ஈரான் போர் குறித்து விரிவான பேச்சு இல்லை!
அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் ஜனாதிபதிகளுக்கிடையிலான சந்திப்பின்போது , உலகளாவிய எரிசக்தி நெருக்கடி குறித்து பேசப்பட்டுள்ளது என அறியமுடிகின்றது.
குறிப்பாக ஈரான் போர் தொடர்பில் பீஜிங் ஒரு ஆக்கபூர்வமான தீர்வை வலியுறுத்த வேண்டும் என அமெரிக்கா விரும்பினாலும், இது பற்றி விரிவாக கலந்துரையாடப்படவில்லை என தெரியவருகின்றது.
ஈரானை பேச்சுவார்த்தைக்கு அழைக்க சீனாவின் உதவியை அமெரிக்கா எதிர்பார்க்கின்றது. ஆனால் சீனா இதில் நேரடியாக தலையிடாமல் நடுநிலை வகித்துவருகின்றது.
ட்ரம்ப் சீனா வருவதற்கு முன்னர் ஈரான் வெளிவிவகார அமைச்சர் பீஜிங் சென்று இராஜதந்திர சந்திப்புகளை நடத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




