உயர்த்திய இந்தியா!

  • May 15, 2026
  • 0 Comments

உலகளாவிய கச்சா எண்ணெய் விலை உயர்வால் ஏற்பட்ட இழப்புகளில் சிலவற்றை ஈடுசெய்யும் பொருட்டு, இந்தியா நான்கு ஆண்டுகளில் முதல் முறையாக பெட்ரோல் மற்றும் டீசலுக்கான விலையை உயர்த்தியுள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை 3 ரூபாய் ($0.03) அல்லது 3% க்கும் அதிகமாக உயர்த்தியுள்ளது என்று டெல்லியில் உள்ள சில்லறை விற்பனையாளர்கள் இன்று தெரவித்துள்ளனர். டெல்லியில் ஒரு லிட்டர் டீசல் விலை 90.67 ரூபாயாகவும், பெட்ரோல் விலை 97.77 ரூபாயாகவும் இருக்கும். இது, ஒரு […]

ஆஸ்திரேலியா ஐரோப்பா செய்தி

யூரோவிஷனை ஆளப்போகும் Delta Goodrem!

  • May 15, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியப் பாடகி Delta Goodrem, யூரோவிஷன் Eurovision பாடல் போட்டியில் தனது சிறப்பான பங்களிப்பால் உலக அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளார். இவரது சமீபத்திய மேடைத் திறமை, இப்போட்டியில் ஆஸ்திரேலியா முதல் முறையாக வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை கணிசமாக அதிகரித்துள்ளது. புகழ்பெற்ற நடிகையாகவும் பாடகியாகவும் திகழும் இவர், தற்போது பந்தயக் களத்தில் இரண்டாவது இடத்தைப் பிடித்து முதலிடத்தை நெருங்கி வருகிறார். 2015 முதல் இப்போட்டியில் பங்கேற்று வரும் ஆஸ்திரேலியாவிற்கு, இவரது இந்த வளர்ச்சி ஒரு வரலாற்று சாதனையாக […]

ஆஸ்திரேலியா செய்தி

Neo-Nazi அமைப்புக்கு ஆஸ்திரேலியாவில் தடை விதிப்பு!

  • May 15, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் இயங்கும் நியோ-நாசிசம் (Neo-Nazi) அமைப்பை அந்த நாட்டு அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக ஒரு வெறுக்கத்தக்க குழுவாக அறிவித்துள்ளது. இந்தத் தடையின் மூலம் அந்த அமைப்பிற்கு நிதி வழங்குவது, உறுப்பினர்களைச் சேர்ப்பது அல்லது பயிற்சியளிப்பது போன்ற செயல்கள் இனி கடுமையான குற்றங்களாகக் கருதப்படும். வெள்ளையின மேலாதிக்கக் கொள்கையைப் பரப்பும் இக்குழுவினர் வெவ்வேறு பெயர்களில் இயங்கினாலும், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் எச்சரித்துள்ளார். வன்முறையைத் தூண்டும் இத்தகைய குழுக்களின் செயல்பாடுகளை முடக்கி, சமூக […]

உலகம் செய்தி

ட்ரம்பை பெரிதும் கவர்த்த சீனாவின் விருந்தோம்பல்!

  • May 15, 2026
  • 0 Comments

  சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்குடன் இணைந்து வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களை பார்த்து ரசித்த ஜனாதிபதி ட்ரம்ப், அங்குள்ள இயற்கை அழகையும் மலர்களையும் மிகச் சிறப்பானது என வர்ணித்துள்ளார். அதேபோல சீனாவின் விருந்தோம்பல் மற்றும் வளர்ச்சியால் தான் பெரிதும் கவரப்பட்டதாக ட்ரம்ப் செய்தியாளர்களிடம் நெகிழ்ச்சியுடன் கருத்து வெளியிட்டுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் ராஜதந்திர உறவு நன்மையளிக்கும் வகையில் அமைய வேண்டும் என்று அவர் தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார். அதேவேளை, எதிர்வரும் செப்டம்பர் மாதம் சீன […]

ஐரோப்பா செய்தி

அரச தலைவர்கள் சீனா நோக்கி படையெடுப்பதன் பின்னணி என்ன?

  • May 15, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் கணிக்க முடியாத வெளியுறவுக் கொள்கைகளால் உலக நாடுகளிடையே பெரும் நிச்சயமற்ற சூழல் நிலவுகிறது. இதன் விளைவாக, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் தங்களின் நீண்டகால நட்பு நாடான அமெரிக்காவை விட்டு விலகி, சீனாவுடன் நெருக்கமான உறவை வளர்த்து வருகின்றனர். பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட பல முக்கிய நாடுகளின் தலைவர்கள் சீனாவுக்குஅண்மையில் மேற்கொண்ட பயணங்கள் இந்த மாறிவரும் உலக ஒழுங்கை உறுதிப்படுத்துகின்றன. சீனா தன்னை ஒரு நிலையான பொருளாதார சக்தியாக […]

உலகம் செய்தி

அமெரிக்கா வருமாறு சீன ஜனாதிபதிக்கு அழைப்பு!

  • May 15, 2026
  • 0 Comments

தமது நாட்டுக்கு பயணம் மேற்கொள்ளுமாறு சீன ஜனாதிபதிக்கு Xi Jinping, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் Donald Trump அழைப்பு விடுத்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டர்ம்ப் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டு அந்நாட்டு ஜனாதிபதியுடன் இரு தரப்பு சந்திப்பில் ஈடுபட்டார். இரு நாட்டுத் தலைவர்களும் இந்தச் சந்திப்பை ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகக் கருதியதோடு, தங்களுக்குள் நிலவும் பரஸ்பர மரியாதையையும் வெளிப்படுத்தியுள்ளனர். தங்கள் நாடுகளின் வளர்ச்சிக்காக இருவருமே உறுதியுடன் செயல்படுவதாகவும், எதிர்காலத்தில் ஆக்கபூர்வமான உறவைத் தொடர விரும்புவதாகவும் […]